22/08/2025
இந்துத்துவா கும்பலால் கொல்லப்பட்ட சுலைமான் குடும்பத்தினருக்கு தலைவர்கள் ஆறுதல்; பாஜக கூட்டணி ஆளும் மகாராஷ்டிராவின் ஜல்காவ் மாவட்டத்தில் இந்துத்துவா கும்பல் அரங்கேற்றிய தாக்குதலில் 21 வயதுமிக்க இளைஞன் சுலைமான் கான் பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில், மகாராஷ்டிரா தலைவர்கள் குழு சுலைமான் கானின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக கடும் நடவடிக்கை மற்றும் நிவாரணம் வழங்கக் கோரி ஜல்காவ் மாவட்ட நிர்வாகத்திடம் மனு சமர்ப்பித்தனர்.