10/09/2026
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில்
இந்து அறநெறிப் பாடசாலைகளுக்கான தளபாடங்கள் வழங்கும் நிகழ்வு – 2026
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு ய. அநிருத்தனன் அவர்களின் வழிகாட்டலுக்கமைவாக, 2026 ஆம் ஆண்டிற்கான இந்து அறநெறிப் பாடசாலைகளுக்கு தளபாடங்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
காரைதீவு பிரதேச செயலாளர் திரு ஜி அருணன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், காரையடி அம்பாரைப் பிள்ளையார் அறநெறிப்பாடசாலைக்கான தளபாடங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர் திரு. கு. ஜெயராஜி, பிரதேச இந்து கலாசார உத்தியோகத்தர் திருமதி சி.சிவலோஜினி கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு க. சுதர்சன் மற்றும் அறநெறிப் பாடசாலை ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்து அறநெறிக் கல்வியை மேம்படுத்துவதற்கும், மாணவர்களுக்கு சிறந்த கற்றல் சூழலை ஏற்படுத்துவதற்கும் இத்தளபாடங்கள் வழங்கும் செயற்பாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது.