Office of the Deputy Director of Agriculture Mullaitivu

Office of the Deputy Director of Agriculture  Mullaitivu Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Office of the Deputy Director of Agriculture Mullaitivu, Government Organization, Office of the Deputy Director of Agriculture, Mullaitivu.

22/05/2026

இன்றைய தேனீக்கள் தினத்தின் முக்கிய நிகழ்வுகள்
Highlights of today

உலக தேனிக்கள் தினத்தினை முன்னிட்டு முல்லைத்தீவில் இடம்பெற்ற தேனீக்கள் விழாவின் பதிவுகள்
22/05/2026

உலக தேனிக்கள் தினத்தினை முன்னிட்டு முல்லைத்தீவில் இடம்பெற்ற தேனீக்கள் விழாவின் பதிவுகள்

உலக தேனீக்கள்  தினத்தினை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் விவசாய போதனாசிரியர் பிரிவில் ஆலங்குளம் கிராமத்தில் ...
22/05/2026

உலக தேனீக்கள் தினத்தினை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் விவசாய போதனாசிரியர் பிரிவில் ஆலங்குளம் கிராமத்தில் இன்று(22.05.2026) விவசாய போதனாசிரியர் திரு.க.ஜெனோஜன் ஏற்பாட்டில் பிரதி விவசாயப் பணிப்பாளர் திருமதி.சி.கிருபவதனி தலைமையில் விவசாயி சு.குகதாசன் இல்லத்தில் சிறப்புற இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் திரு.சு.சிவஸ்ரீ கலந்து சிறப்பித்தார் அவருடன் இணைந்து சிறப்பு விருந்தினர்களாக மாகாண நீர்ப்பாசன பணிப்பாளர் திரு.த.ராஜகோபு, மேலதிக மாகாண விவசாய பணிப்பாளர் திரு.தெ.யோகேஸ்வரன், மேலதிக அரசாங்க அதிபர் திரு.சி.ஜெயகாந்தன் கண் சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர்- ச.சந்திரகுமார்
அவர்களும் கலந்து சிறப்பித்தனர் கொளரவ விருந்தினர்களாக பிரதேச செயலாளர் துணுக்காய் திரு.இ.ரமேஸ், மாவட்ட கால்நடை உற்பத்தி சுகாதார பணிப்பாளர் திருமதி.தி.நிகேந்தினி, பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் முல்லைத்தீவு திருமதி.ஜொ.மஞ்சுளா மற்றும் கால்நடை வைத்தியர்கள் துணுக்காய் மற்றும் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் - மாந்தை கிழக்கு, முல்லைத்தீவு பிரதி விவசாயப் பணிப்பாளர் அலுவலக உத்தியோகத்தர்கள் விவசாய போதனாசிரியர்கள், கிளிநொச்சி பிரதி விவசாய பணிப்பாளர் அலுவலக உத்தியோகத்தர்கள் விவசாய போதனாசிரியர்கள், விவசாயிகள். மல்லாவி மத்திய கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், விவசாயிகள் பொது அமைப்பின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டுநிகழ்வை சிறப்பித்தனர்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட விவசாய அமைச்சின் செயலாளர் கருத்து தெரிவிக்கையில் உலக தேனீக்கள் தினமானது உலகளாவிய ரீதியில் தேனீக்களை பாதுகாக்கும் முகமாக மே மாதம் 20 ஆம் தேதி அனுஷ்டிக்கப்பட்டு வருவதாகவும் அதேபோல் நாங்களும் முல்லைத்தீவு மாவட்டத்தில் வெகு விமர்சையாக தேனீக்கள் தினத்தினை கொண்டாடி வருகின்றோம் அந்த வகையில் தேனீக்கள் போல் பல்வேறு வகையான பறவைகள் உயிரினங்கள் அழிந்து வருகின்றன அழிவடைந்து வருகின்றன அவற்றினையும் இளைஞர் சமுதாயம் பாதுகாக்க வேண்டிய தேவை இருக்கின்றது அதேபோல் தேனி வளர்ப்பினை வர்த்தக ரீதியாக மேற்கொள்வதற்கு என்று விவசாய திணைக்களம் உந்து சக்தியாக இருக்கும் என்பதனையும் தெரிவித்துக் கொண்டார்
மேலும் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கருத்து தெரிவிக்கையில் துணுக்காய் பிரதேசத்தில் இடம்பெற்று வருகின்ற இந்த தேனீக்கள் நாளானது மிகவும் சிறப்பாக இடம் பெற்று வருகின்றது இந்த நிகழ்வில் பல்வேறு வகையான அறிவினை விவசாயிகள் பெற்றுக் கொண்டு வருகின்றார்கள் இவ்வாறான தேனீ வளர்ப்பு நிகழ்வானது முல்லைதீவு மாவட்டமெங்கும் விவசாயி திணைக்களத்தின் அனுசரணையுடன் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுவதற்கு தாமும் தொடர்ந்து பக்கபலமாக இருப்பதாகவும் தேனீ வளர்ப்பு தொடர்பாக இளைஞர்கள் பல்வேறு வகையான முயற்சிகளை முன்னெடுத்து தேனி வளர்ப்பாளர்கள் எல்லோரும் ஒன்று இணைந்து மிகப்பெரிய ஒரு தேன் பொருளாதரத்தை கட்டியெழுப்ப வேண்டும் என தெரிவித்தார் தேனீக்கள் தின நிகழ்வில் இணைந்து கொண்ட அனைத்து பாடசாலை மாணவர்களும் விவசாயிகளும் செய்முறை ரீதியான அறிவினையும் அனுபவத்தினையும் பெற்றுக் கொண்டனர்

