SDPI புதுமடம் வடக்குகிளை

  • Home
  • SDPI புதுமடம் வடக்குகிளை

SDPI புதுமடம் வடக்குகிளை Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SDPI புதுமடம் வடக்குகிளை, Political organisation, .

💪💪💪
07/01/2024

💪💪💪

வாழ்த்துகள்
22/12/2023

வாழ்த்துகள்

புதுமடத்தில் டெங்கு காய்ச்சல் இல்லாத வீடு இல்லை! ஊராட்சியின் மெத்தன போக்கால் வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்! டெங்குவை கட...
17/12/2023

புதுமடத்தில் டெங்கு காய்ச்சல் இல்லாத வீடு இல்லை! ஊராட்சியின் மெத்தன போக்கால் வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்! டெங்குவை கட்டுப்படுத்த SDPI கட்சி கோரிக்கை வைப்பதோடு, டெங்குவை தடுக்க எந்த முன்னெடுப்புகள் செய்யாத ஊராட்சி மன்ற தலைவரை SDPI சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்!

புதுமடத்தில் கடந்த ஒரு மாதமாக டெங்கு காய்ச்சலால் பலரும் பாதிக்கப்பட்டு வரும் செய்திகளும், நாளுக்கு நாள் டெங்குவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் செய்தியும் மிக கவலையை ஏற்படுத்துகிறது. இதுவரை எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்ற வெள்ளை அறிக்கையை ஊராட்சி மன்றம் வெளியிட வேன்டும்.

மழை காலம் தொடங்கும் முன்பே முன்னெச்சரிக்கை நடவடிக்கையை ஊராட்சி மன்ற தலைவர் செய்திருக்க வேன்டும். ஆனால் அவரின் மெத்தன போக்கால் அவர் செய்யாமல் போனதின் விளைவால் பொது மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தற்போது வரை கூட டெங்குவை கட்டுப்படுத்தும் ஆக்கப்பூர்வமான எந்த நடவடிக்கையும் ஊராட்சி மன்ற தலைவர் எடுக்க வில்லை என்பதால் அவரை கடுமையாக SDPI சார்பாக கண்டிக்கின்றோம்.

இந்த ஊராட்சி மன்ற தலைவரின் பதவி காலத்தில் சுகாதாரத்துறை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு படு மோசமாக செயல்பட்டு கொன்டு இருக்கின்றது. எனவே ஊராட்சி மன்றமும், சுகாதார துறையும் இணைந்து போர்க்கால அடிப்படையில் டெங்குவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென SDPI சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

கொசுவை ஒழிக்க பூட்டி கிடக்கும் வீடுகளின் மொட்டை மாடியில் தண்ணீரை அகற்றல், பொது மக்களுக்கு டெங்குவை ஒழிக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தல், கிருமி நாசினி தெளித்தல், புகை மருந்து எல்லா இடத்திலும் ஒன்றுக்கு இரண்டு முறை தொடர்ந்து அடித்தல், அரசு மற்றும் தனியார் இடங்களை சுத்தமாக வைத்தல் போன்ற முழுவீச்சில் அரசு செயல்பட வேன்டும்.

பொதுமக்களும் தண்ணீர் தேங்கிய இடங்களை அகற்றி கொசு உருவாகாத வண்ணம் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.

ஊராட்சி மன்ற தலைவர் கொஞ்சமேனும் மக்களின் நலனில் அக்கறை காட்ட வேண்டும். சம்பிரதாயம் மற்றும் கண் துடைப்பிற்கு வேலை செய்யாமல் உண்மையில் இருக்கின்ற பதவிக்கு உண்மையாக வேலை செய்ய வேண்டுமென கேட்டு கொள்கிறேன்.

டெங்கு காய்ச்சலால் ஒரு பக்கம் மக்கள் உடலால் கடும் அவதிக்கு உள்ளாகுவதோடு, பொருளாதாரம் இழப்பிற்கும் ஆளாகி வருகின்றனர். குழந்தைகள், வயதானவர்கள் என அஞ்சி அஞ்சி அன்றாட வாழ்க்கையை கழிக்கின்றனர்.

இனி வரும் காலங்களில் டெங்குவை கட்டுப்படுத்த அரசுக்கு அழுத்தம் கொடுத்து, அரசை வேலை செய்ய வைக்கும் முழு பொறுப்பையும் பொது மக்கள் சார்பாக SDPI முன்னெடுத்து செய்யும்.

மேலும் SDPI சார்பாக பொது மக்களுக்கு கசாயம் வழங்குதல், விழிப்புணர்வு பிரசங்கம் செய்தல், அரசுக்கு எழுத்து பூர்வமான கோரிக்கை வைத்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் அடுத்தடுத்த நாளில் SDPI செய்யும்.

