Virpanai Pirathinithigal Chamber - விற்பனை பிரதிநிதிகள் சேம்பர்

  • Home
  • India
  • Chengalpattu
  • Virpanai Pirathinithigal Chamber - விற்பனை பிரதிநிதிகள் சேம்பர்

Virpanai Pirathinithigal Chamber - விற்பனை பிரதிநிதிகள் சேம்பர் Virpanai Pirathinithigal Chamber

08/01/2024

*கோத்ரேஜ் நிறுவனம் தனது சோப் தயாரிக்கும் ஆலையை செங்கல்பட்டில் நிறுவி உள்ளது அதிலும் 50% பெண்களுக்கும் 5% மூன்றாம் பாலினத்தினருக்கும் வேலை வாய்ப்பு அளிக்கப்படும் என்று கோத்ரேஜ் நிறுவனத்தின் தலைவர் நிஷபா அவர்கள் தெரிவித்துள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது*

*அருமையான முடிவு இதன் மூலம் மூன்றாம் பாலினத்தவரின் தவறான அடையாளம் மாற்றப்படும் தாங்களுக்கு என்று சமூகத்தில் சம உரிமை கிடைக்கும் போது அவர்கள் வயிற்றுக்கென வீதிகளில் வாழ அவசியமில்லை*

*கோத்ரஜ் நிறுவனத்திற்கு என் வாழ்த்துக்கள் இதே போல் இனி வரும் காலத்தில் ஒவ்வொன்றாக மாற்றப்படும் என்ற நம்பிக்கைக்கு வித்திட்டுள்ளீர்கள்*

*இதேபோல் இன்னும் பிற பிரசித்தி பெற்ற வணிக நிறுவனங்களும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது என் சிரம் தாழ்த்திய கோரிக்கை*

*கோத்ரேஜ் நிறுவனத்தின் தலைவர் நிஷபா அவர்களுக்கு தமிழ்நாடு விற்பனை பிரதிநிதிகள் நல்வாழ்வு நல சங்கத்தின் மாநில மாவட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் சார்பிலும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்*

*V. கமல் ராஜ்*

*Cell 9788886988*

*WhatsApp 6381143665*

*மாநில தலைவர்*

*தமிழ்நாடு விற்பனை பிரதிநிதிகள் நல்வாழ்வு நல சங்கம் (தொழிலாளர் சங்கம்)*

20/09/2022

*அனைவருக்கும் வணக்கம் நான் உங்கள் V.கமல்ராஜ் முழுவதுமாக படித்து பிடித்து இருந்தால் அனைவருக்கும் பகிரவும்*

*தமிழ்நாடு விற்பனை பிரதிநிதிகள் நல் வாழ்வு நல சங்கம் (தொழிற்சங்கம்)*

*Registered By: Government Of Tamilnadu Trade Union Act 1926*

*தமிழ்நாடு விற்பனை பிரதிநிதிகள் நல் வாழ்வு நல சங்கம் முக்கியமான நோக்கங்கள்*

*1. விற்பனை பிரதிநிதிகளின் துறை சார்ந்தும் குடும்ப நலம் சார்ந்தும் செயல்படுவது*

*2. குறைந்தபட்ச சம்பளம் நிர்ணயிக்க அனைத்து நிறுவனங்களுக்கும் வலியுறுத்துவது.*

*3. அனைத்து உறுப்பினர்களுக்கும் பணி நிரந்தரம் மற்றும் பணி பாதுகாப்பு சம்பளம் பயணப்படி மற்றும் தினப்படி சரிவர வருவதை கண்காணிப்பது*

*4. வேலை இல்லாமல் இருக்கும் உறுப்பினர்களுக்கு உடனடியாக வேலை வாய்ப்பை உருவாக்க நம் சங்கத்தில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவது*

*5.மூன்று மாதத்திற்கு ஒரு முறை விற்பனைப் பிரதிநிதிகளுக்கு நம் துறை சார்ந்த தொழில் பயிற்சி அளிப்பது*

*6.விற்பனைப் பிரதிநிதிகளுக்கு என்று தனி நலவாரியம் அமைக்க அரசாங்கத்திடம் கொடுத்த கோரிக்கையை வலியுறுத்தி வேகமாக தனி நல வாரியம் அமைப்பது*

