ACMC கல்முனை மாவட்டம்

ACMC கல்முனை மாவட்டம் மக்கள் காங்கிரஸ் தலைவரின் பொய் வாக்குறுதிகளை நம்பி ஏமாந்தவர்களின் சந்திப்பு புள்ளி.

■ நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர்  #ஆதம்பாவா_அஸ்பர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்▪︎வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட...
01/11/2025

■ நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் #ஆதம்பாவா_அஸ்பர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்▪︎

வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது

நிந்தவூர் பிரதேச சபையின் உறுப்பினரான ஆதம்பாவா அஸ்பர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது

இதற்கு அமைய திரு ஆதம்பாவா அஸ்வர் வகித்து வந்த நிந்தவூர் பிரதேச சபையின் உறுப்பினர் பதவியை இழந்துள்ளதாக நிந்தவூர் பிரதேச சபைக்கான தெளிவத்தாட்சி அலுவலர் கசுன் ஸ்ரீநாத் அத்தநாயக்க வர்த்தமானி அறிவித்தல் மூலம் இன்று பிரகடனப்படுத்தியுள்ளார்

நான் ஒருபோதும் ஹக்கீமின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியோடு இணைய மாட்டேன்.▪︎ Seyed Ameer Ali.தவிசாளார், மக்கள் காங்க...
19/07/2025

நான் ஒருபோதும் ஹக்கீமின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியோடு இணைய மாட்டேன்.

▪︎ Seyed Ameer Ali.
தவிசாளார், மக்கள் காங்கிரஸ்.

"ஒரு சாதி வட்டாரத் தேர்தலாக்கிப் போட்டான்டப்பா!"இந்த ஆண்டின் சிறந்த புகைப்படம்.
05/07/2025

"ஒரு சாதி வட்டாரத் தேர்தலாக்கிப் போட்டான்டப்பா!"

இந்த ஆண்டின் சிறந்த புகைப்படம்.

மக்கள் காங்கிரஸ் பிளவடைகிறதா?----------------------------------------------------------------முன்னாள் அமைச்சரும், அகில இ...
27/06/2025

மக்கள் காங்கிரஸ் பிளவடைகிறதா?
----------------------------------------------------------------
முன்னாள் அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தவிசாளருமான
சட்டத்தரணி MSS அமீர் அலி அவர்களுக்கான தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை
கால தாமதமின்றி, கட்சியின் தேசிய தலைவரும், முன்னாள் அமைச்சருமான
ரிஷாட் பதியுதீன் அவர்கள் வழங்கி வைப்பது காலத்தின் தேவையும், அவரது தார்மீக பொறுப்பும் ஆகும்.

தவறும் பட்சத்தில் கட்சி பிளவடைந்து பாரிய பின்னடைவை சந்திக்கும். கட்சியின் தலைவரோ கட்சியின் வேறு பாராளுமன்ற உறுப்பினர்களோ கிழக்கு மாகாணத்தில் கால் வைக்க முடியாத நிலை ஏற்படும்.

கட்சிப் போராளிகள்.
கிழக்கு மாகாணம்.

நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்  கட்சி நாடு முழுவதும் 140 ஆசனங்களை கைப்பற்றியுள்ள...
24/05/2025

நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் 140 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

 #ஜனாஸா_அறிவித்தல்!.ACMC தலைவர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் அன்புத் தந்தை பதியுதீன் ஹாஜியார் கொழும்பில் காலமானார்.இன்னாலி...
18/02/2025

#ஜனாஸா_அறிவித்தல்!.

ACMC தலைவர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் அன்புத் தந்தை பதியுதீன் ஹாஜியார் கொழும்பில் காலமானார்.

இன்னாலில்லாஹி
வஇன்னா இலைஹி ராஜிஊன்.


அன்னார் ACMCயின் தலைவர் ரிஷாட் பதியுதீன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன், மற்றும் தொழில் அதிபர் ரியாஜ் பதியுதீன் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

ஜனாஸா நல்லடக்கம் இன்று புத்தளம், ரத்மல்யாய அல்- காசிமி சிட்டி மையவாடியில் அஸர் தொழுகைக்கு பின் இடம்பெறும்


அல்லாஹு தஆலா அவரின் பாவங்களை மன்னித்து அன்னாரின் மறுமை வாழ்வை ஒளிபெறச்செய்ய பிரார்த்திப்போம்.

■ ரிஸாத்தின் இரட்டை வேடம்▪︎--------------------------------------------------------அம்பாறையில் ஹராமானது திருகோணமலையில் எ...
07/10/2024

■ ரிஸாத்தின் இரட்டை வேடம்▪︎
--------------------------------------------------------
அம்பாறையில் ஹராமானது திருகோணமலையில் எப்படி ஹலாலானது - மாநகர சபை முன்னாள் உறுப்பினர் காட்டம் !

