வெம்பகுடி கிழக்கு-vembangudi

வெம்பகுடி கிழக்கு-vembangudi Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from வெம்பகுடி கிழக்கு-vembangudi, Public & Government Service, Vembangudi, Aranthangi.

26/01/2021

மாற்றத்திற்க்கான மக்கள் மருத்துவர் / சமூக ஆர்வலர் Dr. தெட்சிணாமூர்த்தி அவர்களுடன் ஒரு நேர்காணல்.

04/02/2016
05/01/2016
15/12/2015

இளையதலைமுறையினரின் தேர்தல் அறிக்கையாக இப்படி இருந்தால் உங்கள் கருத்து என்னவாக இருக்கும்?
1. ஆட்சிக்கு வந்தால் தமிழகத்திற்கு மிகப்பெரிய பொருளாதார பின்னடைவை உருவாக்கி கொண்டிருக்கும் உலக வங்கியிடம் கடன் பெறுவதை உடனே நிறுத்தப்படும்.
2. அரசு நிர்வாகத்திற்கு கடன் தேவைப்பட்டால் மக்களிடமே தகுந்த உத்திரவாதத்துடன் கடன் பெற்று சரியாக திறும்ப செலுத்தப்படும்.
3. அனைத்து தொழில் துறைகளிலும் தமிழர்கள் தொழில் துவங்க ஊக்கவிக்கப் பட்டு அதற்கு வழிவகை செய்யப்படும்.
5. மக்களின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு இயற்கை விவசாயத்திற்காக சரியான நிபுணர்களை கொண்டு இயற்கை உரங்கள், பூச்சி கொல்லி மருந்துகள் தமிழக அரசால் தயாரித்து சரியான விலையில் விநியோகம் செய்யப்படும்.
5. இயற்கை விவசாயத்தையும் , மக்களின் வாழ்வாதாரத்தையும் உயர்த்தும் வகையில் பசுமாடு வளர்ப்புகளை அதிகப்படுத்த மக்களுக்கு சரியான பசு வளர்ப்பு முறை பயிற்சி கொடுத்து தமிழக அரசே கடனுதவி அளிக்கும்.
6. மக்களின் நிறந்தர ஆரோக்கியமான வாழ்விற்காக இயற்கை மருத்துவமாம் சித்த மருத்துவமுறையில் மருந்துகளின் உற்பத்தி பெறுக்கப்படும். தேவை ஏற்படும் பொழுது மட்டுமே ஆங்கில மருத்துவ முறைகளை மக்களுக்கு வழங்க வழிவகை செய்யப்படும்.
7. அடிப்படை கல்விக்கு முன்பே குழந்தைகளிடம் மனதைரியத்தையும் ஆழமான தன்னம்பிக்கையும் உருவாக்கும் வகையில் மனோதத்துவ நிபுணர்களை கொண்டு பயிற்சிகள் அளிக்க வழிவகை செய்யப்படும்.
8. மொழிப்பாடங்களை கற்று கொடுக்கும் பொழுது மொழிகளின் ஆழத்தை புரிந்து கொள்வதற்காகவும் மனனம் செய்யாமல் முழு மொழியறிவையும் பெறுவதற்கு மொழிப்பாடங்களுக்கு மட்டும் மதிப்பெண் வழங்குவதை தவிர்த்து சிந்தணை ஆற்றல் பெருகும் வகையில் ஆழமாக மொழிகளை கற்றுக்கொள்ளும் முறை உருவாக்கப்படும்.
9. ஏட்டு கல்வியாக மட்டும் இல்லாமல் சிறுவயதில் இருந்தே செய்முறை கல்வியை உருவாக்க வழிவகை செய்யப்படும்.
