18/07/2026
அனைவருக்கும் வணக்கம்.
கடந்த 20 செப்டம்பர் 2025. அன்று.
விழுப்புரம் மாவட்டம் திமுக அயலக அணியில் இருந்து திரு. நூர் என்பவர்.
நமது NRTIA அமைப்பின் தலைவர்
திரு. முகமது ஹுசைன் மாலிம் அவர்களைத் தொடர்பு கொண்டு.
வேலூரைச் சேர்ந்த திரு. பாலு ( வயது 27) என்பவர் 02 sep 25 அன்று இங்கு, பஹ்ரைன்இல் சாலையை கடக்கும் போது, விபத்தில் சிக்கி மருத்துவ மனையில் இருப்பதாகவும் அவரைப் பார்க்க, தாயகத்தில் இருந்து அவரின் அண்ணன் திரு. பாலாஜி என்பவர் வந்திருப்பதாகவும், அவர்களுக்குத் தேவையான அடிப்படை உதவிகளை செய்து தரும்படி கோரிக்கை விடுத்தார்.
தலைவர் அவர்கள் என்னை அழைத்து விபரங்களை கூறி, மருத்துவ மனைக்கு சென்று பாருங்கள் என்றார்.
அதன் அடிப்படையில், பொதுச் செயலாளர் திரு இஸ்மாயில் அவர்களுடன் சென்று BDF மருத்துவ மனைக்குச் சென்று பார்த்தோம்.
விபத்தில் சிக்கி, கடந்த 18 நாட்கள் கோமாவில் இருந்த திரு. பாலு அன்று காலையில் தான் சற்று மீண்டு வந்துள்ளார்.
மறுநாள், அவரின் அண்ணன் திரு. பாலாஜி அவர்களை அழைத்து கொண்டு இந்திய தூதரகம் சென்று அங்கு தேவையான அடிப்படை சட்ட உதவிகளைச் செய்து கொடுத்தோம்.
திரு. பாலு வேலை செய்யும் நிர்வாகம் சிறந்த காப்பீட்டு திட்டம் வைத்துள்ளதால் நல்ல முறையில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப் பட்டது.
திரு. பாலாஜி அவர்கள் நமது தலைவர் திரு. முகமது ஹுசைன் மாலிம் அவர்களைச் சந்தித்து தம்பியின் நிலவரம் பற்றி எடுத்துக் கூறினார். அவருக்கு தேவையான ஆலோசனைகளை தலைவர் வழங்கினார்.
அவர்கள் தாயகம் திரும்பி செல்லும் வரை அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் நமது NRTIA அமைப்பு செய்யும் என்று ஆறுதல் கூறினார்.
09 October 2025.
திரு பாலு அவர்களை, மருத்துவ மனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்தப் பிறகு, தலைவர் திரு. முகமது ஹுசைன் மாலிம் அவர்களின் ஆலோசனைப்படி.
வழக்கறிஞர் அவர்களை சந்தித்து, விபத்து காப்பீட்டு பெற ஆலோசித்து முடிவெடுத்து.
வழக்கறிஞர் அவர்களுக்கு பவர் ஆஃப் அட்டர்னி கொடுக்கப் பட்டது.
மேல் சிகிச்சைக்காக திரு. பாலு அவர்கள் தாயகம் திரும்பி செல்கிறார். உடன் அவருடைய அண்ணன் திரு பாலாஜி அவர்களும்.
10 October 25,ஆம் தேதி விமான நிலையத்தில் வழி அனுப்பி வைத்தோம். நமது NRTIA துணை அமைப்பாளர் திரு லலித் அவர்களும் உடன் இருந்தார்.
ஊருக்கு சென்ற திரு. பாலு அவர்களுக்கு, அங்கு மீண்டும் உடல் நலம் பாதிக்கப்பட்டு..
மூளை அறுவை சிகிச்சை மற்றும் மூட்டு அறுவை சிகிச்சை நடைபெற்றது. வலது பக்கம் கண் பார்வை முற்றிலும் இழந்து விட்டது
இந்நிலையில் வழக்கு பற்றி மேல் விசாரணைக்காகவும், வேலை வேண்டும் என்பதாலும், இந்த ஆண்டு 2026, ஜனவரி மாதம் இறுதியில் திரு. பாலு மீண்டும் பஹ்ரைன் வந்தார்.
09 ஏப்ரல் 2026 அன்று, நீதிமன்ற உத்தரவின் பெயரில், திரு. பாலு அவர்களை. இங்குள்ள medical high commission முன்பாக ஆஜர் செய்தோம்.
அங்கிருந்த 6 மருத்துவர்கள் கொண்ட, மருத்துவ விசாரணைக் குழு, பாலுவின் உடல் பரிசோதனை மற்றும் மனரீதியான பாதிப்புகளை எல்லாம் கேட்டறிந்து கொண்டு அறிக்கை தயாரித்துக் கொண்டார்கள்.
வழக்கறிஞர், நமது பொறுப்பாளர் அவர்களை தொடர்பு கொண்டு.
வழக்கு, திரு. பாலு அவர்களுக்கு சாதகமாக நல்ல முறையில் தீர்ப்பு கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
14 ஏப்ரல் 2026 அன்று மாலை பாலு அவர்கள்.
நமது பொறுப்பார்
திரு. முகமது ஹுசைன் மாலிம் அவர்களை சந்தித்து தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.
இந்த சந்திப்பின் போது,
சமூக சேவை செயலாளர் திரு. சல்மான் அவர்களும், பொதுச் செயலாளர் திரு மேலப்பூந்தை இஸ்மாயில் அவர்களும் உடன் இருந்தார்கள்.
16 ஜூலை 26.
பஹ்ரைன் NRTIA அமைப்பின் மீண்டும் புதியதொரு மைல் கல் / மெகா சாதனை.
முதலில் தலைவர் திரு. முகமது ஹுசைன் மாலிம் அவர்களுக்கு பாராட்டுகளும், நன்றிகளும், வாழ்த்துகளும்.
வழக்கை, நமது NRTIA தலைவர் தொடர்ந்து பல கண்காணித்து வந்தார்.
அந்த வழக்கில், தலைவர் அவர்கள் நியமித்த வழக்கறிஞர் சிறப்பாக பணியாற்றி உள்ளார்,
இன்று இறுதி தீர்ப்பு வந்து விட்டது வழக்கில் வெற்றியும் பெற்றுள்ளோம்.
திரு. பாலு அவர்களுக்கு நஷ்ட ஈடாக இந்திய மதிப்பில் சற்று ஏறக்குறைய ஒரு கோடி ரூபாய் கிடைக்க வாய்ப்பு மிக அதிகமாக உள்ளது.
16 ஜூலை 26 அன்று மாலை, மரியாதை நிமிர்தமாக திரு. பாலு அவர்கள், தலைவர் திரு. முகமது ஹுசைன் மாலிம் அவர்களை சந்தித்து கண்ணீர் மல்க தன் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.
உடன். நமது சமூக சேவை செயலாளர் திரு. சல்மான் மாலிம் அவர்கள்.
நன்றி.
இவண்
NRTIA பஹ்ரைன்.
17 ஜூலை 26 ( வெள்ளிக்கிழமை)