04/01/2022
#வேண்டும்_ஆரணி_மாவட்டம்
நாளை 5 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் சென்னை கலைவாணர் அரங்கில் திமுக அரசின் 2வது சட்டமன்ற கூட்டத் தொடர் நடைபெறுகிறது.
ஆரணி தொகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையான ஆரணி மாவட்டம், ஆரணியில் அரசு கலைக் கல்லூரி, ஆரணியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், ரிங் ரோடு திட்டம், ஆரணி சுகாதார மாவட்டம், ஆரணி நெடுஞ்சாலை கோட்டம், ஆரணியில் உள்ள வரலாற்று சின்னங்களை பாதுகாத்து சுற்றுலா தலமாக மாற்றுவது, ஆரணி அரசு மருத்துவமனையை தரம் உயர்த்துவது, ஆகிய அறிவிப்புகள் இடம் பெறுமா?
அதேபோல், வந்தவாசி வட்டத்தை பிரித்து பெரணமல்லூர் வருவாய் வட்டம், ஆரணி மேற்கு மற்றும் போளூர் ஒன்றியத்தை சீரமைத்து கண்ணமங்கலம் ஒன்றியம் உருவாக்குவது, பெரணமல்லூர் மற்றும் தெள்ளார் ஒன்றியத்தை சீரமைத்து தேசூர் ஒன்றியம் உருவாக்குவது என பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்படுமா?
அதேபோல், போளூர், களம்பூர், கண்ணமங்கலம், சேத்துப்பட்டு பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்துவது, தேவிகாபுரம், எஸ்.வி.நகரம், சேவூர், படவேடு, கலசப்பாக்கம், சந்தவாசல், ஒண்ணுபுரம், வெம்பாக்கம், ஜமுனாமரத்தூர் ஆகிய ஊராட்சிகளை பேரூராட்சியாக தரம் உயர்த்துவது என பல்வேறு அறிவிப்புகளும் வெளிவருமா?
போக்குவரத்து துறையின் சார்பில் ஆரணி, செய்யாறு, போளூர் மற்றும் வந்தவாசி பணிமனையில் இருந்து இயக்கப்பட்டு தற்போது நிறுத்தப்பட்ட பேருந்துகள் அனைத்தும் மீண்டும் இயக்க ஆவணம் செய்ய வேண்டும். மற்றும் மக்கள் தொகை அதிகம் உள்ள ஆரணி நகரில் கூடுதலாக போக்குவரத்து பேருந்து பணிமனை தொடங்க வேண்டும். மேலும் வருவாய் வட்டத்தின் தலைமையகமாக உள்ள கலசப்பாக்கம், ஜமுனாமரத்தூர், வெம்பாக்கம், பெரணமல்லூர் பகுதியில் புதிய பேருந்து பணிமனை தொடங்க வேண்டும்.
ஆவலுடன் காத்திருக்கும் ஆரணி, போளூர், சேத்துப்பட்டு, வந்தவாசி, பெரணமல்லூர், வெம்பாக்கம், செய்யாறு, கண்ணமங்கலம், ஜமுனாமரத்தூர் பகுதி மக்கள்.
#ஆரணி_மாவட்டம்_உருவாக்க_வேண்டும்
#ஆரணி, #போளூர், #சேத்துப்பட்டு, #ஜமுனாமரத்தூர், #செய்யாறு, #வந்தவாசி, #வெம்பாக்கம், #பெரணமல்லூர்
M. K. Stalin Sevvoor S Ramachandran Dr M K Vishnu Prasad E.V Velu MK Vishnu Prasad Chief Minister of Tamil Nadu Rajakannappan Followers Edappadi K.Palanisamy V senthil balaji dinakaran daily newspaper ஆரணி Kalaignar Seithigal Kalaignar TV NewsJ