அவிநாசி

அவிநாசி It is a important junction between Coimbatore, Erode and Tirupur.

Its an official Page for the City of AVINASHI.............. We , the City sons of Avinashi has to work the improvements of Avinashi..............

இன்று மாலை ஐந்து மணிக்கு நமது சேவூர் - தெக்கலூர் சாலையில் அ.குரும்பபாளையத்தில்  அமைய உள்ள குருகுலம் இன்டர்நேஷனல் பள்ளியி...
20/02/2026

இன்று மாலை ஐந்து மணிக்கு நமது சேவூர் - தெக்கலூர் சாலையில்
அ.குரும்பபாளையத்தில் அமைய உள்ள குருகுலம் இன்டர்நேஷனல் பள்ளியின் ஆண்டு விழா நிகழ்ச்சி மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது இதில் பட்டிமன்ற பேச்சாளர் திருமதி பர்வீன் சுல்தானா அவர்கள் கலந்து கொண்டு சொற்பொழிவு ஆற்ற உள்ளார்கள் ஆகவே அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

26/11/2025

முதலை உண்ட பாலகனை பாடல் பாடி சுந்தரர் மீட்ட வரலாறு கொண்ட அவிநாசி அவிநாசிலிங்கேஸ்வரர் திருக்கோவில் கதை..

26/09/2025

தமிழ்நாட்டின் மிக நீளமான மேம்பாலம் நமது கோயமுத்தூர் அவிநாசி ரோடு மேம்பாலம்.....




தமிழர் கண்டுபிடித்த அதிசயம் தண்ணீர் அடுப்பு....
20/09/2025

தமிழர் கண்டுபிடித்த அதிசயம் தண்ணீர் அடுப்பு....

உலகமே வியக்கும் தமிழரின் கண்டுபிடிப்பு

வெறும் 5 லிட்டர் நீரில் 6 மாதம் எரியும் அதிசய அடுப்பு...உலகமே வியக்கும் தமிழரின் கண்டுபிடிப்பு

உலகிலேயே முதல்முறையாக தண்ணீரில் எரியும் அடுப்பினை கண்டுபிடித்து, தமிழர் ஒருவர் அசத்தி இருக்கிறார். இதன் சிறப்பம்சங்கள் பற்றி சிறப்பு விரிவாக பார்க்கலாம்...

நீரில் உள்ள ஹைட்ரஜன் மூலக்கூறுகளைப் பயன்படுத்தி, நீரில் எரியும் அடுப்பினைக் கண்டுபிடித்துள்ள HONC நிறுவனத்தின் நிறுவனர், தமிழ்நாட்டச் சேர்ந்த சேலம் பேளூரைச் சேர்ந்த தமிழர், இராமலிங்கம் கார்த்தி அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்!

புதுப்பிக்கத்தக்க மாற்று எரிசக்தியாகச் சுத்தமான நீரினைப் பயன்டுத்தி, இயற்கை வளங்களை அழிக்காமல், சுற்றுச்சூழலை மாசுபடுத்தாமல், விபத்துகள் ஏற்படா வண்ணம், பாமர மக்களும் பாதுகாப்பாகப் பயன்படுத்தும் வகையில், மிகக்குறைந்த மின் பயன்பாட்டுச் செலவில் உருவாக்கப்பட்டுள்ள நீரில் எரியும் அடுப்பினை, தம்முடைய 20 ஆண்டுகால ஹைட்ரஜன் குறித்த ஆராய்ச்சியின் விளைவாக அன்புச்சகோதரர் இராமலிங்கம் கார்த்தி அவர்கள் கண்டுபிடித்துச் சாதனை புரிந்துள்ளது மிகுந்த பாராட்டுக்குரியது.

