𝗦𝘂𝗽𝗲𝗿 𝗖𝗵𝗮𝗹𝗹𝗲𝗻𝗴𝗲𝗿𝘀 𝗠𝗲𝗲𝗿𝗮𝘃𝗼𝗱𝗮𝗶 𝗘𝗮𝘀𝘁

  • Home
  • Sri Lanka
  • Oddamavadi
  • 𝗦𝘂𝗽𝗲𝗿 𝗖𝗵𝗮𝗹𝗹𝗲𝗻𝗴𝗲𝗿𝘀 𝗠𝗲𝗲𝗿𝗮𝘃𝗼𝗱𝗮𝗶 𝗘𝗮𝘀𝘁

𝗦𝘂𝗽𝗲𝗿 𝗖𝗵𝗮𝗹𝗹𝗲𝗻𝗴𝗲𝗿𝘀 𝗠𝗲𝗲𝗿𝗮𝘃𝗼𝗱𝗮𝗶 𝗘𝗮𝘀𝘁 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from 𝗦𝘂𝗽𝗲𝗿 𝗖𝗵𝗮𝗹𝗹𝗲𝗻𝗴𝗲𝗿𝘀 𝗠𝗲𝗲𝗿𝗮𝘃𝗼𝗱𝗮𝗶 𝗘𝗮𝘀𝘁, Social service, MPCS Cross Road Meeravodai, Oddamavadi.

கல்விக்கு உதவிக்கரம் நீட்டுவோம்மீராவோடை கிழக்கு பாடசாலையில் கல்வி கற்கும், குறுக்கு வீதியை சேர்ந்த, புதிய கல்வியாண்டில் ...
20/12/2025

கல்விக்கு உதவிக்கரம் நீட்டுவோம்

மீராவோடை கிழக்கு பாடசாலையில் கல்வி கற்கும், குறுக்கு வீதியை சேர்ந்த, புதிய கல்வியாண்டில் தரம் 09 இல் கற்கவுள்ள தந்தையை இழந்த மாணவனொருவருக்கு, மீராவோடை அல்-ஹிதாயா வித்தியாலயத்தின் 2020ஆம் ஆண்டு சாதாரண தரப் பரீட்சை எழுதிய மாணவனும், ஆலிமும் ஆன தாயை இழந்த இளைஞரொருவரின் உதவியால், பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டன.

மாணவனின் தாய், சூப்பர் சேலஞ்சர்ஸ் இளைஞர் கழகத்திடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க, குறித்த இளைஞர் தனது நிதியுதவியால் ரூ.5500
பெறுமதியான பாடசாலை உபகரணங்களை வழங்கியுள்ளார்.

இவ்வுப்பகரணங்கள் இன்று கழகத் தலைவர் ஐ. எல். எம். றிப்னாஸ் அவர்களால் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.

நிதியுதவி வழங்கிய இளைஞனின் தாயின் கப்ருரினை விசாலமாக்கி பாவங்களை மன்னிப்பானாக.. (ஆமின்)

𝗦𝗖𝗠𝗘 𝙈𝙚𝙙𝙞𝙖 𝙐𝙣𝙞𝙩

Divisional Federation of Youth Clubs -KPW
National Youth Services Council-NYSC

03/12/2025

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் தலைமையில் நடைபெற்று வரும் அனர்த்த நிவாரண நிதி சேகரிப்பு நடவடிக்கையின் இரண்டாம் நாளும் இதுவே பாராட்டதக்க முறையில் முன்னேறி வருகிறது.

மீராவோடை மீரா ஜூம்ஆ பள்ளிவாயல், அதன் கீழ் இயங்கும் சகல பள்ளிவாயல்கள், இளைஞர் கழகங்கள், பாடசாலையின் பழைய மாணவர்கள் மற்றும் ஊர் மக்களின் தொடரும் ஒத்துழைப்புடன், இந்நிதி சேகரிப்பு பணிகள் சீராக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், தங்களின் தொடர்ந்த பங்களிப்புகள் இனி வரும் நாட்களிலும் அதிகரிக்க வேண்டியுள்ளது.
இது வெறும் உதவியல்ல, மனிதத்தின் மீதான கடமை என்பதை நினைவில் கொண்டு, துயரத்தில் உள்ளவர்களுக்கு நம்பிக்கையாய் இருங்கள்.