*7. வணிகத்துறையில் விற்பனைப் பிரதிநிதிகளுக்கு என்று ஒரு அங்கீகாரமும் மதிப்பும் கிடைக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவது*

*8. விற்பனைத் துறையில் உள்ள நண்பர்கள் யாராவது மரணம் அடைந்தாலோ அல்லது விபத்தினால் மற்றும் நோயினால் பாதிக்கப்பட்டாலோ சங்கத்தின் மூலம் உதவுவது மற்றும் அவர் பணிபுரிந்த நிறுவனத்தில் இருந்து இழப்பீடு பெற்றுத் தருவது அக்குடும்பத்தில் வேறு வருமானம் இல்லாதபட்சத்தில் அவர் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வாய்ப்பு அரசாங்கத்திடமும் அல்லது அந்த நிறுவனத்தில் பேசி ஏற்படுத்திக் கொடுப்பது*

*9. மாவட்ட வாரியாக தனித்தனியாக நிர்வாகிகளை அமைத்து விற்பனைப் பிரதிநிதிகள் அனைவரையும் ஒன்றிணைப்பது.*

*10. தமிழக அளவில் விற்பனை பிரதிநிதிகளை ஒன்றிணைத்து சங்கத்தை வலுப்படுத்துவது*

*11. விற்பனை பிரதிநிதிகள் பணிபுரியும் நிறுவனங்களுக்கும் விற்பனை பிரதிநிதிகளுக்கும் நல்ல உறவை ஏற்படுத்திக் கொடுத்து விற்பனையை மேம்படுத்துவது மற்றும் நிறுவனங்களை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வது*

*12.நம் சங்கத்தின் விற்பனைப் பிரதிநிதிகள் தவறு செய்திருக்கும் பட்சத்தில் நிறுவனம் பாதித்திருந்தால் அந்நிறுவனத்தின் பொருட்களை நம் சங்க உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து விற்பனை செய்து கொடுத்து நிறுவனத்திற்கு எந்தவித நஷ்டமும் இல்லாமல் மீண்டும் அவர்களை வியாபாரம் செய்ய உறுதுணையாக இருப்பது (இதற்கு சங்கத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் ஒத்துழைப்பு தரவேண்டும்)*

*13.சம்பள பிரச்சனை மற்றும் வேறு ஏதாவது பிரச்சினைகள் ஒரு நிறுவனத்தில் இருந்தால் எக்காரணத்தைக் கொண்டும் நிறுவனத்தின் பெயரை பொதுத்தளத்தில் பதிவிட்டு அவர்கள் நிறுவனத்தின் பெயரை தவறாக சித்தரிக்காமல் இருப்பது.*

*அந்நிறுவனத்தை பற்றி சங்கத்தில் புகார் அளிக்க வேண்டும்*

*14.விற்பனைப் பிரதிநிதிகளுக்கு சம்பளம் வராத பட்சத்தில் அந்நிறுவனத்தின் மேலாளர்கள் அல்லது நிறுவன உரிமையாளரிடம் பேசி பிரச்சினையை தீர்ப்பதற்கும் அப்படியும் பிரச்சனை முடியவில்லை என்றால் சட்ட நடவடிக்கைகள் மூலம் தீர்வு காணவும்*

*15. நம் விற்பனைப் பிரதிநிதிகள் வாங்கும் சம்பளத்தில் குறைந்தது பத்து மடங்கு தொகையை விற்பனையாக தரவேண்டும் உதாரணத்திற்கு ஒருவர் 10,000 சம்பளம் வாங்குவதாக இருந்தால் அந்நிறுவனத்திற்கு குறைந்தது 1,00,000 வியாபாரம் செய்து கொடுத்து இருக்க வேண்டும் இதற்கு குறைவாக இருந்தால் உங்களுக்கு எந்த வகையிலும் சங்கம் உதவி செய்யாது (உங்களுக்காக பணிவுடன் அந்நிறுவனத்தில் பேசி எந்த தொகை முடியுமோ அந்த தொகையை மட்டுமே பெற்றுத் தரமுடியும்)*

*16. நமது சங்கம் எந்த சூழ்நிலையிலும் ஒரு தலை பட்சமாக கண்டிப்பாக நடக்காது நம் விற்பனைப் பிரதிநிதிகள் மேல் தவறு இருந்தால் சங்கம் மூலம் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.*