நீரினை எரிபொருளாகக் கொண்ட சமையல் அடுப்பினைப் பயன்படுத்துவதன் மூலம், இனிவருங்காலங்களில் எரிபொருள் தேவைக்காக நிலம், நீர், காற்றினை மாசுபடுத்தும் கொடுமைகள் வெகுவாகக் குறைந்துவிடும். அந்த வகையில் இந்திய அரசின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கும் இந்த அரிய கண்டுபிடிப்பு செயற்பாட்டிற்கு வந்தால், அந்நிகழ்வு புதுப்பிக்கத்தக்க மாற்று எரிசக்தித்துறையில் மிகப்பெரிய புரட்சியாகவும், அறிவியல் வளர்ச்சியில் மாபெரும் சாதனையாகவும் திகழும்!

தண்ணீர்பந்தல் - ஆலாங்காட்டுப்பாளையம் சாலை பிரச்சினையில் மீண்டும் அடுத்த ரவுண்டு விசாரித்த போது இன்னும் பல தகவல்கள் வந்து...
29/08/2025

தண்ணீர்பந்தல் - ஆலாங்காட்டுப்பாளையம் சாலை பிரச்சினையில் மீண்டும் அடுத்த ரவுண்டு விசாரித்த போது இன்னும் பல தகவல்கள் வந்துகொண்டே இருக்கின்றன.

அங்கே உள்ள அங்கீகரிக்கபடாத மனை ஒன்றில் வீடுகள் சில கட்டப்பட்டுள்ளன.

அங்கே மனை வாங்கியவர்கள் சரியான பாதை உள்ளதா என்று விசாரிக்காமலேயே வாங்கி பிறகு வீடும் கட்டப்பட்டுள்ளதாக தெரிகின்றது..

இப்படி வீடு கட்டியுள்ளவர்களில் ஒரு சிலர் பாதை இல்லாததாக பரப்பிவிடும் வதந்தியால் வீட்டை குறைந்த விலைக்கு விற்றுவிட்டு சென்றுள்ளனர் என்பதும் தெரிகின்றது..

இப்படி வதந்தியை பரப்பிவிட்டு ஒருசிலர் அதே நகரில் குறைந்த விலைக்கு மனைகளை வாங்கிப்போட்டுள்ளனர் என்பதும் தெரியவரிகின்றது..
இப்படி மக்களை பயமுறுத்தி இன்னும் பல சைட்டுகளை வாங்கவே இத்தனை நாளாக கண்டுகொள்ளாத இந்த சாலை பிரச்சினையை கையில் எடுத்துள்ளதாக தெரிகின்றது.
சாலையை சம்பந்தபட்ட தனியார் ஆக்கிரமித்துள்ளதாக அந்த ஏரியாவில் பரப்பிவிட்டு இந்த அங்கீகாரமில்லாத மனைகளை வீட்டுடனும் தனி சைட்டுகளாகவும் குறைந்த விலைக்கு வாங்கவே இப்படி அதே மனையில் குடியிருக்கும் ஒருசில நிலவியாபாரிகள் செய்துகொண்டுள்ளது போல சொல்கின்றனர்.

மனையை வாங்கும்போது வண்டிப்பாதையை காட்டி விற்றவர்கள் இப்போது நிலங்களின் விலை உயர்ந்தவுடன் பக்கத்து நிலத்துகாரர்களை ஆக்கிரமிப்புகாரர்களாக காட்டி மனையில் எதாவது குறைந்த விலையில் வீடுகள் கிடைக்குமா என்றே இந்த பிரச்சினையை வெவ்வேறு வடிவங்களில் எடுத்துச்செல்கின்றனர் என்றே அங்கே வசிக்கும் ஒரு சிலர் கூறுகின்றனர்.

இன்னும் அடுத்தடுத்து எப்படி செல்கின்றது இந்த சாலை பிரச்சினை என்று பொறுத்திருந்து பார்ப்போம்..