جزاكم الله خيراً لكل من يساهم ويساند في هذا العمل النبيل.
நன்றி! வாழ்த்துகள்!
#நிவாரணநிதி #மீராவோடை #இளைஞர்கழகம் #உதவிகரம்

அல்ஹம்துலில்லாஹ் ❤️  அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் தலைமையில் நடைபெற்ற அனர்த்த நிவாரண நிதி சேகரிப்பின் முதல் கட்ட...
02/12/2025

அல்ஹம்துலில்லாஹ் ❤️
அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் தலைமையில் நடைபெற்ற அனர்த்த நிவாரண நிதி சேகரிப்பின் முதல் கட்டம் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது.

மீராவோடை மீரா ஜூம்ஆ பள்ளிவாயல், அதன் கீழுள்ள சகல பள்ளிவாயல்கள், இளைஞர் கழகங்கள், பாடசாலையின் பழைய மாணவர்கள் மற்றும் ஊர் மக்களின் பூரண ஒத்துழைப்புடன், இந்நிதிசேகரிப்பு நடவடிக்கையின் முதல் நாள் வெற்றிகரமாக நிறைவடைந்தது.

இன்ஷா அல்லாஹ், இன்னும் வரவிருக்கும் நாட்களிலும் உங்கள் அனைவரது பங்களிப்புகள் தொடர, மேலும் நலன்கள் பகிர முடியும்.

ஜசாகுமுல்லாஹு கைரன் – பங்களித்த அனைத்து நற்பணிகளுக்கும்.

𝗦𝗖𝗠𝗘 𝙈𝙚𝙙𝙞𝙖 𝙐𝙣𝙞𝙩

#நன்றி #மீராவோடை #அனர்த்தநிவாரணம் #உதவிகரம் #உறவுணர்வு

மீராவோடை மீரா ஜூம்ஆ பள்ளிவாயலின் ஏற்பாட்டில் நிதி மற்றும் நிவாரண சேமிப்பு இடம் பெற்று வருகிறது.தங்களால் முடிந்த  நிதியோ ...
02/12/2025

மீராவோடை மீரா ஜூம்ஆ பள்ளிவாயலின் ஏற்பாட்டில் நிதி மற்றும் நிவாரண சேமிப்பு இடம் பெற்று வருகிறது.

தங்களால் முடிந்த நிதியோ அல்லது நிவாரண பொருட்களையோ உடனடியாக வழங்கி வைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

02/12/2025

அல்ஹம்துலில்லாஹ்.

இது வரை நேரமும் கிடைக்கப்பெற்ற நிவாரண உதவிகள்.

02/12/2025

வெள்ள நிவாரண பொருட்கள் மற்றும் நிதி சேகரிப்பு தற்போது மீராவோடை மீரா ஜூம்ஆ பள்ளிவாயலின் ஏற்பாட்டில் சூப்பர் சேலஞ்சர்ஸ் இளைஞர் கழகத்தின் பங்கு பற்றுதலோடு நடைபெறுகிறது.

🔹திறந்த நன்கொடை நிகழ்வு🔹 மீராவோடை மீரா ஜூம்ஆ பள்ளிவாயல் ஏற்பாட்டில்,  மீராவோடை கிழக்கு சூப்பர் சேலஞ்சர்ஸ் இளைஞர் கழகத்தி...
02/12/2025

🔹திறந்த நன்கொடை நிகழ்வு🔹


மீராவோடை மீரா ஜூம்ஆ பள்ளிவாயல் ஏற்பாட்டில்,
மீராவோடை கிழக்கு சூப்பர் சேலஞ்சர்ஸ் இளைஞர் கழகத்தின் பங்கு பற்றுதலோடு
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண சேவையில் இணைந்துள்ளது.

🏚️ பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடைகள், உணவு, மருந்துகள், வாழ்வாதார பொருட்கள் உள்ளிட்டவை வழங்கி உதவிட,
இந்த நன்கொடை சேகரிப்பு முயற்சியில் நீங்களும் பங்கெடுக்கலாம்.

📅 நிகழ்வு தினம்: 02.12.2025
🕓 நேரம்: மாலை 4.00
📍 இடம்: மீரா ஜூம்ஆ பள்ளிவாயல், மீராவோடை

🫱🏻‍🫲🏼 நாம் கொடுக்கும் ஒவ்வொரு நன்கொடையும், ஒரு குடும்பத்தின் எதிர்காலத்தை பாதுகாக்கும்!