இரண்டு வார காலத்தில் டெங்குவை கட்டுபடுத்தாவிட்டால், அரசாங்கம் கண்டு கொள்ளவில்லை என்றால் மிகப்பெரிய மக்கள் போராட்டத்தை முன்னெடுத்து ஊராட்சி மன்றதிற்கு பூட்டு போடும் போராட்டம் 31/12/23 நடத்தப்படும் என SDPI எச்சரிக்கை செய்கிறது.

இவன்

செய்யது இப்ராகிம்,
SDPI கட்சி - கிளை தலைவர்,
புதுமடம் கிளை,
இராமநாதபுரம் சட்டமன்ற கிழக்கு தொகுதி.

29/06/2022
புதுமடம் SDPI சார்பாக வாழ்த்துகிறோம்.
14/03/2022

புதுமடம் SDPI சார்பாக வாழ்த்துகிறோம்.

புதுமடத்தில் தொடர் காய்ச்சலும், தொடர் வெறிநாய் கடித்தலும் பற்றி SDPI கவலை தெரிவிப்பதோடு, போதுமான முன்னேற்பாடு இல்லாததே க...
16/01/2022

புதுமடத்தில் தொடர் காய்ச்சலும், தொடர் வெறிநாய் கடித்தலும் பற்றி SDPI கவலை தெரிவிப்பதோடு, போதுமான முன்னேற்பாடு இல்லாததே காரணம் என SDPI குற்றச்சாட்டு.!

நேற்று ஜனவரி 15 ஒரு சிறுமியை வெறிநாய் கடித்துள்ளது. ஏற்கனவே பல பேரை கடித்த வெறி நாய் இறந்து விட்ட நிலையில் மற்றொரு வெறிநாய் மூலம் இச்சம்பவம் நடந்தேறியது மிக கவலையலிக்கிறது. அதுமட்டும் இல்லாமல் புதுமடத்தில் தொடர்ச்சியான காய்ச்சலால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

நாய் நமது புதுமடம் ஊராட்சியில் தான் அதிகமாக பிடிக்கப்படுகிறது. இதற்கென பலமுறை ஊராட்சி நிர்வாகத்தால் நிதி ஒதுக்கப்படுகிறது. அப்படி இருந்தும் நாய் கட்டுப்படுத்த முடியாததும், தொடர்ச்சியாக வெறி பிடித்து கடிப்பதும் வாடிக்கையாகி விட்டது. எனவே பிடிக்கப்படும் நாய்கள் எங்கே விடப்படுகின்றன. புதுமடத்தின் அருகாமையில் நாய் பிடிப்பவர்கள் விட்டு விடுகின்றனர் என்ற செய்தி உண்மையா.? என்பதை ஊராட்சி மன்றம் தெளிவுபடுத்த வேண்டும். இனிமேல் பிடிக்கப்படும் நாய்களுக்கு ஏதாவது அடையாளம் ஊராட்சி பதிய வேண்டும். இது நாய்கள் மீண்டும் வருகிறதா என்பதை தெளிவுபடுத்த உதவும். எனவே பொது மக்கள் வெளியே செல்லவே அச்சப்படும் சூழலே போக்க வெறிநாய்களை கொலை செய்து, தெரு நாய்களை பிடிக்க ஊராட்சி மன்றம் போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும்.

மேலும் முன்பெல்லாம் சுகாதாரத்துறை சார்பாக கிணற்றுக்கு மருந்து தெளித்தல், வீட்டில் மட்டை போன்ற சுகாதாரத்தை பாதிக்கும் அல்லது கொசுவை உற்பத்தி செய்யும் ஏதாவது இருக்கிறதா என ஆய்வு செய்ய வருவார்கள். தற்போது அவர்கள் முற்றிலுமாக வருவது கிடையாது. கடந்த முறை அடிக்கப்பட்ட கொசு மருந்து ஆட்டோவில் வைத்து போய்க்கொண்டே அடித்துள்ளனர். இதனால் ஊராட்சி பணம் தான் நஷ்டப்படுமே தவிர. கொசுக்களை கட்டுப்படுத்தவோ, உற்பத்தியை தடுக்கவோ முடியாது. எனவே இதுபோல முன்னெச்சரிக்கை குறைபாடுகளால் இன்று காய்ச்சல் ஊர் முழுவதும் பரவலாக கிடக்கிறது. பாதிக்கப்பட்ட நபர் மீண்டும் காய்ச்சலால் பாதிக்கப்படும் சம்பவமும் நடைபெற்று வருகிறது. எனவே ஊராட்சி மன்றம், சுகாதாரத்துறை வீட்டுக்கு வீடு சென்று மக்கள் கொசுக்கள் இல்லாத வகையில் சுற்றுப்புறத்தை வைத்துள்ளார்களா.? சாக்கடை விடுகிறார்களா.? என்பதை கண்டறிந்து அதை எச்சரிக்கை செய்து அப்புறப்படுத்த வேண்டும். மேலும் நடந்து சென்று அனைத்து தெருக்களிலும் புகை மருந்து அடிக்க வேண்டும். பல பகுதிகள் அடிக்கப்படாமல் விடப்படுகிறது என்பதையும் ஊராட்சி நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

