VCK it WING

VCK it WING "Liberation of caste" is the 'Freedom of the people"

02/06/2026
 #தகவல்பலகை | ஐஐடி மெட்ராஸில் JEE நுழைவுத் தேர்வு இல்லாத BS பட்டப்படிப்பை மேற்கொள்ள ஓர் அரிய வாய்ப்பு!    |   |
02/06/2026

#தகவல்பலகை | ஐஐடி மெட்ராஸில் JEE நுழைவுத் தேர்வு இல்லாத BS பட்டப்படிப்பை மேற்கொள்ள ஓர் அரிய வாய்ப்பு!
| |

02/06/2026

"ஆணவப் படுகொலை - தனி சட்டம்"

"ஆணவப் படுகொலை - தனி சட்டம் கொண்டு வர நடவடிக்கை, தனி சட்டத்தை வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கொண்டு வர நடவடிக்கை.

சாதி ரீதியான பிரச்சினைகளுக்கு தனியாக காவல்துறை பிரிவு அமைக்க நடவடிக்கை"

-சமூக நீதித்துறை அமைச்சர் வன்னிஅரசு

2026 ஆம் ஆண்டுக்கான விசிக விருதுகள் :---------------------------------------------மனோன்மணியம் சுந்தரனார்  பல்கலைக்கழகத்த...
02/06/2026

2026 ஆம் ஆண்டுக்கான விசிக விருதுகள் :
---------------------------------------------
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் சொக்கலிங்கம் அவர்களுக்கு அம்பேத்கர் சுடர் விருது!
சமூக செயற்பாட்டாளர், மனித உரிமைப் போராளி வழ . ஹென்றி டிஃபேன் அவர்களுக்கு 'பெரியார் ஒளி ' விருது!
ஐயா வைகுண்டர் வழியில் சமயச் சீர்திருத்தப் பணியாற்றிவரும் ஐயா பால பிரஜாபதி அடிகளார் அவர்களுக்கு 'காமராசர் கதிர்’ விருது!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிவிப்பு!
-------------------------------------------
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழகம் மற்றும் இந்திய அளவில் ஆண்டுதோறும் பல்வேறு தளங்களில் சாதனைகள் படைத்த சான்றோருக்கு விருதுகள் வழங்கிச் சிறப்பித்து வருகிறோம்.
சமூகம், அரசியல், பண்பாடு, கலை-இலக்கியம் போன்ற தளங்களில் சீரிய முறையில் தொண்டாற்றும் சிறப்புமிக்க தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு ஆளுமை வாய்ந்த சான்றோருக்கு "அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, காமராசர் கதிர், அயோத்திதாசர் ஆதவன், காயிதேமில்லத் பிறை மற்றும் செம்மொழி ஞாயிறு " ஆகிய விருதுகளை 2007 முதல் ஆண்டுதோறும் வழங்கிச் சிறப்பித்து வருகிறோம்.
2022 ஆம் ஆண்டு முதல் கூடுதலாக ‘மார்க்ஸ் மாமணி’ விருதும் வழங்கி வருகிறோம் என்பதைப் பெருமகிழ்வுடன் தெரிவித்துக்கொகிறோம்.
முத்தமிழறிஞர் முனைவர் கலைஞர், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், கர்நாடக முதலமைச்சர் சித்தாராமையா, தமிழர்தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, எழுத்தாளர் அருந்ததி ராய், தோழர் து.ராஜா, இலக்கியச் செல்வர் குமரிஅனந்தன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, பாவலரேறு பெருஞ்சித்திரனார், உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன், சொல்லின் செல்வர் ஆ.சக்திதாசன், பாவலர் வை.பாலசுந்தரம், பேராசிரியர் காதர்மொய்தீன், பேராசிரியர் ஜவாஹிருல்லா, ஏ.எஸ்.பொன்னம்மாள், கிருஷ்ணம்மாள்ஜெகந்நாதன் உள்ளிட்ட சான்றோர் பலருக்கு இதுவரை விசிக-விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
அந்தவரிசையில் 2026 ஆம் ஆண்டுக்கான விசிக-விருதுகள் பெறும் சான்றோரின் பட்டியலை வெளியிடுவதில் பெருமைப்படுகிறோம்.
இந்த ஆண்டுக்கான "அம்பேத்கர் சுடர்" விருதினை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் கே.சொக்கலிங்கம் அவர்களுக்கும்,
"பெரியார் ஒளி" விருதினை சமூக செயற்பாட்டாளரும் தலித் மக்களின் உரிமைகளுக்காக சமரசமில்லாமல் போராடி வருபவருமான திரு. ரூத் மனோரமா அவர்களுக்கும்,
‘காமராசர் கதிர்’ விருது
ஐயா வைகுண்டர் வழியில் சமயச் சீர்திருத்தப் பணியாற்றிவரும் ஐயா பால .பிரஜாபதி அடிகளார் அவர்களுக்கும் வழங்குவதில் பெருமைப்படுகிறோம்.
2026-ஆண்டுக்கான விசிக-விருதுகள் பெறும்
சான்றோர் பட்டியல் பின்வருமாறு:
------------------------------------
அம்பேத்கர் சுடர் -
முனைவர் திரு. கே.சொக்கலிங்கம்,
மேனாள் துணைவேந்தர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்
பெரியார் ஒளி-
வழ. ஹென்றி டிஃபேன்
மனித உரிமைப் போராளி.
மார்க்ஸ் மாமணி-
திரு. மு. வீரபாண்டியன்,
மாநிலச் செயலாளர்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.
காமராசர் கதிர் -
ஐயா பால.பிரஜாபதி அடிகளார்
சாமித் தோப்பு .
அயோத்திதாசர் ஆதவன்-
திருமதி. ரூத்மனோரமா
சமூக செயற்பாட்டாளர் .
காயிதேமில்லத் பிறை-
முகமது முனீர்
மாநில து.தலைவர், ஐஎன்டிஜே
செம்மொழி ஞாயிறு -
பொ. வேல்சாமி
தமிழறிஞர், நாமக்கல்.
விசிக விருதுகள் வழங்கும் விழா சென்னை-தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில்
ஜூலை 05,2026 அன்று நடைபெறும்.
இவண்:
தொல்.திருமாவளவன்,
நிறுவனர்- தலைவர், விசிக.

Address

Ambedkar Thidal, VCK Head Office 2nd Avenue Ashok Nagar Chennai
Chennai
600083

Alerts

Be the first to know and let us send you an email when VCK it WING posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to VCK it WING:

Share