16/04/2022
முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் தொடர் தாக்குதலை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக முத்துப்பேட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம்
~~~~~~~~~~~~~~~~~~~~~~
“ராம நவமி” ஊர்வலங்களின் பெயரால் கர்நாடகா, குஜராத், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், பீகார், கோவா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் அனைத்தும், ஒட்டுமொத்த இந்திய முஸ்லிம் சமூகத்தின் மீதான எதிர்ப்புக் கலவரங்களுக்கான இந்துத்துவா அமைப்புகளின் திட்டமிட்ட முயற்சியின் ஒரு பகுதியாகும்.
சமீபத்தில் ஹரித்வாரிலும், நாட்டின் பிற பகுதிகளிலும் சங்பரிவார் நிகழ்ச்சிகளில் முஸ்லிம் இனப்படுகொலைக்கான பகிரங்க அழைப்புகள் விடுக்கப்பட்டன. இதன் நீட்சிகளாகவே ராம நவமி கலவரங்களை பார்க்க வேண்டியுள்ளது.
சங்பரிவார்களின் செயல்திட்டங்களின் வாயிலாக முஸ்லிம்களின் உயிர்களின் மீதும், மஸ்ஜிதுகளின் மீதும், உடமைகளின் மீதும் நிகழ்த்தப்பட்டு வரும் தொடர் தாக்குதல்களை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்த முடிவு செய்தது.
அதன் பகுதியாக இன்று,
15/04/2022 வெள்ளிக்கிழமை மாலை 4:00 மணியளவில் திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்டச் செயலாளர் மர்சூக் அஹமது தலைமை தாங்கினார்.
SDPI கட்சியின் மாநில செயலாளர் அபுபக்கர் சித்திக், கேம்பஸ் ஃப்ரண்ட் மாநில பொருளாளர் சர்வத் ரஃபீக், முத்துப்பேட்டை அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பின் தலைவர் முஹம்மது அலீ ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.
அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பின் துணைத்தலைவர் ஷம்சுத்தீன், துணைச் செயலாளர் ஆரூரான் சாதிக், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜாவித், நகர தலைவர் தமீம் அன்சாரி, நகர செயற்குழு உறுப்பினர் நிஜாம் முஹம்மது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாலை 6:00 மணி வரை நடந்த ஆர்ப்பாட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட், SDPI கட்சி உள்ளிட்ட அமைப்புகளின் நிர்வாகிகள், பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் என பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் திரளாக கலந்து கொண்டு தங்களின் கண்டனங்களை பதிவு செய்தனர்.