10/07/2026
புதுச்சேரி மாநிலம், பாகூர் கார்ல் மார்க்ஸ் நூலகம் சார்பில்
74 ஆவது வாரச் சிறுகதை வாசிப்பு.
07-07-2026 செவ்வாய்க் கிழமை மாலை 5.30 மணி அளவில் சிறுகதை வாசிப்பு நிகழ்வு தொடங்கியது.
*எழுத்தாளர் ராமச்சந்திர வைத்தியநாத்* அவர்களின் சிறுகதையான
*கர்வாப்ஸி*
நூலகப் பொறுப்பாளர்களால் தேர்வு செய்யப்பட்டு வாசிக்கப்பட்டது.
நிகழ்வுக்கு அ.இளவரசி அவர்கள் தலைமை தாங்கிட இரா.ஆனந்தராமன் சிறுகதையை வாசிக்க சிறுகதை ஆர்வலர்கள்
பி .கல்கி, சீனு.பத்மநாபன், நா.சண்முகம், தே.முருகையன், சுமதி நடராஜன், இரா.பக்தவச்சலம், துரை. வேலாயுதம், க.புவனேசன், இரா.அய்யாசாமி, இரா. கலைச்செல்வன், பு.செல்வம்
ஆகியோர் சிறுகதை பற்றிய உரையாடல்களில் கலந்து கொண்டதுடன் தமது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.
தொகுப்புரையை தமிழாசிரியர் சிவா. ஜெகதீசன் அவர்கள் வழங்கிட ஆசிரியர் நா.சண்முகம் அவர்கள்
வந்திருந்த அனைவர்க்கும் நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.
#காரல்மார்க்ஸ்நூலகம் #வாசிப்பு_இயக்கம்