05/03/2016
இறந்த கணவனுடன் 10 நாட்கள் வாழ்ந்த மனைவி – இப்படியும் ஒரு மனைவி இலங்கையிலா?
தெரணியகல மாலிபொட திக்எல்லகந்த பிரதேசத்தில் பெண் ஒருவர் தனது கணவனின் சடலத்து டன் 10 நாட்களுக்கும் மேலாக வீட்டில் வசித்து வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெரணியகல மாலிபொட திக்எல்லகந்த பிரதேசத்தில் பெண் ஒருவர் தனது கணவனின் சடலத்து டன் 10 நாட்களுக்கும் மேலாக வீட்டில் வசித்து வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத் தம்பதியினர் 15 வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டு திக்எல்லகந்த பிரதேசத்தில் சிறிய குடிசை ஒன்றினை அமைத்து இவர்கள் இருவர் மாத்திரம் வசித்து வந்துள்ளனர். நீண்டகாலமாக நோயினால் பாதிக்கப்பட்டிருந்த தனது கணவரை குறித்த பெண் பராமரித்து வந்துள்ளதுடன், பெரிதும் சிரமப்பட்டு கணவனுக்கு தேவையான மருந்து மாத்திரைகளையும் பெற்றுக் கொடுத்துள்ளார். இவ்வாறிருக்கையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவரது கணவன் உயிரிழந்துள்ளார். கணவனின் பிரிவால் மனரீதியாக பாதிப்படைந்த குறித்த பெண் தனது கணவனின் உயிரிழப்பு குறித்த யாரிடமும் தெரிவிக்காது சடலத்தை வீட்டினுள்ளேயே வைத்து வழமை போன்று அன்றாட செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்துள்ளதுடன் சுமார் 10 நாட்களுக்கு அதிகமாக சடலத்துடன் இருந்துள்ளார் என தெரியவந்துள்ளது. அப் பெண்ணின் வீட்டுக்கு அயலில் வசித்து வரும் நபரொருவர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக அவ் வழியாக சென்றிருந்த வேளையில் அவ் வீட்டிலிருந்து துர்மணம் வீசியமையால் சந்தேகம் கொண்டு வீட்டுக்குள் சென்ற பார்த்த வேளையில் அழுகிய நிலையில் அந் நபரின் சடலத்தினை கண்டுபிடித்துள்ளார். பின்னர் தெரணியகல பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து மேற்கொண்ட விசாரணைகளிலிருந்து இந் நபர் சுகயீமடைந்து உயிரிழந்திருந்தமை தெரியவந்துள்ளது.