23/05/2026
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்த பிறகு தமிழகத்தில் வாழும் பல சமுதாய மக்கள் அமைச்சரவையில் எங்கள் சமூகத்திற்கு உரிய பிரதிநிதித்துவம் தர வேண்டுமென்றும்,வேண்டுகோளாக வைத்தனர்,ஆனால் விஜய் அவர்கள் எதையும் கண்டு கொள்ளாமல் தன்னுடைய கட்சிக்கு நம்பிக்கைகுரியவர்களுக்கும், நல்லவர்களுக்கும் வாய்ப்புகளை வழங்கி ஆட்சியில் அமர வைத்துள்ளார். சமுதாயத்திற்காக பிரதிநிதித்துவம் கேட்பது நியாயம் தான் அதைக் கேட்க வேண்டிய விதத்தில் தான் கேட்க வேண்டும்.சாதியவாதிகள் கேட்டது போன்று அமைச்சரவையில் இடம் கிடைக்காததால் முதலமைச்சர் விஜய் அவர்களை கடுமையான விமர்சனம் செய்து வருகின்றனர்,எதையும் கண்டு கொள்ளாமல் அனைத்து சமுதாய மக்களுக்கும் உரிய அங்கீகாரத்தையும் வாய்ப்புகளையும் தமிழக வெற்றி கழகம் செய்து வருகிறது,இந்த செயலை ஆண்ட கட்சிகள் மிகப்பெரிய அரசியல் ஜாம்பவான்கள் பார்த்து வியந்து வருகின்றனர்,அதன் விளைவாக மிகப்பெரிய அரசியல் கட்சிகளில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகம் கட்சியை நோக்கி நாளுக்கு நாள் படையெடுத்து வருகின்றனர். முதலமைச்சரின் இந்த நிலைபாடு என்பது இறுதி வரை தொடர்ந்து இருக்க வேண்டும்.
குறிப்பாக திராவிட கட்சிகளில் இருந்த மூத்த அமைச்சர்கள் என்று சொல்லப்படக்கூடிய வம்சாவழியாக நாடாளுமன்ற உறுப்பினராகவும்,அமைச்சர்களாகவும் சட்டமன்ற உறுப்பினர்களாகவும் இருந்து தான் சாதிக்கு மட்டுமே செய்து வந்த நிலையில் தற்பொழுது மக்களின் எதிர்ப்பின் மனநிலையில் தமிழக வெற்றி கழகத்தை தேர்வு செய்தனர், மக்களின் நம்பிக்கையை தொடர வேண்டும் என்றால் தற்பொழுது எடுத்துள்ள இந்த சமூக நீதி செயல்களை இறுதிவரை செய்ய வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறோம்.
Chief Minister of Tamil Nadu TVK Vijay