வாசிப்பை நேசிப்போம்

வாசிப்பை நேசிப்போம் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from வாசிப்பை நேசிப்போம், Chennai.

மூங்கில்காடு
10/07/2021

மூங்கில்காடு

🎋மூங்கில்காடு     🎙️ கலந்தாய்வு நிகழ்ச்சி 🎙️                   தலைப்பு                 'மலையகம்'     " வாழ்வும் இலக்கியம...
06/07/2021

🎋மூங்கில்காடு
🎙️ கலந்தாய்வு நிகழ்ச்சி 🎙️

தலைப்பு
'மலையகம்'
" வாழ்வும் இலக்கியமும்"

🕕Time: Jul 6, 2021 06:00 PM

Join Zoom Meeting
https://zoom.us/j/92959498668?pwd=TUhUTUszZVlTdVVubjBnOVg1OXk3dz09

Meeting ID: 929 5949 8668
Passcode: 20210706

➖➖➖➖➖➖➖➖

06/07/2021
06.07.2021 அன்று நடைபெறவிருக்கும் தோழர்கள் சகோதரர்கள் தெரிவிக்கலாம்.
01/07/2021

06.07.2021 அன்று நடைபெறவிருக்கும் தோழர்கள் சகோதரர்கள் தெரிவிக்கலாம்.

பழுப்பேறிய கண்களால் கிளைநதியென என் உடலில் ஓடிக்கொண்டிருக்கும் நரம்பினைத் தேடிக்கொண்டிருந்தாள் அந்த செவிலி... "நரம்பன் கட...
18/05/2021

பழுப்பேறிய கண்களால் கிளைநதியென என் உடலில் ஓடிக்கொண்டிருக்கும் நரம்பினைத் தேடிக்கொண்டிருந்தாள் அந்த செவிலி... "நரம்பன் கடுசானவன்" என்று தம்பியின் கோப்பை தேநீரையும் திருடிக்குடித்தபோது பெயர் பெற்ற என் உடலில் நரம்பு தேட அவளுக்கு அவ்வளவு நேரம் எடுக்கவில்லை... கண்களை பார்த்து கொண்டிருக்கும் நேரத்தில் கையில் பஞ்சை கொடுத்து விட்டு நகர்ந்தாள்... "இது ஏன் நரம்புல போடுறீங்க " என கேட்டேன். இது " ஒனக்கு தேவயில்லாத சோலி" என்பதை போல பார்த்தாள்... "டாக்டர் ட என்ன சொன்னீங்க அதுக்குத்தான்" என்றாள்...

தலையிலிருந்து மெதுவாக அந்த அதிர்வு உடல் முழுதும் பரவியது... எங்க அய்யாவ பார்த்தேன், "நரம்பூசி போட்டா அப்புடித்தான் இருக்கும்"னார்... "கெழடு கெட்டைகளே போட்டுட்டு எப்படி திரியிது"ன்னுட்டு அவர் நகர்ந்தார் மருந்து வாங்க...

இரண்டு நாற்காலிகள் போடப்பட்டிருந்த அந்த வரவேற்பரையில் கையினை தேய்த்துக் கொண்டிருந்தேன்...

ரொம்ப மோசமா இழுக்குதே... எதோ பழைய மொழிபெயர்ப்பு நாவல் மாரி இருக்குல்ல ...
இப்பிடி சொல்லுதேன் கேளுங்க...

