தமிழ் சேகரிப்பு

தமிழ் சேகரிப்பு Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from தமிழ் சேகரிப்பு, Library, Karthikayan Road Annanagar(near), Arani.

18/09/2014
18/09/2014
29/05/2014

Enjoy the best and most accurate free astrology software, in your language.

10/04/2014
03/02/2013

1991 மார்ச் 23ல் முதன்முறையாக பூம்புகார் கடல் பகுதியில் குதிரைலாட வடிவத்தில் கட்டுமானம்ஒன்றைக் கண்டுபிடித்தனர். அதன் இரண்டு முனைகளுக்குமிடையில் 20 மீட்டர் தூ...

ஆறிலும் சாவு , நூறிலும் சாவு --(பழமொழியின் பின்னணி).======================' ஆறிலும் சாவு , நூறிலும் சாவு ' என்று ஒரு பழம...
23/12/2012

ஆறிலும் சாவு , நூறிலும் சாவு --(பழமொழியின் பின்னணி).
======================


' ஆறிலும் சாவு , நூறிலும் சாவு ' என்று ஒரு பழமொழி சொல்வார்கள் . இதற்கு , சாவு ஆறில...
ும் வரும் , நூறிலும் வரும் என்றே நாம் எல்லோரும் பொருள் கொள்கிறோம் . வாழ்க்கை நிலையற்றது என்பதைத் தான் இப்படிச் சொன்னார்கள் என்று நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்றாலும் , அதன் உண்மையான பொருள் இதுவல்ல .

குருசேத்திர போரில் , போருக்கு முன்னதாக தனது மூத்த பிள்ளை கர்ணன் என்பதை அறிந்த குந்திதேவி , அவனிடம் சென்று , பாண்டவர் ஐவருடன் சேர்ந்து கவுரவர்களை எதிர்த்து போரிட அழைக்கிறாள் .

அப்போது கர்ணன் கூறுகிறான் : ' தாயே ! நான் பாண்டவர் ஐவருடன் சேர்ந்து ஆறாவது ஆளாகப் போரிட்டாலும் சரி , கவுரவர்கள் நூறு பேருடன் சேர்ந்து நூறாவது ஆளாக போரிட்டாலும் சரி , இறப்பது உறுதி என்பது எனக்குத் தெரியும் .

ஆகவே , ஆறிலும் சாவு அல்லது நூறிலும் சாவு . எப்படி செத்தால் என்ன ? செஞ்சோற்றுக் கடன் கழிக்க என்னை வளர்த்து ஆளாக்கிய துரியோதனனிடமே இருந்து உயிரை விடுகிறேன் ' என்கிறான் .

இங்கே கர்ணன் கூறியது தான் , மேற்படி பழமொழிக்கு உண்மையான பொருள்

01/12/2012

கங்கைகொண்ட சோழபுரம் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள அரியலூர் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமம் ஆகும். பதினொன்றாம் நூற்றாண்டின் நடுவில் இதனை முதலாம் ராஜேந்திர சோழன் தனது தலைநகரமாக ஆக்கினார். இது பதிமூன்றாம் நூற்றாண்டு வரை சோழர்களின் தலைநகரமாக விளங்கியது. அங்கு ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட பிரம்மாண்டமான சிவன் கோவில் ஒன்றும் உள்ளது.

தஞ்சைப் பெரிய கோயில் கட்டி முடிக்கப்பட்டு இருபது ஆண்டுகளில் கட்டப்பட...்ட கங்கை கொண்ட சோழபுரம் கோயில் தஞ்சைக் கோயில் பிரதானமான அல்லது மிக முக்கியமான இயல்புகளை ஆனால் அந்த இயல்புகளை வேறு ஒரு வகை உணர்ச்சியுடன் வெளிப்படுத்துகிறது. தஞ்சைப் பெரிய கோயிலில் ஆண்மையின் மிடுக்கும் வீரமும் பொங்கி வழிகிறது.