*17. நமது சங்கம் எந்த சூழ்நிலையிலும் நிறுவனங்களுக்கோ விநியோகஸ்தர்களுக்கு எதிராக செயல்படாமல் விற்பனைப் பிரதிநிதிகளுக்கு எதிர்தரப்பால் பாதிப்பு ஏற்பட்டால் மட்டுமே சம்பந்தப்பட்ட நபர்களிடம் பேசி பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க அனைத்து முயற்சிகளும் செய்யும் அவ்வழியில் பிரச்சனை முடியவில்லை என்றால் சட்ட நடவடிக்கைகள் மூலம் பிரச்சனையை தீர்க்கும்*

*18. நம் சங்கத்தின் வாட்ஸ் அப் குழுக்களில் அல்லது சமூக வலைத்தளங்களில் ஒரு நிறுவனத்தை பற்றி அல்லது விற்பனைப் பிரதிநிதிகளைப் பற்றி யாராவது தவறாக சித்தரித்தால் சங்கம் தானாகவே முன் வந்து அவர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கும் நிறுவனத்தின் மீதோ அல்லது விற்பனைப் பிரதிநிதிகள் மீதோ புகார் இருந்தால் நமது சங்கத்தில் அவர்கள் புகார் அளித்தால் அப்பிரச்சினை பேச்சுவார்த்தை மூலமோ அல்லது சட்ட நடவடிக்கை மூலமோ தீர்த்து வைக்கப்படும்*

*18. எந்த மேலதிகாரி யாவது அவர்களுடைய முன்னால் விற்பனை பிரதிநிதிகளை அவர்கள் பணிபுரியும் நிறுவனத்தில் இணைக்க நிறுவனத்தில் பணிபுரியும் பழைய விற்பனை பிரதிநிதிகளை காரணமில்லாமல் வேலையை விட்டு எடுத்தால் சங்கம் தானாக முன்வந்து அவர்கள் மேல் சட்ட நடவடிக்கைகள் எடுக்கும்*

*19. விற்பனைப் பிரதிநிதிகள் அனைவரையும் ஒன்றிணைத்து விற்பனைப் பிரதிநிதிகள் துறையை மேம்படுத்தவும் மற்றும் நிறுவனங்கள் விநியோகஸ்தர்கள் வியாபாரத்தை மேம்படுத்தவும் சங்கம் அனைத்து முயற்சிகளும் செய்யும்*

*20.மாவட்டம் வாரியாக ஒவ்வொரு மாதமும் கலந்தாய்வு கூட்டம் நடத்தி விற்பனைப் பிரதிநிதிகளுக்கு பயிற்சியும் ஊக்கமும் அளிக்கப்படும்*

*21.மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மாநில அளவில் கலந்தாய்வு கூட்டம் நடத்தி சங்கத்தை வலுப்படுத்த அனைத்து முயற்சிகளும் செய்யப்படும்*

*22. விருப்பப்படும் அனைத்து உறுப்பினர்களுக்கும் குழுவாக விபத்து காப்பீடு மற்றும் மருத்துவ காப்பீடு ஏற்படுத்தி தரப்படும்*

*23. பல நிறுவனங்கள் நம் விற்பனைப் பிரதிநிதிகளின் சம்பளத்தில் PF. மற்றும் ESI பிடித்தம் செய்து அரசாங்க சட்டம் உள்ளதுபோல் அரசாங்கத்திற்கு செலுத்துவதில்லை அதை கண்டிப்பாக வழிமுறை படுத்த அனைத்து நடவடிக்கை ஏற்படுத்தப்படும்*

*24. எந்த நிறுவனத்தில் வேலைக்கு செல்வதாக இருந்தாலும் கண்டிப்பாக அப்பாயின்ட்மெண்ட் ஆர்டர் அல்லது ஆஃபர் லெட்டர் இல்லாமல் வேலைக்கு சேர்ந்தால் அந்நிறுவனத்தில் உங்களுக்கு ஏற்படும் எந்தப் பிரச்சினைக்கும் சங்கம் தலையிடாது*

