Aalayam Kaappom - ஆலயம் காப்போம்

சனாதன தர்மத்தின் அடிப்படையிலான நமது கலாச்சார பாரம்பரியம் குறைந்தது 15,000 ஆண்டுகள் பழமையானது. நமது மகத்தான ரிஷிகளும், ஞானம் பெற்றமுனிவர்களும் மனித குலத்திற்குத் தெரிந்ததிலேயே மிக உயர்ந்த அறிவை நமக்கு விட்டுச் சென்றனர். நமது பெரிய மன்னர்கள் மற்றும் முன்னோர்கள் இந்த பாரம்பரியத்தை கற்களால், அற்புதமான கோவில்கள் மூலம் செதுக்கியுள்ளனர். எந்த பாகுபாடும் இல்லாமல் அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் கோயில் சா

ர்ந்த சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்கினார்கள். 700 ஆண்டுகளுக்கு முன் நமது புனித பூமியை ஆக்கிரமித்த முகலாயப் படைகள் நமது கோவில்களை அழித்து அதன் செல்வங்களை கொள்ளையடித்ததுடன் இஸ்லாத்தையும். சுதந்திரத்திற்கு 200 ஆண்டுகளுக்கு முன், பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் நமது கோவில் சார்ந்த சுற்றுச்சூழல் மற்றும் சமூகங்களை திட்டமிட்டு அழிக்க தொடங்கினர்.

சுதந்திரத்திற்குப் பிறகு, 1947 முதல், இந்திய வரலாற்றை கம்யூனிஸ்டுகள் மற்றும் போலி மதச்சார்பற்றவர்களால் மேலும் சிதைத்து தவறாக பயன்படுத்தினர். இப்போது, ​​மதச்சார்பின்மை என்ற குடையின் கீழ் இந்து கோவில்கள் மட்டுமே அரசாங்க கட்டுப்பாட்டுக்குள் நிர்வகிக்கும் நிலை ஏற்படுத்தப்பட்டு, பல்வேறு அரசியல் அரசியல் அமைப்புகளை சார்ந்த அரசியல்வாதிகள் மற்றும் நிர்வாகிகளால் சட்டப்பூர்வமாகக் கொள்ளையடிக்கப்படுவதற்கு வழிவகுக்கப்பட்டுள்ளது. அவர்கள் கொள்ளையடித்ததைத் தவிர, பெரும்பாலான கோயில்கள் பாழடைந்த நிலையில் உள்ளன. இந்த தனித்துவம் மற்றும் புகழ்பெற்ற பாரம்பரியத்தின் வாரிசுகளான நாம், நமது கோவில்களைக் காப்பாற்ற இப்போது ஒன்றுபட அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது.

ஆலயம் காப்போம் என்பது
ஆலயம் காப்போம் என்பது இந்து பக்தர் குழுக்களை ஒருங்கிணைக்கும் ஒரு கூட்டமைப்பு. நமது கோயில்கள், அவற்றின் பரம்பரை சொத்துக்கள், கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை காப்பதுடன், ஆகமம் ஒட்டி வழிபாடு மற்றும் கோயில் நிர்வாகம் செய்வதற்கான உரிமைகளை இந்துக்களுக்கு மீட்டுக்கொடுப்பதற்கான போராட்டத்தில் நாம் மொழி, ஜாதி மற்றும் அரசியல் பிரிவினைகளை தவிர்த்து, சேர்ந்து நிற்பதற்கான ஒரு வலுவான தளமாக ஆலயம் காப்போம் அமையும். ஆலயம் காப்போம் அமைப்பில் அதிக அளவிலான இந்துக்களை உறுப்பினராகச் சேர்ப்பதுடன், மற்ற இந்து பக்தர் குழுக்களையும் எங்களுடன் இணைத்து பணியாற்றுவதற்கு முயற்சி எடுப்போம்.

ஆலயம் காப்போம் மக்களுக்கு இந்து தர்மத்திலுள்ள நம்பிக்கையை வலுப்படுத்துவதன் மூலம், அவர்கள் மதமாற்றில் ஈடுபடும் தீய சக்திகளின் கவர்ந்திழுக்கும் வித்தைகளுக்கு வீழாமலிருக்க பாடுபடும். இதில் உடன் சேரும் குழுக்கள் தங்கள் சுய அடையாளத்துடன் உள்ளூர் சேவைகளை தொடர்ந்து செய்யலாம்.

