தமிழீழ அரசியல்துறை கனடா , நாம் வாழும் இந்த நாட்டின் அரச சட்ட திட்டத்திற்கு உட்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் பிரதான நோக்கம், எமது விடுதலை நோக்கிய பயணத்தை வலுப்படுத்த, கனடாவில் வாழும் தமிழீழ பூர்வீக குடிமக்களிடையே அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் அவர்களின் அரசியல் பெருவிருப்பங்களை நிறைவேற்றுவதும் ஆகும்.
தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் தமது 2008 ஆம் ஆண்டு மாவீரர் தின உரையில்
கூறியபடி, சிங்கள தேசம் சமாதானக் கதவுகளை இறுகச் சாத்திவிட்டுத் தமிழர் தேசத்தின் மீது போர் தொடுத்தது. அனைத்துலகத்தின் அனுசரணையோடு கைச்சாத்தான போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் ஒருதலைப்பட்சமாகக் கிழித்தெறிந்தது. அப்போது சமாதானம் பேசிய உலக நாடுகள் ஒப்புக்குத்தானும் இதனைக் கண்டிக்கவில்லை. கவலை கூடத் தெரிவிக்கவில்லை.
இறுதி போர் காலத்தில், தமிழீழ அரசின் வெளியுலகக் கட்டமைப்புக்கள் திறம்பட செயல்பட்டிருப்பின் இந்த நிலை நிச்சயமாக மாற்றி அமைக்கப் பட்டிருக்கும்.
ஆகவேதான், எமது தேசியத் தலைவரின் பெருவிருப்புக்கு அமைய எமது விடுதலை நோக்கிய அரசியல் போராட்டத்தின் தவிர்க்க முடியாத தேவையை புலம்பெயர்ந்து வாழும் நம் தேசத்து இளைய சமுதாயத்துக்கு உணர்த்துவதன் மூலம் அவர்களை தாங்கள் வாழும் அந்தந்த நாடுகளின் பிரதான அரசியல் நீரோட்டத்துக்குள் இணைத்து, நமக்கு வேண்டிய மாற்றங்களின் வேர்களாக நாங்களே இருக்க துணிந்துள்ளோம்.
16 வயதிற்கு மேற்பட்ட தமிழீழத்து பூர்வகுடிகளான தமிழர்கள் மற்றும் கனடாவில் பிறந்த ஈழத்து தமிழ் இளையோர்கள் கனடா தமிழீழ அரசியல்துறையுடன் இணைந்து பயணிக்கின்றார்கள். மேலும், அரசியல்துறையானது, எமது இனத்தின் மொழி,தொன்மை, தாயகம் சார்ந்த தேசிய கோட்பாடுகள்,கலை கலாச்சாரம், தேசியத்தின் அடையாளங்கள், மத உணர்வுகள், பாரம்பரிய விளையாட்டுக்கள், இவற்றை சிதைவடையாமல் காப்பதற்கு புலம்பெயர் தேசமான கனடாவில் இதற்கான வேலைத்திட்டங்களை ஆரம்பித்து செயற்பட்டு வருகின்றது. Thamileela Arasiyalthurai Canada, a vibrant community organization committed to creating political awareness and advocating for the rights of the Eelam Tamil community. Thamileela Arasiyalthurai Canada, une organisation communautaire dynamique engagée à créer une prise de conscience politique et à défendre les droits de la communauté tamoule d'Eelam.