*25. அனைத்து நிறுவனங்களுக்கும் விற்பனை துறையை சார்ந்த நபர்களை வேலைக்கு எடுக்கும் போது ஆஃபர் லெட்டர் மற்றும் அப்பாயின்ட்மெண்ட் லேட்டர் கொடுக்க வேண்டும் என்று நமது சங்கத்தின் மூலம் கோரிக்கை மனு அனுப்பப்படும்*

*26. நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்த உடன் நிறுவனங்கள் கண்டிப்பாக ஐடி கார்டு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படும்*

*27.விற்பனைப் பிரதிநிதிகள் பணியின் போது விபத்தினால் மரணம் அடைந்தாலோ அல்லது உடல் ஊனம் அடைந்தாலோ நிறுவனங்கள் கண்டிப்பாக இழப்பீடு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படும்*

*28.பணியில் இருக்கும்போது விற்பனைப் பிரதிநிதிகள் விபத்தினால் மரணம் அடைந்தால் அரசாங்கம் எவ்வகையிலாவது அவர்களுக்கு இழப்பீடு அல்லது குடும்பத்தில் ஒரு நபருக்கு வேலைவாய்ப்பு அளிக்க வலியுறுத்தப்படும்*

*29. வேலைக்கு எடுக்கும் விற்பனைப் பிரதிநிதிகளுக்கு அந்நிறுவனம் மருத்துவ காப்பீடு மற்றும் விபத்துக் காப்பீடு செய்து கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்படும்*

*30.பணியில் அமர்த்தும் அனைத்து விற்பனைப் பிரதிநிதிகளுக்கு நிறுவனத்தின் வங்கிக் கணக்கிலிருந்து சம்பளம் அளிக்க வேண்டும் அப்பொழுதுதான் அந்த விற்பனை பிரதிநிதி நிறுவனத்தின் அங்கீகாரம் படைத்த நபராக (On Roll) இருப்பார்*

*31.ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அனைத்து நிறுவனங்களையும் ஒன்றிணைத்து வேலைவாய்ப்பு முகாம் ஏற்படுத்த அனைத்து முயற்சிகளும் செய்யப்படும்*

*32. ஒரு விற்பனைப் பிரதிநிதி வேலையை விட்டு நிறுத்த வேண்டுமானால் அந்நிறுவனம் மூன்று மாத கால அவகாசம் அளிக்க வேண்டும் (குறைந்தது ஒரு மாதம்) என்று வலியுறுத்தப்படும் அல்லது குறைந்தபட்சம் ஒரு மாத சம்பளத்தை நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்படும்*

*34. ஏழு நபர்களுக்கு மேல் ஒரு நிறுவனத்தின் விற்பனைப் பிரதிநிதிகள் பணிபுரிந்தால் கண்டிப்பாக PF & ESI பிடிக்க வலியுறுத்தப்படும்*

*35.மாதத்திற்கு 3 நாள் விடுப்பு அளிக்க வேண்டும். விற்பனைப் பிரதிநிதிகள் அந்த விடுப்பை எடுக்காவிட்டால் வருடத்திற்கு ஒருமுறை விடுப்பு சம்பளமாக அளிக்கப்பட வேண்டும்*

*36.வருடத்திற்கு ஒருமுறை குறைந்தபட்சமாக 10 சதவீதத்தில் இருந்து 15 சதவீதம் சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும்*

*37.ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஒரு நிறுவனத்தில் தொடர்ந்து பணிபுரிந்தால் அவர் வேலையை விட்டு நிற்கும் பட்சத்தில் அவருக்கு அனைத்து விதமான செட்டில்மெண்ட் மற்றும் கிராஜுவிட்டி கொடுக்கப்படவேண்டும்*

*37. பணி நேரத்தை 8 மணி நேரமாக அறிவிக்கவேண்டும் அதற்கு மேல் பணிபுரியும் ஒவ்வொரு மணிநேரத்திற்கும் இரண்டு மடங்கு சம்பளம் அளிக்க வேண்டும்*

*38.நிறுவனத்தில் பணிபுரியும் விற்பனைப் பிரதிநிதிகளை வருடத்திற்கு ஒருமுறை இன்ப சுற்றுலா அழைத்துச் செல்ல வழிவகை செய்யப்பட வேண்டும்*

