BT/BC/An-Nassar Maha Vidyalaya, Kattankudy

BT/BC/An-Nassar Maha Vidyalaya, Kattankudy Students and Old Boys can join

Alhamdulillah.It is a great pleasure to share that we have successfully initiated the pilot project for An-Nassar Maha V...
08/01/2026

Alhamdulillah.
It is a great pleasure to share that we have successfully initiated the pilot project for An-Nassar Maha Vidyalaya School.

Thank you to our generous @~Mjm Shafir (Dr. Shaf🩺) for his dedication and support. Let us continue working together and take this project forward to achieve full success.

Big Thanks to Eng. Reeza and Kattankudy Qatar Community..

02/12/2025
07/11/2025
15/10/2025

எமது காத்தான்குடி மட்/மம/ அந்-நாஸர் மகா வித்தியாலயத்தில் தரம் 06,08 மற்றும் தரம் 09 ஆகிய வகுப்புகளில் கூரை மின்விசிறிகள் (Ceiling Fans) பழுதடைந்துள்ளன. இதனால் எமது பாடசாலை மாணவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

ஏற்கனவே தரம் 10,11 மற்றும் தரம் 07 வகுப்புக்களில் பழுதடைந்த மின்விசிறிகளை இரண்டு பிரமுகர்கள் அன்பளிப்புச் செய்து பொருத்தித் தந்தமையால் அந்த வகுப்புக்களில் மாணவர்கள் சிரமமின்றி கல்வி கற்கின்றனர்.

எனவே நல்லுள்ளம் கொண்ட சகோதரர்கள் மேற்படி வகுப்புக்களில் கூரை மின்விசிறிகளைப் பொருத்திக் கொடுக்க முன்வருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

உதவ விரும்பும் சகோதரர்கள் அதிபரையோ அல்லது SDEC செயலாளரையோ தொடர்பு கொள்ளவும்.
நன்றி!
இவ்வண்ணம்,
பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு,
அந்-நாஸர் மகா வித்தியாலயம்.

