11/09/2026
கூகூர் சங்க காலச் செங்கல் கட்டுமானம்
திருச்சி மாவட்டம், லால்குடி வட்டத்தில், கொள்ளிடம் ஆற்றின் வடகரையில் அமைந்துள்ள கூகூரில், நீர்வரத்து குறைந்ததன் காரணமாக மணலில் புதைந்திருந்த பழமையான செங்கல் கட்டுமானத்தின் சில பகுதிகள் வெளித்தோன்றியுள்ளன.
22.08.2026 மற்றும் 23.08.2026 ஆகிய தேதிகளில் Sonar Scanning, Scuba Diving மற்றும் Drone தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி விரிவான களஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
39–43 செ.மீ. நீளம், 20–22 செ.மீ. அகலம், 6–7 செ.மீ. தடிமன் கொண்ட செங்கற்களால் அமைந்துள்ள இக்கட்டுமானம் சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகவும், பூம்புகார் போல சங்க கால நீர் மேலாண்மை கட்டமைப்பாக இருந்திருக்கலாம் என்றும் உய்த்துணரப்படுகிறது.
#கூகூர் #சங்ககாலம் #தொல்லியல் #கொள்ளிடம்ஆறு #தமிழர்வரலாறு
[ கூகூர், சங்க காலம், செங்கல் கட்டுமானம், கொள்ளிடம் ஆறு, தொல்லியல், நீர் மேலாண்மை, களஆய்வு, Sonar Scanning, Scuba Diving, Drone தொழில்நுட்பம் ]
Chief Minister of Tamil Nadu