*39.மாவட்டம் தோறும் தமிழ்நாடு விற்பனை பிரதிநிதிகள் நல் வாழ்வு நல சங்கத்தின் மாவட்ட அலுவலகங்களை திறந்து விற்பனைப் பிரதிநிதிகள் அனைவரையும் ஒன்றிணைக்க முயற்சி செய்யப்படும்*

*40.தமிழ்நாடு விற்பனை பிரதிநிதிகள் நல் வாழ்வு நல சங்க உறுப்பினர்களின் இல்ல சுப நிகழ்ச்சிகளுக்கு குறைந்த வட்டியில் கடனுதவி அளிக்க முயற்சி செய்யப்படும் (வசூலிக்கப்படும் சந்தாவில் இருந்து)*

*41.நமது சங்கத்தின் உறுப்பினர்களின் குழந்தைகள் பத்தாவது வகுப்பிற்கு மேல் படிக்க வருமானம் குறைவாக இருக்கும் குடும்பத்திற்கு குறைந்த வட்டியில் கடனுதவி அளித்து கல்வியை வளர்க்க முயற்சி எடுக்கப்படும்*

*42.ஒரு நிறுவனத்தில் தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே பதவியில் பணிபுரிந்தால் அவர்களுக்கு பதவி உயர்வு அளிக்க நிறுவனங்களை வலியுறுத்தப்படும்*

*43.ஒரு நிறுவனத்தில் தொடர்ந்து 15 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து பணியிலிருந்து விலகினாலும் அல்லது விளக்க பட்டாலும் அவருக்கு ஆயுட்காலம் முழுவதும் பென்ஷன் வழங்க வலியுறுத்தப்படும்*

*44.ஆண்டுக்கு ஒருமுறை தீபாவளி அல்லது பொங்கல் திருநாட்களில் போனஸ் வழங்க வலியுறுத்தப்படும்*

*45. ஒரு நிறுவனத்தில் உண்மையாக நேர்மையாக வேலை செய்த ஒரு நபருக்கு உடலில் ஊனம் ஏற்படுமாயின் அந்நிறுவனம் அவருக்கு அலுவலகத்தில் வேலை அளித்து அவர் குடும்பத்தை பாதுகாக்க வேண்டுமென்று வலியுறுத்தப்படும்*

*46.நிறுவனத்தில் நடந்துகொண்டிருக்கும் விற்பனையை விட 15 சதவீதத்திற்கு மேல் விற்பனை மாதமாதம் அதிகப்படுத்த வேண்டும் என்று மன அழுத்தம் கொடுக்கக்கூடாது என்று வலியுறுத்தப்படும்*

*47.புதியதாக ஆரம்பிக்கப்பட்ட நிறுவனமோ அல்லது புதியதாக விற்பனை பிரதிநிதிகளை வேலை எடுத்த நிறுவனமோ அந்த விற்பனை பிரதிநிதியின் வேலை பிடிக்கவில்லை என்றால் அல்லது அவர் சரிவர வேலை செய்யவில்லை என்று நினைத்தால் 15 நாட்களுக்குள் அவரை வேலையை விட்டு அனுப்பி விடவேண்டும் ஒரு மாதம் முழுவதும் தொடர்ந்து அவரை பணியில் வைத்திருந்தால் கண்டிப்பாக அவருக்கு சம்பளம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படும்*

*48. குறைந்தது மூன்று வருடங்களாவது ஒரு நிறுவனம் விற்பனை பிரதிநிதிகளை வேலைக்கு வைத்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்படும்*

*49.வேலையிலிருந்து விலக்கப்பட்ட விற்பனை பிரதிநிதிகள் ஏஜென்சி களிடமிருந்து NOC வாங்கிக் கொடுத்த உடன் அவர்களுடைய செட்டில்மெண்ட் மற்றும் அனைத்து நிலுவைத் தொகையை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படும்*

*50. தொடர்ந்து 2 மாதம் சம்பளம் ஒரு நிறுவனத்தில் வாங்கியிருந்தால் அந்நிறுவனத்தில் நமது விற்பனை பிரதிநிதிகளின் விற்பனை இலக்கை அடைய முடியாத நண்பர்கள் அந்நிறுவனத்தை விட்டு வெளியேறிவிட வேண்டும் தொடர்ந்து நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டு நிறுவனம் சம்பளம் தரவில்லை என்று கூறினாள் சங்கம் எந்தவிதத்திலும் தலையிடாது*

