15/03/2026
நாம் தமிழர் கட்சி அரசு செயல்படுத்தும் நீர்மேலாண்மை முதன்மைப் பணிகள்
ஆறுகளில், நீர்நிலைகளில் கலக்கும் கழிவுநீர் முற்றிலுமாகத் தடுக்கப்படும்.
ஆறுகளுக்கான நீர்வழிப் பாதைகளை ஒழுங்கமைத்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர் வழித் தடங்கள் சீர்படுத்தப்படும்.
நீர் நிலைகளின் கரையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு,நீர் நிலைகளின் இயற்கைப் பரப்பு மீட்டெடுக்கப்படும்.
ஏரி.குளங்கள், ஆறுகள் போன்ற நீர் நிலைகள் தூர்வாரப்பட்டு அதன் கரைகள் வலுப்படுத்தப்படும்.
நீர்நிலைகளைச் சுற்றி மரங்கள்
ஆறு, ஏரி, கண்மாய், கரணை, ஏந்தல், குளம், குட்டை கரைகளைச் கற்றி வேப்பமரம், புங்கைமரம், பணிக்கொன்றைமரம், நாவல்மரம், கவிக்கொன்றைமரம், ஆலமரம், பூவரசுமரம், மருதமரம், அரசமரம், தேக்குமரம், கோங்குமரம் மற்றும் பனைமரங்கள் நட்டு வளர்க்கப்பட்டு உயிர்ச்சூழல், பல்லுயிர்ப் பெருக்கத்திற்கு ஏற்றாற் போல் நீர் நிலைகள் மாற்றப்பட்டுப் பாதுகாக்கப்படும்.
நீர் நிலைகளின் கரைகளைச் சுற்றி நடப்படும் பனைமரங்கள் நிலத்தடிக்குக் கீழே ஆயிரம் அடிவரை சென்று நீரைப் பாதுகாத்து வைத்துக்கொள்ளும். அது வேளாண்மைக்குப் (விவசாயத்திற்குப்) பயன்படும். தவிரப் பனையரத்தில் வௌவால்கள் சென்று அடைந்து தங்கும். அந்தப் பகுதி விவசாய நிலங்களில் உள்ள பூச்சிகளை உண்டு வாழும், வேளாண் தொழிலுக்கு நண்பனாக இருக்கும். அதனால் நீர்நிலைகளைக் காத்து உழவுக்கு உதவியாக நிற்கும் பனை மரங்கள் வளர்க்கப்படும்.
அனைத்து நீர்நிலைகளும் முன்வேலி அமைக்கப்பட்டு,மின் விளக்குகள் பொருத்தப்பட்டுச் சிறப்புக் காவல்படையினரைக் கொண்டு பாதுகாக்கப்படும்.
ஏரி குளங்களுக்கான நீர்வரவுத் தடங்களில் இருக்கிற ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுச் சீரமைக்கப்படும்.
நீர்த் தேவை அதிகமாகத் தேவைப்படும் இடங்களில் புதிய நீர்வரவுத் தாரைகள் உருவாக்கப்படும்.
ஆழ்துளைக் குழாய்களின் மூலம் நீரை எடுப்பது படிப்படியாகக் குறைக்கப்படும். ஏரி கண்மாய், குளம் குட்டைகளில் நீரைச் சேமித்தால் ஆழ்துளைக் குழாய் நீர் தேவையிருக்காது இதனால் நிலத்தடி நீர் பாதுகாக்கப்படும்.
“நீர் நிலைகளின் கரைகளைச் சுற்றி நடப்படும் பனைமரங்கள் நிலத்தடிக்குக் கீழே ஆயிரம் அடிவரை சென்று நீரைப் பாதுகாத்து வைத்துக்கொள்ளும். பனைமரத்தில் வௌவால்கள் சென்று அடைந்து தங்கும். அந்தப் பகுதி உழவு நிலங்களில் உள்ள பூச்சிகளை உண்டு வாழும் வேளாண் தொழிலுக்கு நண்பனாக இருக்கும்"