05/08/2026
🚨 பொதுமக்கள் கவனத்திற்கு – குன்றத்தூரில் நூதன திருட்டு! 🚨
குன்றத்தூரில் பிரபலமான ஒரு பல் மருத்துவமனையில் சமீபத்தில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம் இது.
நன்கு உடையணிந்து (Tip-Top Dress) வந்த ஒருவர், வரவேற்பறையில் இருந்த பெண்ணிடம் "டாக்டர் இல்லையா?" என்று கேட்டுள்ளார்.
அதற்கு, "டாக்டர் வர இன்னும் அரை மணி நேரம் ஆகும்" என்று கூறியுள்ளார்.
உடனே அந்த நபர், "என்னுடைய மருத்துவ ரிப்போர்ட் இருசக்கர வாகனத்தில் உள்ளது. என் மொபைல் Switch Off ஆகிவிட்டது. உங்கள் மொபைலை கொடுத்தால் ரிப்போர்ட்டை புகைப்படம் எடுத்து உடனே கொண்டு வந்து தருகிறேன்" என்று மிகவும் நம்பிக்கையுடன் பேசியுள்ளார்.
அவரது பேச்சை நம்பி வரவேற்பறை பெண் தனது மொபைலை கொடுத்துள்ளார்.
ஆனால், மொபைலை வாங்கிச் சென்ற அந்த நபர் மீண்டும் திரும்பவே இல்லை. மொபைலுடன் தப்பிச் சென்றுவிட்டார்.
பின்னர் மருத்துவமனை ஊழியர்கள் 66 பேருந்து நிலையம், 88 பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இதற்கிடையில், அதே மருத்துவருக்கு பம்மலில் உள்ள ஒரு கடையில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.
அந்த நபர், மருத்துவரின் Visiting Card-ஐ காட்டி, "நான் அந்த மருத்துவரின் ஆள்... ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும். உங்கள் மொபைலை கொடுங்கள்" என்றும், "நான் Reporter" என்றும் கூறி மற்றொரு மொபைலையும் வாங்கிச் சென்று திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றியுள்ளார்.
⚠️ எச்சரிக்கை!
இதே நபர் அல்லது இதுபோன்ற மோசடி கும்பல் உங்கள் கடை, அலுவலகம் அல்லது வீட்டிற்கும் வரலாம்.
அறிமுகமில்லாத நபர்களிடம் உங்கள் மொபைல், பணம் அல்லது பிற மதிப்புள்ள பொருட்களை எந்த காரணத்திற்காகவும் கொடுக்க வேண்டாம்.
✅ எச்சரிக்கையாக இருங்கள்.
✅ அருகிலுள்ளவர்களுக்கும் இந்த தகவலை பகிருங்கள்.
✅ சந்தேகத்திற்கிடமான நபர்களைக் கண்டால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவும்.
"திட்டம் போட்டு திருடும் கும்பல் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. நாம் விழிப்புடன் இருந்தால் மட்டுமே இதுபோன்ற திருட்டுகளைத் தடுக்க முடியும்."
இந்த விழிப்புணர்வு செய்தியை அனைவருக்கும் பகிருங்கள்.
மக்கள் நலம் கருதி – குன்றத்தூர் தாலுகா தகவல்கள்