கமநல அபிவிருத்தித் திணைக்களம் - மன்னார் மாவட்டம்

  • Home
  • Sri Lanka
  • Mannar
  • கமநல அபிவிருத்தித் திணைக்களம் - மன்னார் மாவட்டம்

கமநல அபிவிருத்தித் திணைக்களம் - மன்னார் மாவட்டம் மன்னார் மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கம்

நோக்கம்
‘‘இலங்கை வாழ் கமக்கார சமூகத்தினரதும் மற்றும் சகல கமத்தொழில் காணிகளினதும் நிலைபேறான அபிவிருத்தி”

செயற்பணி
“இலங்கை வாழ் கமக்கார சமூகங்களின் நிலைபேறான அபிவிருத்தியிலும் மற்றும் சகல கமத்தொழில் காணிகளினதும் செழுமையான அணுகூலங்களைப் பெற்றுக் கொள்வதற்கு ஏற்ற வகையில் நிறுவன, உதவி, சட்ட மற்றும் முகாமைத்துவச் சேவைகள் போன்றவற்றை வடிவமைத்தல் மற்றும் சமயோசிதமான வகையில் பேணுதல்”

16/02/2023

நெல் அள்ளும் இயந்திரம்

15/02/2023

நெல் அறுவடைக்கான நியாயமான விலையை விவசாயிகளுக்கு வழங்கும் பொருட்டு...
2022/2023 பெரும்போக அரசாங்கத்தின் நெல் கொள்வனவு நிகழ்ச்சி திட்டத்தின் அடிப்படையில்,
நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் 2023.02.09 ம் திகதிய,சுற்றுநிருப இல DFD/ 2023-1 இற்கு அமைவாக, மாவட்ட செயலாளர் தலைமையில் சிறிய மற்றும் நடுத்தரளவு அரிசி ஆலை உரிமையாளர்கள் / கூட்டுறவு சங்கங்கள் மூலம் மன்னார் மாவட்டத்தில் 'நாடு' இன நெல்லினை மட்டுமே பின்வரும் நிபந்தனை அடிப்படையில் மேற்க்கொள்வதற்கு தீர்மானிக்கபட்டுள்ளது.
1. ஆகக் கூடிய ஈரப்பதன் 14% மற்றும் ஆகக் கூடிய நெற்பதரினளவு 9% உடைய நாடு நெல்
ரூபா 100/- இற்கும்,
2. ஈரப்பதன் 14% ற்கும் அதிகமான மற்றும் 22% அதற்கும் குறைந்த நாடு நெல் ரூபா 88/- க்கும் கொள்வனவு செய்யப்படவுள்ளதால், இத்திட்டத்தில் நெல்லினை வழங்குவதற்கு தயராகவுள்ள விவசாயிகள் இது பற்றிய தகவல்களை உடனடியாக கமநல அபிவிருத்தி திணைக்கள மாவட்ட காரியாலயத்திற்கு (0232222162) திங்கள் தொடக்கம் வெள்ளி வரை, காலை 9.00 தொடக்கம் மாலை 4.00 க்குள் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

31/01/2023
10/01/2022

2022 ஆம் ஆண்டுக்கான வயற்காணி இடாப்பு மீள்திருத்த வேலைகள் மன்னார் மாவட்ட கமநல சேவைகள் நிலையங்களில் மேற்கொள்ளப்படுகின்றது.
வயற்காணி இடாப்பு மீள்திருத்த வேலைகளின் பொருட்டு மன்னார் மாவட்டத்தில் உள்ள 13 கமநல சேவைகள் நிலையங்களிலும் வயற்காணி பதிவேடுகளை விவசாயிகள் பார்வையிட முடியும் என்பதுடன் வயற்காணிப் பதிவேட்டில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு எதிர்பார்த்துள்ள கமக்காரர்கள் தங்கள் வயற்காணி அமைந்துள்ள கமநல சேவைகள் நிலையங்களில் உரிய விண்ணப்பப்படிவங்களைப் பெற்று பூரணப்படுத்தி தேவையான ஆவணங்களுடன் கமநல சேவை நிலையங்களில் சமர்ப்பிப்பதன் மூலம் தங்கள் வயற்காணிப் பதிவைத் திருத்திக் கொள்ள முடியும்.
இதுவரை தங்கள் காணி தொடர்பில் உரிய ஆவணங்களைச் சமர்ப்பிக்காத கமக்காரர்களும் உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து தங்கள் காணிப் பதிவை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
வயற்காணி இடாப்பு மீள்திருத்தம் தொடர்பான மேலதிக விபரங்களை தங்கள் பகுதிக்குப் பொறுப்பான விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளரை அல்லது கமநல சேவைகள் நிலையங்களை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம்.
2022 ஆம் ஆண்டுக்கான வயற்காணி இடாப்பு மீள்திருத்த வேலைகள் ஜனவரி மாதத்திற்குள் முடிவுறுத்தப்படவுள்ளமையால் சுகாதார வழிகாட்டல்களுக்கமைய கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி இவ் வேலைத்திட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு மன்னார் மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் அ.மரின்குமார் அனைத்து கமக்காரர்களையும் கேட்டுக் கொண்டுள்ளார்.
தொடர்புகளுக்கு:
மாந்தை கமநல சேவைகள் நிலையம் - 023-3239462
ஆள்காட்டிவெளி கமநல சேவைகள் நிலையம் - 023-2051197
இலுப்பைக்கடவை கமநல சேவைகள் நிலையம் - 023-2051837
விடத்தல்தீவு கமநல சேவைகள் நிலையம் - 023-3239471
உயிலங்குளம் கமநல சேவைகள் நிலையம் - 023-2051466
மன்னார் தீவு கமநல சேவைகள் நிலையம் - 023-2050187
முருங்கன் கமநல சேவைகள் நிலையம் - 023-2050316
நானாட்டான் கமநல சேவைகள் நிலையம் - 023-2050654
பாலம்பிட்டி கமநல சேவைகள் நிலையம் - 0770233415
இரணைஇலுப்பைக்குளம் கமநல சேவைகள் நிலையம் - 0774969217
பி.பி.பொற்கேணி கமநல சேவைகள் நிலையம் - 0770366699
சிலாவத்துறை கமநல சேவைகள் நிலையம் - 0779787995
மறிச்சுக்கட்டி கமநல சேவைகள் நிலையம் - 0779787995

10/12/2021

Address

Moor Street
Mannar
41000

Opening Hours

Monday 08:30 - 16:15
Tuesday 08:30 - 16:15
Wednesday 08:30 - 16:15
Thursday 08:30 - 16:15
Friday 08:30 - 16:15

Telephone

+94232222162

Alerts

Be the first to know and let us send you an email when கமநல அபிவிருத்தித் திணைக்களம் - மன்னார் மாவட்டம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to கமநல அபிவிருத்தித் திணைக்களம் - மன்னார் மாவட்டம்:

Share