#அவிநாசி


#திருப்பூர்

சேவூர்; சேவூர் அருகே 70 ஆண்டுகளுக்கு மேல் மக்கள் பயன்படுத்தி வந்த பொதுப் பாதையை மறித்து கம்பி வேலி போட்டு

தினமலரின் இந்த செய்தி அறிந்து குறிப்பிட்ட இடத்துக்கு சென்று பார்த்த போது அங்கே ஏற்கனவே வண்டித்தடம் போல சிறிய பாதை தான் உ...
28/08/2025

தினமலரின் இந்த செய்தி அறிந்து குறிப்பிட்ட இடத்துக்கு சென்று பார்த்த போது அங்கே ஏற்கனவே வண்டித்தடம் போல சிறிய பாதை தான் உள்ளதாக தெரிகின்றது..

மேலும் செய்தியில் சொல்லப்பட்டுள்ள அவிநாசி சிறுதொழில் தொழில்பேட்டைக்கு சென்று பார்த்த போது நமக்கு மேலும் அதிர்ச்சி.. ஏனென்றால் அங்கே பேருக்கு கூட ஒரு தொழிற்சாலை இல்லை. ஒரே ஒரு ஆளில்லாத கட்டிடம் மட்டுமே இருக்கின்றது.
அங்கே சுற்றுமுள்ள மக்களிடம் கேட்டறிந்ததில் அந்த இடங்களை வாங்கியதில் இருந்தே அது அப்படியள கிடப்பில் உள்ளதாகவும் குடிமகன்கள் அமர்ந்து காற்றோட்டமாக சாராயம் குடிப்பதற்கு பயன்படுவதாகவும் ஒரு தொழிற்சாலைக்கு கூட இதுவரை கட்டடம் அமைந்து இங்கே யாரும் பார்க்கவில்லை என்றும் மேலும் அந்த தொழிற்பேட்டைக்கான இடம் மிக மிக குறைவான விலைக்கு வாங்கப்பட்டு விவசாயம் நன்றாக இருந்த பகுதியை கெடுத்துவிட்டதாகவும் கூறினார்கள்.

சம்பந்தப்பட்ட சாலை மிக குறுகலாகவும் இனிமேல் அதை விரிவுபடுத்த இயலாததாகவும் உள்ளது. இந்த பாதையில் கனரக வாகனங்கள் எப்படி சென்றிருக்கும் என்று யோசிக்கும் முன்பே, அட அங்கு தான் ஒரு தொழில்சாலையும் இல்லையே பிறகு எதற்காக கனரக வாகனங்கள் அங்கே செல்லவேண்டும் என்ற எண்ணமும் வருகின்றது..

எது எப்படியோ விவசாயம் நடக்கும் இடத்தில் தொழில்பேட்டையும் அங்கீகாரமில்லாத வீட்டுமனைகளும் நமது விவசாயிகளை நேரடியாக பாதிக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை...

இந்த பிரச்சினை பற்றி மீண்டும் விவரங்கள் சேகரித்து அடுத்த பதிவில் வருகின்றோம்..
நன்றி வணக்கம்..


#அவினாசி
#திருப்பூர்

சேவூர்; சேவூர் அருகே 70 ஆண்டுகளுக்கு மேல் மக்கள் பயன்படுத்தி வந்த பொதுப் பாதையை மறித்து கம்பி வேலி போட்டு

திருப்புக்கொளியூர் அவிநாசி , கருணாம்பிகை உடனமர்  அவிநாசிலிங்கேஸ்வரர்  திருக்கோவில் சித்திரை தேர் திருவிழா இனிதே ஆரம்பித்...
05/05/2025

திருப்புக்கொளியூர் அவிநாசி , கருணாம்பிகை உடனமர் அவிநாசி
லிங்கேஸ்வரர் திருக்கோவில் சித்திரை தேர் திருவிழா இனிதே ஆரம்பித்துவிட்டது என்பதை அவிநாசி சுற்றுவட்டார மக்கள் மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் கொண்டாட ஆரம்பித்துள்ளனர்.....

Address

Tirupur Main Road
Avanashi
641654

Website

Alerts

Be the first to know and let us send you an email when அவிநாசி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share