Welfare Benefits Information Unit, Divisional Secretariat-Pottuvil

Welfare Benefits Information Unit, Divisional Secretariat-Pottuvil நலன்புரி நன்மைகள் தகவல் பிரிவு (அஸ்வெசும)
பிரதேச செயலகம் பொத்துவில்

26/03/2026

முதலாம் கட்டத்தில் நலன்புரி நன்மைகள் சபையின் QR பெற்று தகவல் புதுப்பிக்க விண்ணப்பித்தவர்களுக்கான அறிவித்தல்

நலன்புரி நன்மைகள் சபையில் முதலாம் கட்ட தகவல் புதுப்பித்தல் விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கு எதிர்வரும் தினங்களில் எமது அலுவலர்கள் தங்களது வீடுகளுக்கு வருகை தருவார்கள்.

எனவே, கீழ் குறிப்பட்டுள்ள ஆவணங்களை
தயார்ப்படுத்தி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

1. குடும்ப உறுப்பினர்களின் பிறப்பு சான்றிதழ்

2. குடும்ப உறுப்பினர்களின் தேசிய அடையாள அட்டை.

3. தொலைபேசி இலக்கம்

4. குடும்ப உறுப்பினர்களின் கல்வி தொடர்பான ஆவணங்கள்

5. நாட்பற்ற நோய் மற்றும் அங்கவீனம் தொடர்பான ஆவணங்கள்

6. சமூர்த்தி அங்கவீனம் சிறுநீரக நோய் மற்றும் ஏனைய கொடுப்பனவுகள் தொடர்பான ஆவணம்

7. குடும்பத்தின் மாதாந்த செலவினம் ( உணவு , ஆடை , மின்சாரம் .....)

8. சகல உறுப்பினர்களினதும் வருமானம் , வெளிநாட்டு வருமானங்கள்

9. மின்சாரப் பட்டியல் (இறுதி மூன்று மாதங்கள்)

10. மேட்டுக்காணி மற்றும் வயல் காணிகள் இருப்பின் அதன் விபரம்

11. தம்வசம் உள்ள வாகனங்களின் விபரம் ( மோட்டார் சைக்கிளாயின் என்ஜின் 125CC க்கு மேற்பட்டது )

12. பொருளாதார செயற்பாட்டிற்குரிய சொத்துக்களின் விபரம் ( மீன்பிடிப் படகு /
விவசாய உபகரணங்கள் )

13. கால்நடைகளின் விபரம்

14. குடும்ப மற்றும் பொருளாதார செயற்பாட்டிற்கு தேவையான மாதாந்த
எரிபொருள்

15. வங்கியின் கணக்குப் புத்தகம்

தகவல்
பிரதேச செயலாளர்
பிரதேச செயலகம்
பொத்துவில்

முதியோர் கொடுப்பனவு - மார்ச் மாதம்
26/03/2026

முதியோர் கொடுப்பனவு - மார்ச் மாதம்

වැඩිහිටි දිමනාව : මාර්තු මස

26/03/2026

Video informing the public about the enumeration related to the Aswesuma first phase Resertification process (Tamil medium)

26/03/2026

අස්වැසුම පළමු අදියර තොරතුරු යථාවත් කිරීමේ ක්‍රියාවලියට අදාළ සංගණනය සම්බන්ධයෙන් මහජනතාව දැනුවත් කිරීමේ වීඩියෝව (සිංහල මාධ්‍ය)

20/01/2026

பொத்துவில் பிரதேச செயலக நலன்புரி நன்மைகள் தகவல் பிரிவின் செயற்பாடுகள் மற்றும் அஸ்சுவெசும திட்டம் சம்பந்தமாக கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி. எம்.எஸ். அப்துல் வாஸித் அவர்கள் இன்று 20.01.2026 ஆம் திகதி பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின் போது...