#நன்கொடை #வெள்ளஉதவி #மீராவோடை
Divisional Federation of Youth Clubs -KPW
National Youth Services Council-NYSC

இரண்டாம் கட்டமாக பகலுணவு விநியோகம் – மீராவோடைகோறளைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், தற்போதைய உறுப்பினருமான KBS...
30/11/2025

இரண்டாம் கட்டமாக பகலுணவு விநியோகம் – மீராவோடை

கோறளைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், தற்போதைய உறுப்பினருமான KBS Hameed அவர்களின் வேண்டுகோளின் பேரில், மீராவோடை சூப்பர் சேலஞ்சர்ஸ் இளைஞர் கழகம், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை இனங்காணும் பணியில் ஈடுபட்டது.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரண்டாம் கட்டமாக பகலுணவு வழங்கும் பணியில், கே. பீ. எஸ். ஹமீட் அவர்கள், இளைஞர் கழக உறுப்பினர்களுடன் நேரிலேயே சென்று உணவுப் பொதிகளை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

இது போன்ற சமூகப் பணி தொடர்ந்து நடை பெற இளைஞர்கள் உறுதுணையாக இருக்கின்றனர்.

𝗦𝗖𝗠𝗘 𝙈𝙚𝙙𝙞𝙖 𝙐𝙣𝙞𝙩
National Youth Services Council-NYSC
Divisional Federation of Youth Clubs -KPW

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இனங்காணப்பட்ட குடும்பத்திற்கு இரவுப் உணவு வழங்கல்!மீராவோடை சூப்பர் சேலஞ்சர்ஸ் இளைஞர் கழகத்தின்...
29/11/2025

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இனங்காணப்பட்ட குடும்பத்திற்கு இரவுப் உணவு வழங்கல்!

மீராவோடை சூப்பர் சேலஞ்சர்ஸ் இளைஞர் கழகத்தின் வேண்டுகோளுக்கு அமைய, முன்னாள் தவிசாளரும் தற்போதைய உறுப்பினருமான கே. பீ. எஸ். ஹமீட் அவர்களின் உதவியுடன், வெள்ளத்தால் கடும் பாதிப்படைந்த குடும்பத்திற்கு இரவுணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.

சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட சூழ்நிலையை கருத்தில் கொண்டு, இதுபோன்ற நற்செயல்கள் மேலும் மக்களுக்கு உதவுமாக அமையட்டும்.

இரவுணவினை தந்து உதவிய நல் உள்ளத்திற்கு கழக சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

𝗦𝗖𝗠𝗘 𝙈𝙚𝙙𝙞𝙖 𝙐𝙣𝙞𝙩

KBS Hameed
Divisional Federation of Youth Clubs -KPW

காவத்தமுனை முகாமிற்கு சூப்பர் சேலஞ்சர்ஸ் இளைஞர்கள் பார்வை  மீராவோடை கிழக்கு கிராம சேவகர் பிரிவில் செயற்படும் சூப்பர் சேல...
29/11/2025

காவத்தமுனை முகாமிற்கு சூப்பர் சேலஞ்சர்ஸ் இளைஞர்கள் பார்வை

மீராவோடை கிழக்கு கிராம சேவகர் பிரிவில் செயற்படும் சூப்பர் சேலஞ்சர்ஸ் இளைஞர் கழகத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், காவத்தமுனை அல் அமீன் வித்தியாலயத்தில் அமைந்துள்ள வெள்ள நிவாரண முகாமை நேரில் சென்று பார்வையிட்டனர்.

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராம சேவகர் பிரிவுகளிலுள்ள காகிதநகர் பகுதிகள் கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால், மக்கள் தஞ்சமடையும் இடமாக பாடசாலை பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மக்களின் உணவு, தங்குமிடம் மற்றும் பாதுகாப்பு ஆகியவை,
- பிரதேச செயலகத்தின் செயலாளர் ஏ. தாஹிர்
- பிரதேச சபை தவிசாளர் ஹலால்தீன் ஹாஜியார்
- தேசிய மக்கள் சக்தியின் கல்குடா தொகுதி அமைப்பாளர் மற்றும் சமூக சேவகர் நியாஸ் ஹாஜியார்
ஆகியோரின் நேரடி கண்காணிப்பில், பொலிஸ் மற்றும் இராணுவ பாதுகாப்புடன் ஒழுங்காக கையாளப்பட்டு வருகிறது.

