Shiv Sena Chengalpattu District

Shiv Sena Chengalpattu District SHIV SENA 'Army of Shivaji) is political party in India founded in 1966 by Bal Thackeray

Vote for
30/03/2024

Vote for

16/03/2024
27-02-2024 கமிட்டி கூட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது, மாநில பொதுச் செயலாளர் Dr.அமுதரசன் மற்றும் மாநில செயலாளர் திரு.ஆனந்த் ...
28/02/2024

27-02-2024 கமிட்டி கூட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது, மாநில பொதுச் செயலாளர் Dr.அமுதரசன் மற்றும் மாநில செயலாளர் திரு.ஆனந்த் ராவ் ஆகியோர் முன்நிலையில் கட்சியில் புதிய உறுப்பினர்கள் இணைந்துள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொல்கிறேன்

28/02/2024

மீண்டும் இந்திய சந்தைக்கு திரும்பும் Ford

28/02/2024

2035க்குள் இந்தியர்கள் நிலவில் கால் பதிக்கவுள்ளனர் - மோடி

♦நாளை 14.02.2024-ம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெறவுள்ள காதலர் தின கொண்டாட்டம் என்ற பெயரில் பொது இடங்களில் ஆபாசமாக மக்கள்...
13/02/2024

♦நாளை 14.02.2024-ம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெறவுள்ள காதலர் தின கொண்டாட்டம் என்ற பெயரில் பொது இடங்களில் ஆபாசமாக மக்கள் அருவருக்கும் நிலையில் நடைபெறும் ஆபாச காதலர் தினத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என சிவசேனா கட்சி சார்பாக கோரிக்கை...

♦ஐரோப்பிய நாட்டு பகுதியில் உள்ள வாலண்டைன் என்ற கிறிஸ்தவ பாதிரியார் வாலண்டைன் இறந்த நாளை பிப்ரவரி 14-ம் தேதியை அந்த நாட்டில் உள்ள ஒரு சிறுபிரிவினர் காதலர் தினமாக (Valentine Day) கொண்டாடி கொஞ்சம் கொஞ்சமாக உலகம் முழுவதும் ஒருசில நாடுகளில் பிப்ரவரி 14-ம் தேதியை காதலர் தினமாக கொண்டாடி வருகிறார்கள்.
பண்பாட்டிலும், கலாச்சாரத்திலும், கற்பு நெறியிலும் உயர்ந்துள்ள பாரதநாட்டிலும், கற்புக்கரசி கண்ணகி பிறந்த தமிழ்நாட்டிலும் சமீபகாலமாக பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினமாக ஒரு சிலரால் கொண்டாடப்படுகிறது.

♦ இறந்த நாளை காதலர் தினமாக கொண்டாடுவது நம் நாட்டின் பண்பாட்டுக் கொள்கைகளுக்கு முரணானது.
இந்துக்களும்,இந்து மதமும், சிவசேனா கட்சியும் காதலுக்கு ஒரு போதும் எதிரானவர்கள் அல்ல.இந்து மதத்தின் காதலின் சிறப்பை பல வழிகளில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது...

♦உலக பொது மறையான திருக்குறளை உலகுக்கு கொடுத்த வள்ளுவப் பெருந்தகை தனது குறலில் "இன்பத்துப்பால்" என்ற ஒரு பகுதியில் உண்மைக்காதலின் மகத்துவத்தை இல்லறத்தின் தூய்மையை விளக்கியுள்ளார்.
நமது புராணங்கள்,இதிகாசங்கள், தமிழர்களின் வாழ்கை வரலாற்றை, இல்லறவாழ்வை அற்புதமாக எடுத்துரைக்கும் அகநானூறு போன்ற பலகாப்பியங்களில் காதலின் மகத்துவத்தை தெளிவாக எடுத்துரைக்கின்றன....

♦இதிலெல்லாம்,விரசமோ, வக்கிரமோ,பண்பாட்டுக்கு எதிரான துவேஷமோ,அருவருக்கும் ஆபாசமோ,குடும்ப அமைப்பு முறையை சிதைக்கின்ற சீரழிவுகளோ சொல்லப்படவில்லை. மாறாக அன்பின் அடையாளமாகத்தான் காதலை காப்பியமாக படைத்திருக்கிறார்கள் நமது முன்னோர்கள்.
நமது நாட்டின் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் சீரழிக்காத கொண்டாட்டங்களையோ, மேல்நாட்டின் வாழ்க்கை முறை, பழக்க வழக்கங்களையோ நாம் ஏற்றுக் கொள்ள தயங்கியதில்லை...

♦நமது தேசத்தின் ஆன்மாவான ஒருவனுக்கு ஒருத்தி என்ற பண்பாட்டையும்,கலாச்சாரத்தையும், தாய்,தந்தை,உறவுகள்,கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறை,கற்பு நெறி போன்றவற்றை திட்டமிட்டு சீர்குலைக்கும் நோக்கத்தோடு பன்னாட்டு வியாபார,வணிக நிறுவனங்கள்,கிறிஸ்தவர்களின், மிஷினரிகள்,பணத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படும் மீடியாக்களால், பரப்பப்படுகிற தேச விரோத பண்பாட்டு சீரழிவு செயலை சிவசேனா கட்சி வன்மையாக கண்டிக்கிறது...

♦உண்மைக்காதலை போற்றுகிறோம், கலப்புத்திருமணத்தை ஆதரிக்கிறோம்.ஆனால் ஆபாசமாக பண்பாடுச் சீரழிவை ஏற்படுத்தி, குடும்ப அமைப்பு முறையை பாழ்படுத்தும் ஆபாச காதலர் தினக்கொண்டாட்டத்தை எதிர்க்கிறோம்.
காதலர் தினம் என்ற பெயரில் பிப்ரவரி 14-ம் தேதி தமிழ்நாட்டில் உள்ள பூங்காக்களில், சுற்றுலாத்தலங்களில்,புனிதமாக கருதப்படும் கோவில்களில் அருவருக்கும் நிலையில் காம வெறியோடு செயல்படும் காமக்களியாட்டங்களுக்கு தடை விதித்து தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்...

♦பொதுமக்களுக்கும்,பொது அமைதிக்கும் குந்தகம் ஏற்படுத்தும் வகையில் செயல்படுகின்ற ஆபாச காதலர் தின கொண்டாட்டத்திற்கு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் தடைவிதிக்க வேண்டும் என சிவசேனா கட்சியின் சார்பாக கோரிக்கை வைக்கின்றோம் !

♦என்றும் தேச தெய்வீகப் பணியில்...
சிவசேனா தமிழ்நாடு

Address

Chengalpattu

Alerts

Be the first to know and let us send you an email when Shiv Sena Chengalpattu District posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share