திருவாலங்காட்டுச் செப்பேடுகள் இந்த இராஜேந்திரனின் கங்கை நோக்கிய படையெடுப்பு ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் நீடித்தன என்று சொல்கின்றன. இந்த இரண்டு ஆண்டுக் காலத்தில், வட இந்தியாவின் அரசுகள் சோழர்களின் பெரும்படைக்கு முன் தோல்வியுற்றன; ரனசுராவின் படைகளை வென்று தர்மபாலாவின் நாட்டிற்குள் நுழைந்தன என்றும், அங்கே அம்மன்னனை வென்று கங்கை வரை சென்றதாகவும், தோல்வியுற்ற மன்னர்கள் மூலமாகவே கங்கை நதியின்நீரைச் சோழநாட்டுக்கு எடுத்து வந்தான் என்றும் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறியமுடிகிறது.

இராஜேந்திரனுடைய மெய்க்கீர்த்தியில் ஸ்ரீவிஜயத்திற்குப் பிறகு பண்ணை என்ற இடம் குறிக்கப்படுகிறது. பண்ணை என்பது சுமத்திராவின் கீழ்க்கரையில் உள்ள பனி அல்லது பன்னெய் என்ற ஊராகும். மலையூர் என்பது மலேயா தீபகற்பத்தின் தென்கோடியில் பழைய சிங்கப்பூர் ஜலசந்திக்கு வடக்கே மலாயூர் ஆற்றுக்கு அருகில் உள்ளது.

இந்த இடத்தை சுற்றியுள்ள பகுதிகள் அப்படியே சோழறின் வாழ்வை பிரதிபலிப்பதாக உள்ளது. அப்படிப்பட்ட ஒரு அரசன் செய்த சாதனைகள் தந்தையின் புகழில் மறைந்துவிட்டது.

01/12/2012

பூந்தண்டலம் -அருள்மிகு அகத்தீசுவரர் திருக்கோவில் ,சென்னை -600069 . இத்திருகோவிலில் திருப்பணி தொடங்கி ஐந்து ஆண்டுகள் முடிந்தபிறகும் கும்பாபிஷேகம் நடைபெறவில்லை திருப்பணி நின்றுவிட்டது . தொடர்புக்கு - 9444352848 , திரு .மலையப்பான் - 9962602378 ,64994168 . சென்னை சிவபதிகள் 223ஆவது கோவில் காண்க .

01/12/2012

“மாமன் மகளடியோ மச்சினியோ நானறியேன்

காமன் கணையெனக்கு கனலாக வேகுதடி

மாமன் மகளாகி மச்சினியும் நீயானால்

காமன் கணைகளெல்லாம் என் கண்ணம்மா!

கண்விழிக்க வேகாவோ”

விளக்கம்;;;;;;;;;;;

முறைப் பெண்ணாக இருந்தால் என்ன அல்லது மச்சினியாகத்தான்

இருந்தென்ன? இளமைப்பருவத்தில் காமன் கணையினால் படும் துன்பம்

பெரியதல்லவா? அந்தக் காமன் கணைகளெல்லாம் யோகத்திலிருந்த

சிவபெருமான் கண்விழிக்கச் சாம்பரானது போல, யோக தவத்திலிருந்து நான்

கண் விழித்தால் அந்த யோக அனலில் காம உணர்ச்சிகளெல்லாம் வெந்து

சாம்பலாகி விடும் ...

16/11/2012

This footage was taken by Mr. KK Nambiar of Madras with 16mm movie camera. He visited ashram between 1947 and 1950. He was an engineer and served ashram in c...

Address

Karthikayan Road Annanagar(near)
Arani
632301

Opening Hours

Monday 12am - 12pm
Tuesday 12am - 12pm
Wednesday 12am - 12pm
Thursday 12am - 12pm
Friday 12am - 12pm
Saturday 12am - 12pm
Sunday 12am - 12pm

Telephone

9003252566

Website

Alerts

Be the first to know and let us send you an email when தமிழ் சேகரிப்பு posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category