*51. விற்பனை துறை என்பது விற்பனை பிரதிநிதிகள் நிறுவனத்திற்கு நாம் செய்யும் வியாபாரத்தில் இருந்தே நமக்கு சம்பளம் அளிக்கும் நாம் விற்பனை செய்யாமல் இருந்துவிட்டு நிறுவனங்கள் சம்பளம் தரவில்லை என்று கூறினால் சங்கம் எந்த விதத்திலும் உங்களுக்கு உதவாது*

*52. நம்மில் உள்ள சில விற்பனைப் பிரதிநிதிகள் ஒரு சில நிறுவனங்களில் பணிபுரியும் போது அவர்கள் சம்பளத்திற்காக புதிய ஏஜென்டுகளை நியமித்து (Primary Sales) பணத்தை வாங்கிக் கொடுத்துவிட்டு சம்பளம் பெற்றுக் கொண்டுள்ளார்கள் அப்படி சம்பளம் பெற்றால் செகண்ட்ரிசேல்ஸ் செய்து கொடுத்தே ஆக வேண்டும் சம்பளம் வாங்கினால் அப்பொருள் ரிட்டன் கம்பெனிக்கு சென்றால் அவர்களுக்கு லாபம் கிடைக்காது.....*

🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇

*பணிபுரியும் இடங்களில் இதை சரியாக கடைப்பிடியுங்கள்.....*

*1. யாரையும் நம்பாதீர்கள் ஆனால் எல்லோரையும் மதியுங்கள்.*

*2. பணியிடத்தில் நடப்பதை அங்கேயே விட்டுவிடுங்கள். பணியிடம் கிசுகிசுக்களை வீட்டிற்கோ அல்லது வீட்டின் கிசுகிசுக்களை பணியிடத்திற்கு சுமந்து வர வேண்டாம்.*

*3. சரியான நேரத்திற்கு பணிக்கு வந்து அதே போல சரியான நேரத்திற்கு பணியிலிருந்து செல்லுங்கள்.*

*4. நமது பணிக்கு தொடர்பில்லாத தேவையற்ற பேச்சுக்களை தவிருங்கள். அதனால் மோசமான பின்விளைவுகளையே சந்திக்க நேரிடும்.*

*5.எதையுமே எதிர்பார்க்காதீர்கள். யாரும் உதவினால் நன்றியோடு இருங்கள். உதவாத பட்சத்தில் அக்காரியத்தை நீங்களே செய்து கொள்ளக் கற்பீர்கள்.*

*6. பணியை மிகச் சிறப்பாக செய்யுங்கள் அதற்கு அங்கீகாரம் கிடைத்தால் வாழ்த்துகள், கிடைக்காவிட்டால் பரவாயில்லை. உங்கள் அறிவாற்றலுக்கும் அடுத்தவர்களை நீங்கள் மதிக்கும் பாங்கிற்காகவுமே உங்களை அனைவரும் நினைவில் வைத்திருப்பார்கள்.*

*7. எப்பொழுதும் பணியிடத்தை கட்டிக்கொண்டு அழாதீர்கள். வாழ்க்கையில் செய்வதற்கு அதை விடவும் சிறந்த காரியங்கள் ஏராளம் உண்டு.*

*8. நான் எனும் அகங்காரத்தை அறவே ஒழியுங்கள். ஈகோ வேண்டவே வேண்டாம். சம்பளத்திற்காக அல்ல மனசாட்சிக்கு பயந்து வேலை செய்யுங்கள் நம்முடைய நற்குணங்களே நம் சொத்துக்கள். அவையே நம் சந்தோஷத்தின் ஊற்றுக்கண்.*

*9. அடுத்தவர் உங்களை எப்படி நடத்தினாலும் பணிவோடு இருங்கள். எல்லோரையும் எப்போதும் திருப்திப் படுத்திவிட முடியாது.*

*10. இறுதியில் நம் குடும்பம், நண்பர்கள், வீடு, ஆழ் மன அமைதியை விட எதுவும் பெரிதில்லை....*