21/05/2026

உலக தேனிக்கள் தினம் 2026
இடம் - ஆலங்குளம் துணுக்காய்
நேரம் - 8.30 முற்பகல்
காலம் - 21/05/2026

தேனீக்கள் தினம் 2026முல்லைத்தீவு மாவட்ட துணுக்காய் பிரதேசத்தில் இடம் - ஆலங்குளம் துணுக்காய் நேரம் -  8.30 முற்பகல் காலம்...
21/05/2026

தேனீக்கள் தினம் 2026
முல்லைத்தீவு மாவட்ட துணுக்காய் பிரதேசத்தில்
இடம் - ஆலங்குளம் துணுக்காய்
நேரம் - 8.30 முற்பகல்
காலம் - 21/05/2026(நாளை)
அனைவரும் வருக

21/05/2026

முல்லைத்தீவு மாவட்டத்தின் உடையார்கட்டு விவசாய போதனாசிரியர் பிரிவில்

20/05/2026

தேனிக்கள் தினம் துணுக்காய் மண்ணில்
இடம் - ஆலங்குளம் துணுக்காய்
நேரம் - 8.30 மு.ப
திகதி - 22/05/2026

இரண்டாவது நாளாகவும் விவசாயிகள் பயிற்சி நிலையம் மல்லாவியில் இடம்பெற்ற கள விழாவில் வவுனியா மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் ...
08/05/2026

இரண்டாவது நாளாகவும் விவசாயிகள் பயிற்சி நிலையம் மல்லாவியில் இடம்பெற்ற கள விழாவில் வவுனியா மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் அலுவலக பாடவிதான உத்தியோகத்தர்கள்,விவசாய போதனாசிரியர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள் ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்

முல்லைதீவு மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் அலுவலகமும் வடக்கின் பாரம்பரிய உணவகம் அம்மாச்சி - மல்லாவியும்  இணைந்து ஒழுங்கமை...
07/05/2026

முல்லைதீவு மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் அலுவலகமும் வடக்கின் பாரம்பரிய உணவகம் அம்மாச்சி - மல்லாவியும் இணைந்து ஒழுங்கமைக்கப்பட்ட
உணவுத் திருவிழாவும் களவிழாவும் நிகழ்வானது முல்லைத்தீவு மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் திருமதி கி. சிவதீபன் தலைமையிலும் அனிஞ்சியன்குளம் விவசாய போதனாசிரியரின் சி.குணதீசனின் ஒழுங்கமைப்பிலும் இன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக
ச.சிவஸ்ரீ - வடக்கு மாகாண விவசாய அமைச்சின்செயலாளர் அவர்களும்

சிறப்பு விருந்தினராக தெ. யோகேஸ்வரன்
மேலதிக மாகாண விவசாய பணிப்பாளர்
துணுக்காய் பிரதேச சபை தவிசாளர், உபதவிசாளர்,பிரதேச உறுப்பினர்
வங்கி முகாமையாளர்கள், பாடசாலை அதிபர்,ஆசிரியர்கள் ,மாணவர்கள், விவசாயிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

05/05/2026

முல்லைத்தீவு பிரதி விவசாய பணிப்பாளர் அலுவலகமும்
வடக்கின் பாரம்பரிய உணவகம் "அம்மாச்சி" மல்லாவி யும் இணைந்து பெருமையுடன் நடாத்தும் உணவு திருவிழாவும் கள விழாவும்
திகதி- 07/05/2026
காலம் - 10.00 முற்பகல்
இடம் - விவசாயிகள் பயிற்சி நிலையம் மல்லாவி& அம்மாச்சி உணவகம் மல்லாவி
அனைவரையும் அழைக்கின்றோம்

Address

Office Of The Deputy Director Of Agriculture
Mullaitivu
42000

Opening Hours

Monday 08:30 - 16:15
Tuesday 08:30 - 16:15
Wednesday 08:30 - 16:15
Thursday 08:30 - 16:15
Friday 08:30 - 16:15

Website

Alerts

Be the first to know and let us send you an email when Office of the Deputy Director of Agriculture Mullaitivu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share