கூடிய விரைவில் ஆலயம் காப்போம் உறுப்பினர்கள் நமது இந்த மாபெரும் குறிக்கோளை நிறைவேற்றுவது மற்றும் தங்களது ஊர் கோயில்களை சேவைகளில் ஈடுபடுவது தொடர்பான செய்திகள் வாட்ஸாப் மூலம் அனுப்பப்படும். மத்திய குழுவினர் இதற்கு உறுதுணையாக செயல்படுவர்.

நம் அரும்பெரும் பொக்கிஷங்களான ஆலயங்களை காத்திட, லிங்க் மூலம் விண்ணப்பத்தை நிரப்பி உறுப்பினராக வேண்டுகிறோம். :

ட்விட்டர்: https://twitter.com/AalayamKappom

06/07/2025

அழிக்கப்பட்ட மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மடை தொட்டி மற்றும் நீர் மேலாண்மை
Video link
https://youtu.be/VLhfqPLcwwc

வந்தே மாதர மென்போம் , வந்தே மாதர மென்போம் !!எங்கள் ஆலய தெய்வத்தை வணங்குது மென்போம்         (வந்தே)ஆயிர முண்டிங்கு கோயில்...
13/01/2025

வந்தே மாதர மென்போம் ,
வந்தே மாதர மென்போம் !!

எங்கள் ஆலய தெய்வத்தை
வணங்குது மென்போம் (வந்தே)

ஆயிர முண்டிங்கு கோயில்- அதில்
நாத்திகர் வந்து புகலென்ன நீதி ? -
சக்திசிவா விஷ்னு என்றோ,
இல்லை முருக கணபதி என்றோ
யாரை வணங்கினாலுமே அவர் இந்துகடவுளேயன்றோ (வந்தே)

அரசியல்சாசனத்திற் கெதிராய்
நாத்திக வந்தேறியோ ருக்கடிமை,
ஓட்டுக்கு விற்றுவிட்டானே...
உயிரினுமேலான நம்கடவுளோரை!!
இதுதான் சுதந்திரமா !!
சொல்லு கண்ணம்மா இதுதான் சுதந்திரமா (வந்தே)

ஒழிந்தது வெள்ளைய ராட்டம்! எனில்
பொங்கல் தீபாவளி கொண்டாட்டம்,
என்றேமாந்த மடயிந்துக்களுக்கோ கிட்டியது தின்டாடமோ தின்டாட்டம் (வந்தே)

ஜாதியா லுடையவும் வேண்டாம் – இனி
ஓசியால் அழியவும் வேண்டாம்
ஒன்றுபட்டாலுண்டு வாழ்வே – நம்மில்
ஒற்றுமை நீங்கிலனைவர்க்கும் தாழ்வே
நன்றிது தேர்ந்திடல் வேண்டும்- இந்த
ஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும்? (வந்தே)

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்
கோயில்சொத்திலுண்டு களிப்போறை
நிந்தனை செய்வோம்! நம் பண்டிகைக்கு
வாழ்த்துரைக்க தவறவேமாட்டோம் இனிதவறவேமாட்டோம் என்று கதரவைப்போம் (வந்தே)

விடியாஆடலுக்கு குத்திகுத்தி மாயமாட்டோம்
அறியாமையை போகியிலே கொளுத்தாமல் ஓயமாட்டோம், ஆடுவோமே பள்ளுபாடுவோமே! ஆனந்த பொங்கலிட்டு பொங்கலோ பொங்கலென்று பாடுவோமே (வந்தே)

அனைவருக்கும் ஆலயம் காப்போம்
சார்பாக
பொங்கல் வாழ்த்துக்கள்

அறநிலையத்துறை நிர்வாகத்தில் மாயமான 1,500 கோடி மதிப்பு நிலம்      Video link
23/11/2024

அறநிலையத்துறை நிர்வாகத்தில் மாயமான 1,500 கோடி மதிப்பு நிலம்
Video link

#அறநிலையத்துறை நிர்வாகத்தில் மாயமான ௫. 1,500 கோடி மதிப்பு நிலம் தமிழ்நாட்டில் ஆலயம் மற்றும்...