தெற்க பஜாருக்குள்ள போயி 'கடும்டீயும் பால்பன்னையும்' உள்ள இறக்கிட்டு , வடக்க திரும்பி வீட்டுக்கு போவைல வராத பதிவாளுக்கான 'சூப்'பை குடித்துவிட்டு வண்டியில் ஏறினேன்...
இருமல் சளி எதுவுமில்லையே என்று மனசு குதியாளம் போடுது... பெட்ரோல் பல்க்க தாண்டுணதும் நடுங்குது ஒடம்பு... பொரியல்லை தின்னிட்டு ஊர்நாயம் பேசுற மேல வீட்டு கண்ணாடிக்கெழவரு மாதிரி என்ன மாத்திருச்சு அந்த நடுக்கம் .. அவரு மாதிரி கம்புக்கூட்டுக்குள்ள கைய வச்சு நடுக்கத்த கொறச்சு பாக்கேன்.ஒடம்பு கட்டுப்பட மாட்டிக்கு ... வீட்டுக்கு போனதும் படுத்துரனும்னு நெனச்சிகிட்டன்.பலசரக்கு சாமான் வாங்குன பய்ய கீழ போடாம வீட்டுக்கு கொண்டாந்துட்டு காத்தாடிய அமத்துனேன்... " ஊசி போட்டியளா " ன்னா அம்மா... "எனக்கு கிடு கிடுன்னு வருது , வாட அடிக்கி"ன்னேன்.. அவளுக்குனா சிரிப்பாணியா இருக்கு ... எங்கய்யா அரிசிப்பய்ய தூக்கிட்டு வந்து வாசல்ல போடவும் " "எனக்கு கிடு கிடுன்னு இருக்கு"ங்கவும், "ஒனக்கு எசக்கில்ல ல , போய் படுன்னாரு "

விருட்டுன்னு மச்சில போயி ஒரு போர்வைய மூடி கட்டில்ல மளந்தேன்... 'நாசியின் துளைகள் கொதிகலன் போலே ' ன்னு ஒரு கவித எழுதுனது இப்ப ஞாபகம் வந்துச்சு... ஏன்னா ஒடம்பு கொதிகலனாத்தான் மாறிட்டு இருந்துச்சு... வாட அடிக்கா, இல்ல கொதிக்கான்னு உடம்புக்கே கொழப்பம்... எதயம் வேமா துடிக்கி, மூச்சு வேகமா ஏறி எறங்குது... இன்னையோட நம்ம சோலி முடிஞ்சது பொலுக்கோ ன்னு தோனிக்கிட்டே இருக்கு... எப்புடிச் சாவோம்... ஆங்... எதயம் இப்பிடி துடிக்கே அது வெடிச்சுத்தாம் சாவோம் னு நெனச்சிகிட்டேன்... இப்பிடி கெடந்து துடிக்கும் போது வானூருல தோத்துப்போன தோழர் வன்னியரசு மொகம் யாவகத்துக்கு வருது... 'வேண்டாம் வேற எதையாது நென' ன்னு சொல்லி பாட்டு வரி வருதான்னு பாத்தேன்... அதுவுந்தோனல ...

'' கொஞ்சமாது கடவுள் நம்பிக்க இருக்கணுமுடா... தாய் தாப்பனையாது மதிக்கனும் '' னு எங்கய்யா தான் வந்தாரு யாவகத்துக்கு ... ஒடம்ப இன்னும் மொடக்குனேன் போர்வக்குள்ளயே... மூச்சு வேமா போய்ட்டு வருது ... சொல்லுப்பேச்சு கேட்க மாட்டேங்கி ஒடம்பு... தீடீர்னு தோழர் பகத்சிங் எழுதுன " நான் ஏன் நாத்திகன்" ல உள்ள வரிகள்லா எதோ காட்சி மாரி ஓடுது... ஆமா இந்த சாரு நிவேதிதா ஏன் கடவுள் நம்பிக்கையாளரா மாறுனாரு ... இவ்வளவு தொலவுக்கு என்ன நெனச்சாலும் ஒடம்பு நடுக்கங்கொறையல ... எங்காத்தா வந்ததும் இன்னோரு போர்வய எடுத்து மேல மூடச்சொன்னேன்... நடுங்குதா , கொதிக்கா ன்னு சந்தேகப்பட்டு கய்ய கழுத்துல வச்சுப்பாத்தேன் .. ச்சுடுது மேலு , அதே நேரம் நடுங்கவுஞ்செய்யிது... என்னடா இது சிய்யினு இருக்கேன்னுட்டு இருக்கேல " பூ அவிழும் பொழுதில் " னு மனசுல பாட்டு வரி ஓடுது... இது வேண்டாம்னுட்டு " பூமியில் ஓரு வானவில் " னு ரெண்டு வரி பாடுதேன் மனசுக்குள்ளயே .... இந்த" மாயநதி " பாட்டு எப்பிடி சந்தோஷ் நாராயணன் போட்ருப்பாரு, என்ன மாதிரி நெலமையில போட்ருப்பாரு ன்னு தோனுது...இல்ல அதே மாரி இந்த "தூண்டில் மீனுக்கு " பாட்ட நெறய்ய வேரு கேட்ருக்க மாட்டானுங்கள்ள னு நெனப்பு ஓடுது... ஊசி போட்டதுல பைத்தியம் புடிச்சிருச்சா ,கொரோனா ஊசிக்குலா நம்ம ஒடம்பு தாங்குமா ... பாப்போம் என்ன செய்யன்னு , லேசா வேர்க்க ஆரம்பிக்கி . போர்வய எடுத்திட்டு வீட்ட பாக்கேன் , மங்கி போன மாரி வெளிச்சம் இருக்கு... மறுபடியும் மொடக்கி ஒருக்களிச்சு படுத்தேன்...