இது இளைஞர்களின் சமூகப் பங்களிப்பையும், நெருக்கமான பொது சேவைக்கும் எடுத்துக்காட்டாகும்.

𝗦𝗖𝗠𝗘 𝙈𝙚𝙙𝙞𝙖 𝙐𝙣𝙞𝙩

Divisional Federation of Youth Clubs -KPW

மூவ் கல்குடா டைவர்ஸும் அனர்த்த அவசர உதவிச் சேவையில் இணைந்த இளைஞர்களும். கடந்த 26ம் திகதி ஏற்பட்ட மோசமான காலநிலை மாற்றம் ...
29/11/2025

மூவ் கல்குடா டைவர்ஸும் அனர்த்த அவசர உதவிச் சேவையில் இணைந்த இளைஞர்களும்.

கடந்த 26ம் திகதி ஏற்பட்ட மோசமான காலநிலை மாற்றம் காரணமாக, பலத்த காற்று மற்றும் தொடர்ச்சியான மழையால் பிரதேசத்தில் பெருமளவிலான சேதங்கள் ஏற்பட்டன.

இத்தரவுக்களுக்கேற்ப, மூவ் கல்குடா டைவர்ஸ் வெள்ளப்பெருக்குகளில் சிக்கிக்கொண்டவர்களை மீட்கும் பணிகளின் போது சூப்பர் சேலஞ்சர்ஸ் இளைஞர் கழகம் தன்னார்வமாக இணைந்து செயற்பட்டார்கள்.

மூவ் கல்குடா டைவர்ஸ் அமைப்பினர் இரவு பகல் பாராது பல்வேறு இடங்களில் சென்று செயல்பட்டது மிகவும் பாராட்டத்தக்கது. வயல்களில் மற்றும் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சிக்கியவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

இக்கட்டான சூழ்நிலையில், சமூக பொறுப்புணர்வுடன் களத்தில் இருந்து செயல்பட்ட அனைத்து இளைஞர்களுக்கும் எமது பாராட்டுகள்!

𝗦𝗖𝗠𝗘 𝙈𝙚𝙙𝙞𝙖 𝙐𝙣𝙞𝙩

*

அனர்த்த அவசர உதவிச் சேவை – மீராவோடைநேற்றைய தினம் ஏற்பட்ட மோசமான காலநிலை, பலத்த காற்று மற்றும் மழையால் பிரதேசத்தின் பல பக...
28/11/2025

அனர்த்த அவசர உதவிச் சேவை – மீராவோடை

நேற்றைய தினம் ஏற்பட்ட மோசமான காலநிலை, பலத்த காற்று மற்றும் மழையால் பிரதேசத்தின் பல பகுதிகளில் சேதங்கள் ஏற்பட்டன.

இந்த அனர்த்த தகவல் கிடைத்தவுடனே, சூப்பர் சேலஞ்சர்ஸ் இளைஞர் குழுவினர் நேரத்துக்கேற்ப, தீவிரம் மற்றும் சேவையை முன்னிலைப்படுத்தி செயற்பட்டனர்.

அவர்கள் காட்டிய விழிப்புணர்வும், சமூகத்திற்கான பொறுப்புணர்வும் பாராட்டத்தக்கது.

இவ்வாறு தன்னார்வத்துடன் செயல்பட்ட அனைத்து இளைஞர்களுக்கும் கிராம சேவை உத்தியோகத்தர் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

𝗦𝗖𝗠𝗘 𝙈𝙚𝙙𝙞𝙖 𝙐𝙣𝙞𝙩

Address

MPCS Cross Road Meeravodai
Oddamavadi
30426

Website

Alerts

Be the first to know and let us send you an email when 𝗦𝘂𝗽𝗲𝗿 𝗖𝗵𝗮𝗹𝗹𝗲𝗻𝗴𝗲𝗿𝘀 𝗠𝗲𝗲𝗿𝗮𝘃𝗼𝗱𝗮𝗶 𝗘𝗮𝘀𝘁 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category