10. அனைத்து அரசு துறைகளில் உள்ள வேலை வாய்ப்புகள் மற்றும் தனியார் துறையின் வேலை வாய்ப்புகள் பற்றிய தெளிவான அறிக்கை அரசே வெளியிடும் , வேலை வாய்ப்புக்கான பயிற்சியும் ஒவ்வொருவரின் திறமை மற்றும் ஆர்வத்திற்கேற்ப பயிற்சியும் அரசே கொடுத்து தகுதியானவர்களுக்கு வேலை வாய்ப்பை உறுதி செய்யும். மேலும் அயல்நாடுகளில் பணி புரிய ஆர்வம் என்பவர்களுக்கு அயல்நாடுகளில் உள்ள வேலைகளை பற்றிய தெளிவுகளை உருவாக்கி அதில் சிரமங்களை தைரியமாக கையாள தகுதியுள்ளவர்களாக உருவாக்க வழிவகை செய்யப்படும். அந்நியநாடுகளில் உள்ள வேலைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த அரசே சரியான வழிகாட்டியாக மாறும்.
11. இட ஒதுக்கீடு என்பதை உருவாக்க ஒவ்வொருவரின் சரியான வருமான நிலையை கண்டறிய நடவடிக்கை எடுத்து வருமானத்தின் அடிப்படையில் பிரிவுகள் பிரிக்கப்பட்டு ஒதுக்கீடுகளை சரியாக வழங்க வல்லுணர் குழுவை உருவாக்கப்படும்.
12. மத நல்லிணக்கத்தை கடைபிடிக்க சமூக வலைதளங்களில் மற்ற மதங்களை தவறாகவும், இழிவாகவும் சித்தரித்து கலவரம் உருவாவதை தடுக்க வழி வகை செய்யப்படும்.
13. அவர்வர்களுக்கு அவர்வர்களின் மதம் உயர்வானதாக தான் இருக்கும் என்பதால் இனியும் என் கடவுள் தான் உயர்வானவர் உன் கடவுள் பொய்யானவர் என்ற வாதங்களை களைய மக்களிடம் சரியான விழிப்புணர்வை உருவாக்க சிறந்த நிபுணர்களை கொண்ட குழுவை உருவாக்கி மதங்களை பற்றி அனைவருக்கும் தெளிவு ஏற்படுத்தி சீர் செய்யப்படும்.
14. லஞ்ச ஊழலை ஒழிக்க மாவட்ட ஆட்சி தலைவர்களின் கண்காணிப்பில் அனைத்து அரசு பணியாளர்களும் எப்பொழுதும் இருப்பார்கள் . அதுபோல மாவட்ட ஆட்சி தலைவரின் நிர்வாக முறையில் தவறு இருக்கும் பட்சத்தில் அமைச்சரவை அந்த பிரச்சினையை கையில் எடுக்கும்.
15. காவல் துறையை சரி செய்துவிட்டாலே மக்களின் பாதி பிரச்சனைகளை சரி செய்துவிடலாம் என்பதால் காவல் நிலையங்கள் முழுதும் மாவட்ட ஆட்சி தலைவரின் கண்காணிப்பு வளையத்தில் இணைக்கப்படும்.
16. காவல் துறை கண்டிப்பாக புகார் பதிவு செய்து நடவடிக்கை எடுத்தால் தான் பதவி உயர்வு என்பதை விலக்கி அவர்கள் பணிபுரியும் பகுதிகள் எந்த அளவிற்கு இவர்களால் அமைதியாக பாதுகாக்கப்படுகிறதோ அதன் அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வழிவகை செய்யப்படும்.
17. காவல்துறையினர் மக்களிடம் தெளிவாகவும் அமைதியாகவும் பொறுமையாகவும் விசாரித்து புரிந்து கொண்டு சரியான நடவடிக்கை எடுக்க யோகா மற்றும் தியான பயிற்சிகள் தினமும் வழங்க வழிவகை செய்யப்படும்.
18. பேருந்து கட்டணத்தில் இருந்து அனைத்து அத்தியாவசிய பொருட்களின் கட்டணங்கள் வரை அனைத்தையும் ஆராய்ந்து அனைவரும் புரிந்து கொண்டு ஏற்றுக்கொள்ளும் படியான விலையை நிர்ணயம் செய்து அரசுக்கு மக்கள் என்றும் துணை நிற்க வழிவகை செய்யப்படும்.
19. நிர்வாகத்தின் வெளிப்படை தன்மையை தெரிந்து கொள்ள அனைத்து பஞ்சாயத்துகளிலும் வரவு செலவு கணக்கை வெளிப்படையாக பஞ்சாயத்து கட்டிடத்தில் ஒட்டப்படும்.
