08/09/2024
தேதி:08.09.2024
------------------------------------
1. சாதி , மதம் மாணவர்களின் படிப்பு சான்றுகளில் பதியப்படுவது ஏன்?
2. பள்ளி கல்வி பாடத்திட்டத்தில் அறநெறி கல்வி இல்லாதது ஏன்?
=================
பள்ளி , கல்லூரிகளில் தமிழ்நாடு அரசு இன்னும் இப்ப வரைக்கும் பதிவு சான்றுகளில் சாதியையும், மதத்தையும் பதிவு செய்து கொடுக்கின்றன.
சாதியும், மதமும் படிக்கும் பள்ளி/ கல்லூரி குழந்தைகளுக்கு சான்றுகளில் தேவையா?
சாதியும், மதமும் எதற்கு தேவை? எந்தெந்த இடங்களில் தேவை?
==============
அறிவியல் நானத்தை பேசுவோம் என்று கூறும் தமிழக முதல்வர் - அறநெறி கல்வி பள்ளி கல்வியில் எங்கு இருக்கிறது என்பதை தாராளமாக சூட்டிக் காட்ட வேண்டும்.
அறமும் நெறியும் பற்றி இந்திய குடிமைப் பணி தேர்வுகளில் கூட 250 மதிப்பெண் கொண்ட முக்கிய தாளாக உள்ளது.
நமது வாழ்வை வளமாக்கும், தனிமனித ஒழுக்கத்தை போதிக்கும், நம்மை சுற்றி இருக்கும் இயற்கை/ பல்லுயிர் என அனைத்தின் மீதும் தேவையான அறநெறி இல்லாத கல்வி - எதனை சுட்டிக் காட்டுகிறது.
அறநெறி பற்றி பேசும் போது உடனே நமது தமிழர் இலக்கியம் பற்றி பேசக் கூடாது.
தனிப்பட்ட முறையில் அறநெறி குறித்து என்ன பாட திட்டம் இருக்கிறது.
இன்றைய காலத்தில் அரசு மற்றும் தனியார் பணிக்கும், ஒவ்வொரு தொழிலிற்கும் அறநெறி என்பது மிகுந்த தேவையாக உள்ள நிலையில் அது பற்றி எந்த பாடத்திட்டத்திலும் இல்லாமல் இருப்பது - போரபோக்கில் பிற்போக்கு மூட நம்பிக்கைவாதிகள் வாய்க்கு வந்ததை உளறிவிட்டுச் செல்லும் சூழ்நிலையும், ஊழல் லஞ்சம் தலைவிரித்தாடவும், இயற்கை வளங்களை அறமில்லாமல் அழிக்கவும், நமது உயிர் ஆதாரமாக உள்ள ஆறுகளின் போக்கில் தொழில் வளர்ச்சி என்ற பெயரில் சாய/ரசாயன கழிவு நீரை கலப்பதும் - நடைமுறை வாழ்க்கைக்கும் - பள்ளி / கல்லூரி கல்விக்கும் தொடர்பில்லாமல் போனதும் - உண்மையான அறநெறி போதிக்காமல் போனதும் காரணம் என்பதை யார் மறுக்க முடியும்.
==============
இரா. சதீஷ் குமார்
இந்திய குடிமைப் பணி தேர்வு - தமிழ் வழி தேர்வர்கள் பயிற்றுநர்.
முதன்மைத் தேர்வு ஒருங்கிணைப்பு குழு