எனவே SDPI கட்சியின் இந்த இரண்டு கோரிக்கையை போர்க்கால அடிப்படையில் செய்ய ஊராட்சி நிர்வாகமும், சுகாதார துறையும் முன்வர வேண்டும்.

இப்படிக்கு

SDPI கட்சி,
புதுமடம் கிளை.

புதுமடம் SDPI கட்சியின் தொடர் போராட்டத்தின் காரணமாக கடல் அரிப்பு தடுப்பு சுவர் கட்டுவதற்கு திட்ட மதிப்பீடு அறிக்கையினை த...
11/12/2021

புதுமடம் SDPI கட்சியின் தொடர் போராட்டத்தின் காரணமாக கடல் அரிப்பு தடுப்பு சுவர் கட்டுவதற்கு திட்ட மதிப்பீடு அறிக்கையினை தயார் செய்து அனுப்ப அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதற்கான அனுமதி கடிதம் இன்று SDPI கட்சிக்கு கிடைக்க பெற்றது.

இதுவரை இதற்காக SDPI செய்த முன்னெடுப்புகள்..

மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், மீன்வளதுறை அமைச்சர் ஆகியோருக்கு மனு கொடுக்கப்பட்டது. முதலமைச்சருக்கு இருமுறை மனு கொடுக்கப்பட்டது. அதன் பெயரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

செய்யது இப்ராகிம்,
கிளை தலைவர்,
SDPI கட்சி,
புதுமடம் வடக்கு கிளை

இன்று SDPI 5வது வார்டு உறுப்பினர் முகம்மது ஜாபர் கான் அவர்கள் தனது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் குப்பையை சுத்தம் செய்தார...
11/12/2021

இன்று SDPI 5வது வார்டு உறுப்பினர் முகம்மது ஜாபர் கான் அவர்கள் தனது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் குப்பையை சுத்தம் செய்தார்.

நாம் இந்த இடத்தில் ஏற்கனவே ஒரு மாதத்திற்கு முன்பு குப்பையை அகற்றினோம். ஆனால் மக்கள் மீண்டும் அந்த இடத்தில் குப்பைகளை குவித்து வருகின்றனர். எனவே பொது மக்கள் அங்கு குப்பைகளை கொட்டுவதை தவிர்க்கவும், ஊராட்சி மன்றம் அவர்களுக்கு குப்பைகளை எடுப்பதற்கு உதவி செய்யவும் கேட்டு கொள்கிறோம். மேலும் தொடர்ந்து தனது வார்டில் சிறப்பாக பணியாற்றி வரும் முகம்மது ஜாபர் கான் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

செய்யது இப்ராகிம்,
கிளை தலைவர்,
SDPI கட்சி,
புதுமடம் வடக்கு கிளை.

SDPI 4வது வார்டு மெம்பர் தொடர் முயற்சியின் காரணமாக சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. வார்டு மெம்பரின் கோரிக்கையை ஏற்று சால...
08/12/2021

SDPI 4வது வார்டு மெம்பர் தொடர் முயற்சியின் காரணமாக சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. வார்டு மெம்பரின் கோரிக்கையை ஏற்று சாலை அமைத்து கொடுத்த ஊராட்சி மன்றத்திற்கு நன்றிகள்.

தமிழக அரசே ! மாவட்ட நிர்வாகமே !!காவல்துறையால் தாக்கப்பட்டு இறந்த கல்லூரி மாணவர் மணிகண்டனுக்கு நீதி வழங்கிடு !மாணவர் படுக...
06/12/2021

தமிழக அரசே ! மாவட்ட நிர்வாகமே !!

காவல்துறையால் தாக்கப்பட்டு இறந்த கல்லூரி மாணவர் மணிகண்டனுக்கு நீதி வழங்கிடு !

மாணவர் படுகொலையில் தொடர்புடைய காவல்துறை அதிகாரிகளை கைது செய்து முறைப்படி விசாரணை நடத்திடு ..

மாணவரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கிடு ...

December 6
06/12/2021

December 6

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when SDPI புதுமடம் வடக்குகிளை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your organization to be the top-listed Government Service?

Share