"தோசைய தட்டி விட்ராத, மூணு மாத்தரை இருக்கு தின்னிட்டு முழுங்கு" ன்னு ஒரு சத்தம்... நாலாவது நாளா இட்லியுந்தோசையுமா போவுதே ராத்திரிக்கி ன்னு யோசிச்சிட்டு , தாலத்துல இருந்த மூணு தோசயவும் காணாதத கண்ட மாரி தின்னேன்... இப்ப கொஞ்சம் காத்தாடிய போட்டா தாவலன்னு உக்காந்திருக்கேன்...

~ நரம்பூசியும் நடுங்கிய மேனியும் -பாபு
மே 5/2021

பெண்ணே...எவ்வளவு தைரியம் உனக்குயாரை கேட்டு காதலித்தாய் ?உனக்கு காதல் செய்யயார் தந்தது உரிமை ?தங்கையோ அக்காவோ மகளோநீ ஆணுக...
21/09/2020

பெண்ணே...
எவ்வளவு தைரியம் உனக்கு
யாரை கேட்டு காதலித்தாய் ?

உனக்கு காதல் செய்ய
யார் தந்தது உரிமை ?

தங்கையோ அக்காவோ மகளோ
நீ ஆணுக்கு அடிமையல்லவா ?

சுதந்திரமாய் முடிவெடுக்கும்
உரிமை உனக்கு கிடையாது
என்பதை மறந்துவிடாதே.

கணவு காணாதே.
காதல் செய்யாதே.
பறவையாய் பறக்க நினைக்காதே.
உன் சிறகுகள் அறுபட்டு போகும்,
பாசமிகு அண்ணன் தம்பிகளால்
அப்பாக்களால்.

அவர்கள் ஆண்கள்.
கலாச்சார காவலர்கள் அவர்கள்.

பூக்களால் அலங்கரித்து கொள்
பொட்டு வைத்துக்கொள்
உன் யோனியை நினைத்தே
பல நாளாய் ஏங்கியவன்
உன் யோனிக்குள் ஆண்மையை
காட்ட நித்தம் கணவு கண்டவன்
உன்னை திருமணம் என்ற பெயரில்
தாலி கயிறு கழுத்தில் மாட்டி
கூட்டி செல்ல
நிச்சயம் உன் குடும்பம்
கணவு காணும்...

ஆனால் நீ கணவு காணாதே
காதலிக்க வேண்டும் என்று.

ஒருவேளை நீ காதலித்து விட்டால்
காமம் கடந்து அன்பு நிலைத்து விட்டால்
உன் அன்பினால் ஆண் என்ற கர்வம் இழந்துவிட்டால்,
ஆண்களுக்கென்ன மரியாதை...

நீ அடிமையாக இருக்கவேண்டும் ஆதலால் காதல் செய்யாதே

இந்த ஆண்கள் எத்துனை
நல்லவர்கள் தெரியுமா !
உனக்கு எத்தனை பட்டங்கள்
தந்துள்ளார்கள்...

படி தாண்டா பத்தினி !
கற்புக்கரசி !
குனிந்த தலை நிமிராதவள் !
அமைதியானவள் !
இன்னும் எத்தனை !!!

ஆனால் நீயோ
படி தாண்டுகின்றாய்
தலை நிமிர்ந்து நடக்கின்றாய்
உரக்க பேசுகின்றாய்
ஆண்களை பார்த்து
உன் கற்பு எங்கே
என்று கேட்கின்றாய்...

அடிமை பெண் நீ
ஆண்களை பார்த்து கேட்கின்றாய்
எவ்வளவு தைரியம் ?!!!