26/06/2024

அறிந்த #ஆலயமும் அறியாத தகவல்களும் - ஸ்ரீ தண்டீஸ்வரர் #கோயில் - திரு பொன் பொன்.மாணிக்கவேல் பாப்போம் வாருங்கள் | #சி.....

அறநிலையத்துறை மீதான நம் அமைப்பின் அடுத்த குற்றவியல் தொடர் நடவடிக்கை. Ex IG திரு பொன்மாணிக்கவேல் ஐயாவுடன் திருத்தணி சுப்ப...
31/05/2024

அறநிலையத்துறை மீதான நம் அமைப்பின் அடுத்த குற்றவியல் தொடர் நடவடிக்கை. Ex IG திரு பொன்மாணிக்கவேல் ஐயாவுடன் திருத்தணி சுப்பிரமணியஸ்வாமி கோயில் ரூ 6.14 லட்சம் நிதியை VIP காலை சிற்றுண்டி (18.09.17) செலவு கையாடல் செய்த குற்றத்தை காவல் நிலையத்தில் பதிவு செய்தோம்

https://www.youtube.com/live/cR8CRWUj2n0?si=Ltc3A9dbBdEHWbox

பக்தர்களின் வசதி திட்டமென்று *திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலின்* மதில் சுவரை ஒட்டி கண்மூடித்தனமாக தோண்டுதல் கடல...
16/05/2024

பக்தர்களின் வசதி திட்டமென்று *திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலின்* மதில் சுவரை ஒட்டி கண்மூடித்தனமாக தோண்டுதல் கடலுக்கு மிக அருகில் மணல் திட்டுகளில் கட்டப்பட்டுள்ள பழம்பெரும் கோயிலுக்கு ஆபத்து ஏற்படலாம். கோயில் மணல், பாறை, கடல் இவைகளின் சமநிலையில் அமைந்துள்ளது. இதைக் கருத்தில் கொள்ளாமல் ஜேசிபியை பயன்படுத்துகிறார்கள். கோயிலை ஒட்டி
இரு அடுக்கு வரிசை வளாகம், வள்ளி குகைக்கு வரிசை வளாகம், சேவார்த்திகள் கட்டிய தேவர் விடுதிகளை இடித்துவிட்டு, கடலோர விடுதிகளை கட்டுகிறார்கள். சுற்றுலா உத்தியாக, கோயிலை சுற்றுலாத் தலமாக எண்ணு ம் இவர்கள் கடல் ஸ்கூட்டர், பாராகிளைடிங், பட்டயா பாணியில் இங்கு கொண்டு வந்தாலும் ஆச்சரியம் இல்லை.
ஆலயம் காப்போம் அமைப்பில், நாங்கள் கட்டுமான ஒப்புதல் முறையின்மை, கடலோர ஒழுங்குமுறை ஆணைய விதி மீறல்கள், பழங்கால நினைவுச்சின்னத்தின் உள்ளே/அருகாமையில் கட்டுமானம் மேற்கொள்ளுதல் ஆகியவற்றுக்கு எதிராக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடுத்துள்ளோம், நம் வழக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டு, TN அரசு, HRCE, மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
தமிழக அரசு தங்கள் பலத்தை காட்டலாம்!
முறையற்றது இந்த கட்டுமாமென நிரூபிப்போம்!
*ஆலயம் காப்போம்! நம் கோயில்! நம் உரிமை!*

கோயில் சொத்து யாருக்கு சொந்தம்? | திராவிடமாடல் ஆட்சியில் காணாமல் போகும் கோயில் நிலங்கள்!!  Video link
22/03/2024

கோயில் சொத்து யாருக்கு சொந்தம்? | திராவிடமாடல் ஆட்சியில் காணாமல் போகும் கோயில் நிலங்கள்!!
Video link

கோயில் சொத்து யாருக்கு சொந்தம்? | திராவிடமாடல் ஆட்சியில் காணாமல் போகும் கோயில் நிலங்கள்!! பற்றி இந்த காணொளியில் ...

"சட்ட ரீதியான வெற்றி!"விருகை சுந்தர வரதராஜ பெருமாள்  கோயிலின் நிலம் என்று 1862 வருட இனாம் பதிவேட்டின் பதிவை 1998ல் வருவா...
16/03/2024

"சட்ட ரீதியான வெற்றி!"

