25/08/2026
மக்கள் பாதை மற்றும் சமூக அரசியல் பேரவை அமைப்பின் குமரி மாவட்ட முன்னாள் பொருளாளராக இருந்த கிள்ளியூரை சேர்ந்தவரும், தற்போது துபாயில் இருக்கும் திரு.ஜெயராஜ், கல்லுக்கூட்டம் பகுதியை சேர்ந்தவரும் மக்கள் பாதை அமைப்பின் முன்னாள் துணைப் பொருளாளராக இருந்த திரு.ஜெறின் தற்போது இவரும் துபாயில் இருக்கிறார். மற்றும் குலசேகரத்தை சேர்ந்த நிலமோசடி புரோக்கர் திரு. ரசல் ராஜ் ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
மனுவில், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய விசாரணை நடத்தி சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஜெயராஜ் மற்றும் ஜெறின் ஆகிய இருவரின் பாஸ்போர்ட்டை முடக்க வேண்டியும், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
மேலும், தேவையான ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களை காவல்துறையிடம் வழங்கப்பட உள்ளதாகவும், புகார் தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுக்கள் கொடுக்கப்பட்டு உள்ளன. தவெக அரசு நடவடிக்கை எடுக்கும் என உத்தரவாதம் அளித்துள்ளது.
ஆனாலும் கன்னியாகுமரி மக்கள் இவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.