நீ உயிர் வாழ வேண்டுமா
சாக வேண்டுமா என்று
முடிவெடுக்க வேண்டியவர்களே
ஆண்கள்தான்.
மறந்துவிட்டாயா ?

ஆண்கள் தந்த பட்டங்களை
எறிந்து விட்டு,
படி தாண்டி படித்து பட்டம் வாங்கும்
தைரியம் தந்தது யார் ?
தெரியும் ! நீ கருப்பு வண்ணத்தை நேசிக்கும் பொழுதே...

கருப்பை நேசித்து படிக்க பறக்க
நினைக்கின்றாயா ?
அப்படி நினைத்துவிடாதே...

காவியை நேசி...
கற்புக்கரசியாய்,
படி தாண்டா பத்தினியாய்,
ஆண்கள் அளித்த பட்டங்களோடு வாழலாம்...
ஆனால் நீ அவ்வப்பொழுது
ஆண் தேவைகளை
காவிக்குள் நிறைவேற்று
இல்லையேல்
ஆசிபாக்கள் நிலமைதான்
உனக்கும்.

நீ யாரை காதலிக்க வேண்டும்
யாருடன் படுக்க வேண்டும் என்று
முடிவெடுக்கும் அதிகாரம்
உனக்கில்லை என்பதை
மறந்தாயோ ???

கண்ணகியை மறந்தாயோ ?
சீதையை மறந்தாயோ ?

ஆண் எத்தனை பெண்களோடு
புணர்ந்தாலும்
அவன் ஆண்மையுள்ள வீரன்.

ஆனால் பெண் நீ
ஆண் ஒருவனை
நினைத்து பார்த்தாலே
நீ தேவடியாள் என்பதை
எப்படி மறந்தாய்...

இங்கே ஆண்கள்
பலரும் கோவலன்தான்
ஆதலால்
கண்ணகியாய் மட்டுமே இரு

மாதவியாய் அல்ல...

ஆணவப் படுகொலை
செய்யப்பட்ட காதலிகளாய் அல்ல...

- Raavan Suba

என்னை கல்லென பார்ப்ப(வ)னுங்ககடந்து சென்ற பொழுதுசிற்பி ஒருவன் மட்டும் என்னைசிலையென செதுக்கினான்.தேவையற்றதை நீக்கினான்புத்...
20/09/2020

என்னை கல்லென
பார்ப்ப(வ)னுங்க
கடந்து சென்ற பொழுது
சிற்பி ஒருவன் மட்டும் என்னை
சிலையென செதுக்கினான்.
தேவையற்றதை நீக்கினான்
புத்தனாய் மாற்றினான்.

அன்பின் உருவமானேன்.
அறிவின் ஒளியானேன்.

அறிவற்ற பார்ப்ப(வ)னுங்களுக்கு என்னை கண்டதும்
நடுநடுங்கியது.

புத்த துறவிகள் என் மீதமர்ந்து
அறிவை போதித்த பொழுது
நான் பல முறை கேட்டுள்ளேன்

சாதி வேண்டாம்
மதம் வேண்டாம்
நிறம் வேண்டாம்

சுதந்திரம் வேண்டும்
சமத்துவம் வேண்டும்
சகோதரத்துவம் வேண்டும்

என்றுரைத்த புத்தனின் உருவமாய்
என்னை பார்ப(வ)னுங்களுக்கு
கண்டிப்பாக நடுக்கமாகத்தானே
இருக்க வேண்டும்.

அறிவற்ற பார்ப்ப(வ)னுங்களால்
எங்களை போன்ற கல்லில் செய்த
புத்தனின் சிலையைத்தான்
சிதைக்க முடியுமே தவிர
புத்தனை அல்ல...

எத்தனை முறை சிதைத்தாலும்
மீண்டும் மீண்டும் புத்தன் வருவான்.

- Raavan Suba

09/09/2020

புத்தகங்களால் இணைந்தோம்
புத்தகங்களில் பயணிப்போம்...

தெருநாய் ஜிம்மியின் குரல்                         - இராவணன் சுபா
06/07/2020

தெருநாய் ஜிம்மியின் குரல்
- இராவணன் சுபா

Address

Chennai

Website

Alerts

Be the first to know and let us send you an email when வாசிப்பை நேசிப்போம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share