M.T. IBHAM

M.T. IBHAM Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from M.T. IBHAM, Social service, Habib Street, Pallivasalthurai, Kalpitiya, Puttalam.

Member of Kalpitiya Pradeshiya Sabha l Voice of The People l Kandakuliya Organizer l Fighting for Justice, Equality and Change l Social Activity l Voulanteer I ISF Agro Farming CEO l

12/06/2026
'பிரஜா சக்தி' வேலைத்திட்டத்தின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று கல்பிட்டி பிரதேச செயலகத்த...
12/06/2026

'பிரஜா சக்தி' வேலைத்திட்டத்தின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று கல்பிட்டி பிரதேச செயலகத்தின் பிரதான கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதன்போது, கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் உள்ள பிரஜா சக்தி குழுக்களினால் தேர்ந்தெடுக்கப்பட்ட செயற்திட்டங்கள் (Projects) மற்றும் அதற்கான மேலதிக அமைப்புகளைப் பெற்று அச்செயற்திட்டங்களை விரிவுபடுத்துவது குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

குறிப்பாக, மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பான விடயங்களுக்கு இங்கு முன்னுரிமை அளித்து கவனம் செலுத்தப்பட்டது.

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கற்பிட்டி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான M.J.M. பைசல் அவர்களின் தலைமையில், கல்பிட்டி பிரதேச செயலாளரின் வழிகாட்டலின் கீழ் இந்நிகழ்வு நடைபெற்றது.

இதில் கல்பிட்டி பிரதேச சபையின் தவிசாளர் A.S.R. ரிகாஸ் மற்றும் கற்பிட்டி பிரதேச சபையின் உப தவிசாளர் சமன் குமார ஹேரத் தேசிய மக்கள் சக்தியின் கற்பிட்டி அமைப்பாளரும் பிரதேச சபை உருப்பினர் சஞ்சீவ பெர்னான்டோ ஆகியோரும் கலந்துகொண்டனர்.

மேலும், பிரஜா சக்தி அமைப்பின் தலைவர்கள் மற்றும் அதனுடன் செயலாளர்களாக கடமையாற்றும் சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட ஏனைய உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

09/06/2026
09/06/2026

ஆற்று மணல் அனுமதியை கல்பிட்டி வரை வழங்க வேண்டும்!

இன்று நடைபெற்ற கல்பிட்டி பிரதேச சபை கூட்டத்தில் உறுப்பினர் M.T. இப்ஹாம் அவர்கள், மக்களின் முக்கிய தேவையான ஆற்று மணல் தொடர்பாக சபையின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

தற்போது ஆற்று மணல் கொண்டு வருவதற்கான Permit நுரைச்சோலை வரையிலேயே வழங்கப்படுவதாகவும், கல்பிட்டி வரை கொண்டு வருவதற்கான அனுமதி இல்லாததால், கல்பிட்டி மற்றும் சுற்றுப்புற மக்கள் அதிக செலவில் மணல் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதனால் சாதாரண மக்கள் வீடமைப்பு மற்றும் கட்டுமான தேவைகளுக்காக பெரும் பொருளாதார சுமையை எதிர்நோக்கி வருகின்றனர்.

எனவே, ஆற்று மணலை கல்பிட்டி வரை கொண்டு வருவதற்கான Permit அனுமதியை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறுப்பினர் M.T. இப்ஹாம் அவர்கள் சபையில் வேண்டுகோள் விடுத்தார்.

மக்களின் சுமையை குறைக்கும் இந்த கோரிக்கை விரைவில் நிறைவேற வேண்டும்.

Address

Habib Street, Pallivasalthurai, Kalpitiya
Puttalam
61356

Website

Alerts

Be the first to know and let us send you an email when M.T. IBHAM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category