ஐனநாயக நாட்டில் மக்களே முதன்மையானவர்கள், அவர்களுக்காகத்தான் அரசும், சட்டமும்.
அவர்களால் தான் அரசும், சட்டமும். கடந்த ஐம்பது ஆண்டுகால அரசியல் மற்றும் தற்போது தமிழத்தில் அரங்கேறிக்கொண்டு இருக்கும் அரசியல் அவலங்களை கண்டு தன் உரிமைகளை மீட்க்க வீருகொண்டு எழுந்து வீதிக்கு போராட வந்த இளைஞர்களின் எழுச்சி சிந்தனையில் விளைந்தது தான் இந்த தமிழக மக்கள் கழகம் எனும் மக்களுக்கான கட்சி, இந்த கட்சி தமிழக கலாச்சாரமான ஜல்லிக்கட்டு மீட்ப்புக்காக போராடிய எழுச்சிமிகு மக்கள் நலன் சார்ந்த கொள்கைகள் மற்றும் ஜனநாயக ரீதியான ஒரு நல்ல அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த வந்த லட்சக்கணக்கான இளைஞர்களில், சிலரால் உருவாக்கப்பட்ட என் தேசம் ௭ன் உரிமை கட்சியிலிருந்து பின் வரும் காரணங்களுக்காக (கட்சிக்குல் ஜனநாயமின்மை, மக்கள் பணியிலிருந்து வுளகி விளம்ரம் தேடுதல், மக்களை வெறும் வாக்காக மட்டும் பார்க்கும் எண்ணம், கொண்ட கொள்கைகளில் இருந்து விலகும் செயல்பாடுகள், சரியான கட்டமைப்பின்மை) என இன்னும் சில காரணங்களால், கொண்ட கொள்கைகளில் உறுதியோடு இருக்கும் சகோதர சகோதரிகள் அங்கிருந்து வந்து ஆரம்பித்த கட்சி தான் நமது தமிழக மக்கள் கழகம், தமிழகத்தில் உள்ள கட்சிகளுக்கு தனித்தனியே கட்சி சார்ந்த தொண்டர்கள் இருப்பார்கள், ஆனால் ஒட்டுமொத்த தமிழகத்திற்கே தொண்டனாய் இருந்து தொண்டாற்றவிறுக்கும் கட்சி தான் நம்முடைய தமிழக மக்கள் கழகம்,
தமிழக மக்கள் கழகமானது முற்றிலும் மக்களுக்கான நலன்களை காக்கவும் மற்றும் நமது உரிமைகளை மீட்டெடுக்க பாடுபடும் கட்சியாக விளங்கும்.....