*11. உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள இலக்கை அடைவதற்கு தேவையான அனைத்து முயற்சிகளையும் செய்து கண்டிப்பாக அடைந்தே தீர வேண்டும் என்ற லட்சியத்துடன் உங்கள் பயணத்தை தொடருங்கள்*

*12. நீங்கள் உங்கள் இலக்கை அடைந்து அதனால் வரும் வருவாயிலேயே உங்களுக்கு சம்பளம் கிடைக்கும் என்பதை மறந்து விடாமல் செயல்படுத்துங்கள்*

*இவை அனைத்தும் நமது சங்கத்தில் சந்தா செலுத்தி உறுப்பினரான அனைவருக்கும் கிடைக்க வழிவகை செய்யப்படும்*

விற்பனை பிரதிநிதி........

சாதியில்லை மதமுமில்லை

கட்சியில்லை கவலையில்லை

களவுமில்லை காலநேரம் பார்ப்பதில்லை

நேரத்தோடு வீடு சேர்ந்ததில்லை

ஒற்றுமையை விட்டதில்லை

ஒரே சாதி எங்கள் சாதி

ஒன்று பட்டு வாழ்கிறோம்...........

காசுப்பணம் கஷ்டமில்லை

துளிக்கூட நஷ்டமில்லை

தோல்விபயம் எமக்கில்லை

துவண்டு படுத்தநாளில்லை

எங்களைப்பற்றி

பெருமைப்பட ஆளில்லை.........

தங்காத நட்சத்திர விடுதியில்லை

சுற்றித் திறியா நாடுமில்லை

வாங்கிப்பார்க்கா வாகனமில்லை

பேசிப்பார்க்கா போனுமில்லை

வசதி வாய்ப்பு குறைந்ததில்லை.....

பெண் கொடுக்க தயங்கியவர்கள்

புகழ்வதற்கு அளவில்லை

பந்தாக்காட்டி பழக்கமில்லை.....

வீண் சண்டைக்கு போனதில்லை

விரும்பி வந்தா விட்டதில்லை

எங்களால் யாரும் கெட்டதில்லை

திறமையில்லா ஆளில்லை

திறமையில்லாட்டி வேலையில்லை

படிக்காத நாளில்லை

கணினியால் பெரிய தொல்லை

நாங்கள் இல்லா ஊரில்லை......

உலகம் முழுக்க இருக்கிறோம்

ஒன்றுப்பட்டு நடக்கிறோம்........

எங்கள் வேலை கஷ்டமில்லை

உழைச்சவருக்கு நஷ்டமில்லை

யாருக்கும் விட இஷ்டமில்லை

பறவைப்போல வாழ்கிறோம்.....

பகிர்ந்து சேல்ஸ் பண்ணுவோம்

இன்சென்டிவ் வந்தால் மின்னுவோம்

சங்கத்தில் ஒன்றிணைந்து

சமுதாயப்பணி ஆற்றுவோம்

இனி

சேல்ஸ் ரெப்சை
போற்றுவோம்....

கர்வத்தோடு....

*V. கமல்ராஜ்*

*நிறுவனத் தலைவர்*

*தமிழ்நாடு விற்பனை பிரதிநிதிகள் நல் வாழ்வு நல சங்கம்(தொழிற்சங்கம்)*

*9788886988*

*பதிவு 04.02 மாலை தேதி 20.09.2022*

30/10/2020
29/10/2020
29/10/2020

நம் சங்கத்தில் இணைந்தால் பல நல்ல பயன்கள் கிடைக்கும்.
தங்கம் செய்யாததை சங்கம் செய்யும்.

தொடர்புக்கு 9788886988

Virpanai Pirathinithigal Chamber -
விற்பனை பிரதிநிதிகள் சேம்பர்

No2, Anna Nagar, Thirukkasur, Singaperumal Kovil, Chengalpattu dt 603204

https://digitalvcard.online/p/virpanai-perathinithigal-chambers

Virpanai Pirathinithigal Chamber

Address

No2, Anna Nagar, Thirukkasur, Singaperumal Kovil
Chengalpattu
603204

Alerts

Be the first to know and let us send you an email when Virpanai Pirathinithigal Chamber - விற்பனை பிரதிநிதிகள் சேம்பர் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Virpanai Pirathinithigal Chamber - விற்பனை பிரதிநிதிகள் சேம்பர்:

Share