20. பஞ்சாயத்து தலைவர்களாக இருப்பவர்கள் மற்றும் கவுன்சிலர் போன்றோருக்கு சம்பள நிர்ணயம் செய்யப்படும்.
21. நமது பொருளாதாரத்தில் பெறும் பாதிப்பை உண்டு பன்னும் பெட்ரோல் மற்றும் டீசலின் பயன்பாட்டில் எத்தனால் என்கிற எத்தில் ஆல்ஹகாலை கலந்து விலைவாசி உயர்வு மற்றும் காற்று மாசுபடுவதை தடுக்க கரும்பு உற்பத்தியை பெருக்கி அதன் சக்கையில் இருந்து எத்தில் ஆல்கஹால்அதிகமாக தயாரித்து எரிபொருளாக பயன்படுத்துவதால் மது ஒழிப்பும் அமுல்படுத்தப்படும் மற்றும் மதுவை ஒழிக்க மது பழக்கத்திற்கு அடிமையானவர்களை மருத்துவ குழுவை உருவாக்கி அவர்களை கொண்டு அவர்களை மீட்டெடுத்து குடும்ப நலனில் அக்கரை செலுத்த வழிவகை செய்யப்படும்.
22. வருங்காலங்களில் நம் சந்ததிகள் சதிவலைகளில் சிக்காமல் இருக்க நல்ல அரசியல் பற்றி சிறுவயதில் இருந்தே குழந்தைகளுக்கு ஆழமாக பதியும் வகையில் அரசியலை பள்ளிகளில் கட்டாய பாடமாக்கப்படும்.
23. விவசாயத்துறை பற்றிய கல்வியும் பள்ளி கல்விகளில் இணைக்கப்படும்.
24. சாதிகள் என்ற பெயரில் சமூகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை களைய உளவியல் ரீதியாக களைந்தெடுத்து சரியான புரிதலோடு ஒற்றுமையாக வாழ உளவியல் நிபுணர்கள் குழு உருவாக்கப்படும்.
25. நமது அத்தியாவசிய பொருட்கள் மற்றும் பல தொழில் நுட்ப உபகரணங்கள் அனைத்தும் தமிழ்நாட்டில் உள்ளவர்களால் தமிழ்நாட்டிலே உற்பத்தி செய்திட சரியான தமிழ் விஞ்ஞானிகளின் குழு செயல்பட வைக்கப்படும்.
26.இயற்கை விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் அதே நேரத்தில் அவற்றின் உற்பத்தியை பெருக்க ஏரி,குளம், கண்மாய்களை தூர்வாறுதல், ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் போன்றவற்றிற்கும் அதிக முக்கியத்துவம்
www.facebook.com/tn.ilayathalaimurai
நன்றி
இளையதலைமுறை

Ilaya Thalaimurai welcome youngsters to be a Social Service Stalwart,t o make Awarness to the Society and to support Deserved with any obstacles

01/12/2015
மொட்டை மாடியில் இயற்கைமுறை காய்கறி தோட்டம்...வாருங்கள் நம் வீட்டுக்கு தேவையான காய்கறிகளை விளைவிப்போம்!!!
05/11/2015

மொட்டை மாடியில் இயற்கைமுறை காய்கறி தோட்டம்...வாருங்கள் நம் வீட்டுக்கு தேவையான காய்கறிகளை விளைவிப்போம்!!!

15/10/2015

பத்து கட்டளைகள்

Address

Vembangudi
Aranthangi
614624

Telephone

9626561581

Website

Alerts

Be the first to know and let us send you an email when வெம்பகுடி கிழக்கு-vembangudi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share