10/10/2025

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை 2026 முதல்:
புதிய பாடத்திட்டம் மற்றும் GPA முறைமை – விரிவான வழிகாட்டல்
2026 ஆம் ஆண்டு முதல் அமுலாகவுள்ள க.பொ.ச. சாதாரண தர பரீட்சையின் புதிய பாட அமைப்பையும், GPA (Grade Point Average) மதிப்பீட்டு முறையையும் பற்றிய முழுமையான தகவல்கள் இங்கே வழங்கப்படுகின்றன.
இந்த மாற்றங்கள் மாணவர்களின் கல்விப் சுமையை குறைத்து, ஆழமான கற்றலுக்கு வழிவகுத்து, சர்வதேச தரங்களுக்கு ஏற்ற வகையில் அவர்கள் திறன்களை மதிப்பீடு செய்யும் வாய்ப்பை ஏற்படுத்தும்.
🔹 புதிய பாடத்திட்டம்: மொத்தம் 7 பாடங்கள்
புதிய முறையில், மாணவர்கள் 10 பாடங்கள் கற்க வேண்டிய பழைய முறையைவிட, இப்போது 7 பாடங்கள் மட்டும் கற்க வேண்டியுள்ளது. இது மாணவர்களின் பாடங்களிற்கான பளுவை குறைத்து, ஆழமான கற்றலுக்கு வாய்ப்பு வழங்குவதாகும்.
✅ கட்டாய Subjects – 5:
இவை அனைத்து மாணவர்களும் கற்கவேண்டியபாடங்கள்:
1. தாய்மொழி – தமிழ், සිංහල அல்லது ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட தாய்மொழி (Credits: 3)
2. English – Communication skills, Reading, Writing, Speaking (Credits: 3)
3. Mathematics – Concepts, Problem solving, Logical thinking (Credits: 3)
4. Science – Physics, Chemistry, Biology உள்ளடக்கிய General Science (Credits: 3)
5. Religion – Buddhism, Hinduism, Islam, Christianity (Credits: 2)
🔸 மொத்த கட்டாய Subjects இற்கான Credits: 14
✅ தேர்ந்தெடுக்கக்கூடிய Subjects – 2:
மாணவர்கள் தங்கள் ஆர்வமும் எதிர்கால இலக்குகளையும் பொருத்து, பின்வரும் களங்களில் இருந்து 2 Subjects தேர்வு செய்யலாம். ஒவ்வொன்றுக்கும் Credits: 2.
Second National Language
Information and Communication Technology
History
Civic Education
Health and Physical Education
Technology :
Tourism and Hospitality Management Technology
Design and Engineering Technology
Livestock Product Technology
Artistic Product Technology
Entrepreneurship and E-commerce Technology
Geography
Aesthetics Education:
Oriental Music
Western Music
Carnatic Music
Oriental Dance
Bharatha Dance
Western Dance
Drama and Theatre
Art
Entrepreneurship and Financial Literacy
➡️ இந்த 7 Subjects அமைப்பில், மாணவர்கள் பல வகையான பாடங்களில் சிதறி இல்லாமல், தங்களுக்குப் பயனுள்ள துறைகளில் ஆழமாக கவனம் செலுத்த முடியும்.
🔹 GPA (Grade Point Average) முறைமை:
பழைய A, B, C, S, F எனப்படும் Letter Grade முறைக்கு பதிலாக, GPA முறை அமலுக்கு வருகிறது. GPA என்பது மாணவர்கள் பெற்றுள்ள ஒட்டுமொத்த மதிப்பெண் நிலையை இலக்க முறையில் (Numerical Form) காட்டும் முறை.
இது சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட முறைமை ஆகும், மேலும் மாணவர்களின் முழுமையான கல்வி செயல்திறனை துல்லியமாக பிரதிபலிக்க உதவும்.
✅ GPA மதிப்பீட்டின் தர விகிதங்கள் உதாரணமாக):
% Marks Range Grade Point
90% - 100% 4.0
80% - 89% 3.7
70% - 79% 3.3
60% - 69% 3.0
50% - 59% 2.7
40% - 49% 2.0 (Pass)
Below 40% 0.0 (Fail)
👉 இந்த Grade Point values Education Ministry வழியாக அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் வரை இவை மாதிரிப் பட்டியல் மட்டுமே.
✅ GPA கணக்கீட்டு முறை:
மாணவர் ஒருவர் 7 Subjects கற்கின்றார் என எடுத்துக்கொள்வோம். அவர் பெற்றுள்ள Grade Points பின்வருமாறு:
Mathematics: 3.7
English: 3.3
Mother Tongue: 4.0
Religion: 3.7
Science: 3.0
Optional Subject 1: 3.5
Optional Subject 2: 3.2
📌 Total Grade Points = 3.7 + 3.3 + 4.0 + 3.7 + 3.0 + 3.5 + 3.2 = 24.4
📌 Final GPA = 24.4 / 7 = 3.48
இதன்படி, மாணவரின் Final GPA = 3.48 ஆகும்.
🔹 GPA முறைமையின் நன்மைகள்:
✅ துல்லியமான மதிப்பீடு: GPA system மாணவர்களின் ஒட்டுமொத்த திறனை துல்லியமாக பிரதிபலிக்கிறது
✅ குறைந்த மன அழுத்தம்: ஒரு Subject இல் குறைந்த மதிப்பெண் பெற்றாலும், மொத்த GPA அதிகமாக இருக்கலாம்
✅ International Recognition: உலக பல்கலைக்கழகங்களில் GPA முறை ஏற்கப்படுகிறது
✅ A/L Stream தெரிவில் உதவுகின்றது: திறன்கள் மற்றும் ஆர்வங்களை GPA மூலம் தெளிவாக அறிய முடியும்
✅ Relative Assessment: மாணவர்களிடையே ஒப்பீட்டு மதிப்பீடு செய்வது சாத்தியம்
🔹 சவால்கள் மற்றும் முக்கிய கவனத்துக்குரிய அம்சங்கள்:
📌 Awareness: GPA முறைமை பற்றி மாணவர்களும், பெற்றோர்களும், ஆசிரியர்களும் சரியான விளக்கங்களைப் பெற வேண்டும்
📌 Minimum GPA for Pass: ஒருவரை Pass ஆகக் கருத தேவையான GPA மற்றும் ஒவ்வொரு Subject இல் Pass குறியீடு தெளிவாக இருக்க வேண்டும்
📌 Transparency: GPA கணக்கீட்டு முறை மற்றும் Grade Point Conversion பற்றிய நெறிமுறைகள் வெளிப்படையாக இருக்க வேண்டும்
இந்த புதிய மாற்றங்கள் இலங்கையின் கல்வி முறைமைக்குள் விசேஷமான மாற்றத்தை உருவாக்கும். அதன் வெற்றி, சரியான திட்டமிடல், செயல் திட்டம், மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்புகளின் ஒத்துழைப்பு ஆகியவற்றின் மீது தழுவியுள்ளது.
📌 மாணவர்களுக்கு அதிகப் பயனுள்ள, குறைந்த அழுத்தமுள்ள மற்றும் சர்வதேச தரத்திற்கு இணையான கல்வி அனுபவம் ஒன்றை இம்மூலம் வழங்க முடியும் என்பதே நம்பிக்கை.
copy

முஸ்லிம் கலாச்சாரப் போட்டி மாகாண மட்டம் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் சார்பாக  கலி கம்பு(கோலாட்டம்) போட்டியில் பங்கு பற...
07/10/2025

முஸ்லிம் கலாச்சாரப் போட்டி மாகாண மட்டம் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் சார்பாக கலி கம்பு(கோலாட்டம்) போட்டியில் பங்கு பற்றிய எமது பாடசாலையான மட்/மம/அந்-நாஸர் மகா வித்தியாலயம் மாணவர்கள் முதலாமிடம் பெற்று தேசிய மட்ட போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்றுள்ளதோடு எமது பாடசாலைக்கும் வலயத்திற்கும் பெருமை சேர்த்துத் தந்துள்ளனர்.

வெற்றி பெற்ற இம்மாணவச் செல்வங்களுக்கும் இவர்களை அழைத்துச் சென்ற ஆசிரியர் திருமதி.S.சாஜஹான் அவர்களையும் இவர்களைப் பயிற்றுவித்த காத்தான்குடி சிறுவர் நிலையத்தின் முகாமையாளர் ஜனாப்.S.அலாவுதீன் அவர்களையும் இவர்களை அழைத்துச் செல்ல வாகன வசதியளித்த காத்தான்குடி சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் தலைவரும் இஸ்மாயீல் ஸ்டோர் உரிமையாளர் உபைத் ஹாஜியார் அவர்களுக்கும் பாடசாலை சமூகம் சார்பாக நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

Address

Kattankudy
Kattankudi
30100

Alerts

Be the first to know and let us send you an email when BT/BC/An-Nassar Maha Vidyalaya, Kattankudy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category