28/07/2026
சென்னையில் அமைந்துள்ள கட்சியின் மாநிலத் தலைமையகத்தின் தரைத்தளத்தில், இன்று காலை 11 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தரைத்தளத்தில் பெயிண்டிங் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நேரிட்டது. இந்த விபத்தில் தரைத்தளம் முற்றிலும் எரிந்து சேதமாகிவிட்டது.
அலுவலக ஊழியர்கள் உடனடியாகத் தீயை அணைக்க முயற்சி செய்தும் இயலாததால், தீயணைப்புத் துறைக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தரைத்தளம் வழியாகக் கீழே இறங்க முடியாத சூழல் ஏற்பட்டதால், தலைமையக ஊழியர்களும் பாதுகாப்பாக கட்டிடத்தின் மொட்டை மாடிக்குச் சென்றார்கள்
தகவலறிந்து விரைந்து வந்த வடசென்னை மண்டலத் தலைவர் #முஹம்மதுரஷீத், மத்திய சென்னை மாவட்டத் தலைவர் #இஸ்மாயில், வடசென்னை வடக்கு மாவட்டத் தலைவர் #பூட்டோமைதீன் மற்றும் #எஸ்டிபிஐ செயல்வீரர்கள், தீயணைப்புத் துறையினருடன் இணைந்து தீயைக் கட்டுக்குள் கொண்டுவர தீவிரமாகப் பணியாற்றினர்.
கட்டிடத்தின் தரைத்தளம் முற்றிலும் எரிந்து விட்ட நிலையில், இறைவனின் பெரும் கிருபையாலும், தீயணைப்புத் துறையினரின் விரைவான மீட்பு நடவடிக்கையினாலும் அனைவரும் எந்தவிதக் காயமுமின்றிப் பத்திரமாக மீட்கப்பட்டோம். பெரும் அசம்பாவிதம் ஏதுமின்றி அனைவரும் நலமாக உள்ளோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
A ஷேக் அலாவுதீன்
தென் சென்னை வடக்கு மாவட்டம் தலைவர்,
IT WING கட்சி தமிழ்நாடு.