 #பிரியாவிடை_நிகழ்வு பொத்துவில் பிரதேச செயலகத்தில் பயிலுனர் பயிற்சிக்காக இணைக்கப்பட்டு நலன்புரி நன்மைகள் தகவல் பிரிவில் ...
20/01/2026

#பிரியாவிடை_நிகழ்வு

பொத்துவில் பிரதேச செயலகத்தில் பயிலுனர் பயிற்சிக்காக இணைக்கப்பட்டு நலன்புரி நன்மைகள் தகவல் பிரிவில் பயிலுனராக 03 மாதங்கள் பணியாற்றி இன்றைய தினம் 19.01.2026 ஆம் திகதி பிரியாவிடை பெற்ற எம்.எம் றக்ஸானா அவர்களுக்கும் மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

பொத்துவில் பிரதேச செயலாளர் அவர்களினால் சேவைக்கால சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப்பட்டதுடன் அவர்களுக்கான நினைவுச் சின்னமும் நினைவுப் பரிசும் நலன்புரி நன்மைகள் தகவல் உத்தியோகத்தர்களினால் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

இவருடைய மகத்தான சேவைக்கு பொத்துவில் மக்கள் சார்பிலும் அலுவலகம் சார்பிலும் வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

நலன்புரி நன்மைகள் தகவல் பிரிவு
பிரதேச செயலகம்
பொத்துவில்

19.01.2026பொத்துவில் பிரதேச செயலக நலன்புரி நன்மைகள் தகவல் பிரிவில் கிடைக்கப்பெற்ற அஸ்சுவெசும முதலாம் கட்ட தகவல் புதுப்பி...
20/01/2026

19.01.2026

பொத்துவில் பிரதேச செயலக நலன்புரி நன்மைகள் தகவல் பிரிவில் கிடைக்கப்பெற்ற அஸ்சுவெசும முதலாம் கட்ட தகவல் புதுப்பித்தல் விண்ணப்பங்கள் அனைத்தும் இனிதே தரவுத்தளத்தில் பதிப்பட்டுள்ளது என்ற மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் இந்த பணியை இரவுபகலாக நிறைவேற்ற அனுமதியும் ஆலோசனை வழங்கிய மதிப்பிற்குரிய பிரதேச செயலாளர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதோடு விண்ணப்பங்களை தரவுத்தளத்தில் பதிவு செய்ய ஒத்துழைப்பு வழங்கிய நலன்புரி நன்மைகள் தகவல் பிரிவு
உத்தியோகத்தர்களுகளான
எம்.எம்.எம். இஸ்திஹாக்,
எம்.எப். சப்னா,
எம் ஏ. அப்துர்ரஹ்மான் ஆகியோருக்கும் பயிலுனர்
எம்.எம். றக்ஸானா அவர்களுக்கும் அலுவலக உதவியாளர் எம். யஹியா அவர்களுக்கும் இந்த சந்தர்ப்பத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

நலன்புரி நன்மைகள் தகவல் பிரிவு
பிரதேச செயலகம்
பொத்துவில்

05.01.2026நலன்புரி நன்மைகள் சபையின் இரண்டாம் கட்ட அஸ்சுவெசும திட்டத்தின் மேல்முறையீடு மற்றும் உரிமை கோரிக்கை படிவம் விண்...
20/01/2026

05.01.2026

நலன்புரி நன்மைகள் சபையின் இரண்டாம் கட்ட அஸ்சுவெசும திட்டத்தின் மேல்முறையீடு மற்றும் உரிமை கோரிக்கை படிவம் விண்ணப்பித்த பயனாளிகளுக்கான நேர்முக கலந்துரையாடல் 05.01.2026 ஆம் திகதி திங்கட்கிழமையோடு முழுமையாக நிறைவு பெற்றது.

மேல்முறையீடு மற்றும் உரிமை கோரிக்கை குழுவின் தலைவர், குழுவின் உறுப்பினர்கள் மற்றும் அரசு சார்பற்ற நிறுவன சமூக சேவை உறுப்பினர்களுக்கும் நலன்புரி நன்மைகள் தகவல் பிரிவு உத்தியோகத்தர்களுக்கும் இந்த சந்தர்ப்பத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம்.