விருகை சுந்தர வரதராஜ பெருமாள் கோயிலின் நிலம் என்று 1862 வருட இனாம் பதிவேட்டின் பதிவை 1998ல் வருவாய்த்துறை அரசு புறம்போக்கென மோசடி மாற்றம் - ஒப்புக்கு சப்பாணி அறநிலையத்துறையின் ஈனக்குரல் எதிர்ப்பு. நீண்ட கால போராட்டங்களுக்குப் பின் நம் ஆலயம் காப்போம் அமைப்பு வழக்கு தொடர்ந்து கோயில் மேலேயே கட்ட இருந்த CMRL ரயில் பாதையை மாற்ற வைத்தது. மேலும் தொடரப்பட்ட WP33554 வழக்கில், பல வருடங்களுக்கு பின் கோயில் நிர்வாகம் ஆட்சேபணம் தெரிவித்தது செல்லாது என்ற வருவாய் துறையின் முறையற்ற வாதத்தை அதிரடியாக நிராகரித்து காலக்கெடு சட்டம் கோயிலில் உறையும் தெய்வத்துக்கு செல்லாது என்றும் இரு மாதத்தில் தீர விசாரித்து பட்டா அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார் கனம் நீதிபதி. குறிவைத்து
கோயில் நிலங்களை கபளீகரம் செய்யும் அரசு எந்திரத்துக்கு சம்மட்டி அடி. இதை வலுவாக எதிர்த்து வழக்குப்பதியாமல் மக்களையே போராட வைக்கும் அறநிலையத்துறை. மொத்தத்தில் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு.
"ஆலயம் காப்போம்!"

நம் கோயில்! நம் உரிமை!

12/03/2024

*Innambur Ezhutharinathar Temple pradosha Pooja on 8.3.24 with village devotees participation Our humble assistance to pradosh Pujas is by way of Nadhaswara music arrangement. இன்னாம்பூர் எழுத்தறி நாதர் கோயிலில் 8.3.24 அன்று நடந்த பிரதோஷ பூஜையில் ஊர் பக்தர்கள் திரளாக பங்கு கொண்டார்கள். ஒவ்வொரு பிரதோஷ பூஜைக்கும் மங்கள வாத்தியம் ஏற்பாடு நமது சிறிய பங்களிப்பு. ஆலயம் காப்போம்!* *நம் கோயில்!* *நம் உரிமை!*

09/03/2024

Melodious nadhaswaram music kindles divine vibrations in *Thirumagal Ratnagiriswarar Temple*.
We enable such music in faroff temples.
*திருமருகல் ரத்தினகிரீஸ்வரர் கோயிலில்* தெய்வீக அதிர்வலைகளை தூண்டும் இனிய நாதஸ்வர இசை.
இதுபோன்ற கிராமப்புற கோயில் களில் தொடரும் நம் மங்கள வாத்திய சேவை. *ஆலயம் காப்போம்! நம் கோயில்! நம் உரிமை!*

*ஆலயம் காப்போம்* சார்பாக *மஹா சிவராத்திரியை* முன்னிட்டு *நவ சிவாலய* தரிசன யாத்திரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  _"அனைவரும...
03/03/2024

*ஆலயம் காப்போம்* சார்பாக *மஹா சிவராத்திரியை* முன்னிட்டு *நவ சிவாலய* தரிசன யாத்திரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

_"அனைவரும் வாருங்கள்! அவனருள் பெறுங்கள்!"_

*நம் கோயில்! நம் உரிமை!*

பிரதோஷ பூஜை என்றாலே ஊர் மக்கள் திரண்டு வந்து பக்தியில்  திளைக்கும் விசேஷ வழிபாடு - வேளுக்குடி ருத்ர கோடீஸ்வரர் கோயிலில் ...
23/02/2024

பிரதோஷ பூஜை என்றாலே ஊர் மக்கள் திரண்டு வந்து பக்தியில் திளைக்கும் விசேஷ வழிபாடு - வேளுக்குடி ருத்ர கோடீஸ்வரர் கோயிலில் 21 பிப் 24 அன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது - அவனின்றி ஓரணுவும் அசையாது.
"ஆலயம் காப்போம்! நம் கோயில்! நம் உரிமை!"

Address

Nagarathinam Colony
Chennai
600004

Alerts

Be the first to know and let us send you an email when Aalayam Kaappom - ஆலயம் காப்போம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Aalayam Kaappom - ஆலயம் காப்போம்:

Share

Category