நலன்புரி நன்மைகள் தகவல் பிரிவு
பிரதேச செயலகம்
பொத்துவில்

31.12.2025பொத்துவில் பிரதேச செயலக நலன்புரி நன்மைகள் தகவல் பிரிவில் கிடைக்கப்பெற்ற அஸ்சுவெசும முதலாம் கட்ட மனக்குறை விண்ண...
20/01/2026

31.12.2025

பொத்துவில் பிரதேச செயலக நலன்புரி நன்மைகள் தகவல் பிரிவில் கிடைக்கப்பெற்ற அஸ்சுவெசும முதலாம் கட்ட மனக்குறை விண்ணப்பங்கள் அனைத்தும் இனிதே தரவுத்தளத்தில் பதிப்பட்டுள்ளது என்ற மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் இந்த பணியை இரவுபகலாக நிறைவேற்ற அனுமதியும் ஆலோசனை வழங்கிய மதிப்பிற்குரிய பிரதேச செயலாளர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதோடு விண்ணப்பங்களை தரவுத்தளத்தில் பதிவு செய்ய ஒத்துழைப்பு வழங்கிய நலன்புரி நன்மைகள் தகவல் பிரிவு
உத்தியோகத்தர்களுகளான
எம்.எம்.எம். இஸ்திஹாக்,
எம்.எப். சப்னா,
எம் ஏ. அப்துர்ரஹ்மான் ஆகியோருக்கும் பயிலுனர்
எம்.எம். றக்ஸானா அவர்களுக்கும் இந்த சந்தர்ப்பத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

நலன்புரி நன்மைகள் தகவல் பிரிவு
பிரதேச செயலகம்
பொத்துவில்

🔊📢பொதுமக்களுக்கான முக்கிய அறிவித்தல்🔉🗣️நலன்புரி நன்மைகள் சபையின் அஸ்வெசும முதலாம்கட்ட மீள்சான்றிதழ் செயற்திட்டம் எதிர்வர...
24/12/2025

🔊📢பொதுமக்களுக்கான முக்கிய அறிவித்தல்🔉🗣️

நலன்புரி நன்மைகள் சபையின் அஸ்வெசும முதலாம்கட்ட மீள்சான்றிதழ் செயற்திட்டம் எதிர்வரும் 31.12.2025 உடன் நிறைவடைகின்றது.

ஆகவே இதுவரை மீள்சான்றிதழ்/ தரவு இற்றைப்படுத்தல் நடவடிக்கையினை மேற்கொள்ளாத அனைவரும் விரைவாக குறித்த இற்றைப்படுத்தல் நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

இதற்கமைய, முதலாம் கட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் நன்மைகளை பெறுபவர்கள் மற்றும் விண்ணப்பித்து இன்னும் நன்மைகளை பெறாதவர்கள் என அனைத்து தரப்பினரதும் தகவல்கள் புதுப்பிக்கப்படுகின்றன.

தகவல்களை இதுவரை புதுப்பிக்காத அனைவரும் பின்வரும் முறைகளில் அதனைச் செய்துகொள்ள முடியும்:

https://eservices.wbb.gov.lk/ என்ற இணையதளத்திற்குச் சென்று ஒன்லைன் (Online) மூலம் தகவல்களைப் புதுப்பிக்கலாம்.

உரிய விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, தாம் வசிக்கும் பிரதேச செயலகத்தின் நலன்புரி நன்மைகள் தகவல் பிரிவில் ஒப்படைப்பதன் மூலம் தகவல்களைப் புதுப்பிக்கலாம்.

‼️‼️ முக்கியகுறிப்பு :
31.12.2025 ஆம் திகதிக்கு பின்னர் கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.❌❌❌

நலன்புரி நன்மைகள் தகவல் பிரிவு
பிரதேச செயலகம்
பொத்துவில்

முதியோர் கொடுப்பனவு - டிசம்பர் மாதம்
17/12/2025

முதியோர் கொடுப்பனவு - டிசம்பர் மாதம்

Address

Divisional Secretariat Pottuvil
Pottuvil
32500

Alerts

Be the first to know and let us send you an email when Welfare Benefits Information Unit, Divisional Secretariat-Pottuvil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share