இருபதாவது திருத்தத்துக்கு ஆதரவளித்து, ஜனாஸாக்களை எரிப்பதற்கு உதவியவர்கள் உள்ள கூட்டணியிலும் எமது கட்சி இணையாது. அம்பாறை மாவட்டத்தில், இவ்விடயம்தான் இழுபறியில் உள்ளது. இருபதாவது திருத்தத்துக்கு ஆதரவளித்த ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எம்.பிக்கள் உள்ள அணியில், நாம் இணையப்போவதில்லை. இவர்களைச் சேர்த்தால் அம்பாறையில் தனித்தே மயில் சின்னத்தில் போட்டியிடுவோம். புத்தளம் மாவட்டத்திலும் இந்த நியதியே பின்பற்றப்படும். இது குறித்து தீர்க்கமான முடிவை எடுக்குமாறு கட்சியின் புத்தளம் மாவட்ட உயர்பீடத்துக்கு அறிவித்துள்ளோம்" என்று குறிப்பிட்டுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனிடம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகரும், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினருமான பீ.டி. ஜமால் சில கேள்விகளை முன்வைத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பகிரங்க கடிதத்தில், அம்பாறையில் இருபதாவது திருத்தத்துக்கு ஆதரவளித்து, ஜனாஸாக்களை எரிப்பதற்கு உதவியவர்களாக றிசாத் அவர்களினால் கூறப்படும் மு.கா பிரதித் தலைவர்களான பைசால் காசிம், எச்.எம்.எம்.ஹரீஸ் ஆகியோர்கள் உள்ள கூட்டணியில் அம்பாறையில் இணைய முடியாது என்று கூறியுள்ள றிசாத் அவர்கள் அதே இருபதாவது திருத்தத்துக்கு ஆதரவளித்து, ஜனாஸாக்களை எரிப்பதற்கு உதவியவர்களாக றிசாத் அவர்களினால் கூறப்படும் மு.கா தேசிய அமைப்பாளர் எம்.எஸ். தொளபீக் பிரதிநிதித்துவப்படுத்தும் திருகோணமலையில் மு.காவுடன் இணைந்து போட்டியிடுவதானது அம்பாறையில் ஹராமாகியது எப்படி திருகோணமலையில் ஹலாலானது? என்ற கேள்வியெழுப்பியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அம்பாறையில் மு.கா, ம.கா, ஐ.ம.சக்தி என்பன இணைந்து போட்டியிடுகின்ற போது தங்களை விட அதிக மக்களின் அமோக செல்வாக்கை பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும், எமது கட்சியின் பிரதித் தலைவர்களான எச்.எம்.எம்.ஹரீஸ், பைசால் காசிம் ஆகியோர்கள் மீண்டும் மக்கள் வாக்குகளினால் பாராளுமன்ற உறுப்பினர்களாகி விடுவார்கள். தனது கட்சியின் வேட்பாளர்கள் தோல்வியை தழுவ நேரிடும் என்ற பயத்தினாலும் எச்.எம்.எம்.ஹரீஸ், பைசால் காசிம் போன்றோர்களின் மக்கள் செல்வாக்குக்கு மத்தியில் நின்று பிடிக்க முடியாது என்ற வகையிலுமே முன்னாள் அமைச்சர் றிசாத் இப்படியான பயத்தின் உளறல்களை வெளியிட்டு வருகிறார் என்பதில் மாற்றுக்கருத்துக்கள் இல்லை.

முஸ்லிங்களின் எதிரியாக நோக்கப்படும் சம்பிக்கவுடன் நன்றாக உறவாடிக்கொண்டு ஜனாஸா எரிப்பை பற்றியும், முஸ்லிம் சமூக அக்கறைகள் பற்றியும் றிசாத் போன்றவர்கள் பேசுவது வேடிக்கையாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மக்கள் காங்கிரஸிலிருந்து அப்துல்லாஹ் மஹ்ரூப் வெளியேறினார்!--------------------------------------------------------------...
30/09/2024

மக்கள் காங்கிரஸிலிருந்து அப்துல்லாஹ் மஹ்ரூப் வெளியேறினார்!
--------------------------------------------------------------------------
(ஏ. எச்.சித்தீக் காரியப்பர்)

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் பதவி மற்றும் கட்சி உறுப்புரிமை ஆகியவற்றிலிருத்து தான் உடனடியாக விலகிக் கொள்வதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் எமக்கு தெரிவிக்கையில், தன்னால் முன்வைக்கப்பட்ட நல்ல பல யோசனைகளை கட்சித் தலைவர் உடனடியாக நிராகரித்துள்ளார்.

இந்நிலையில் கட்சியில் தொடர்ந்து நான் பயணிப்பதில் அர்த்தமில்லை. எனது இந்த தீர்மானத்துக்கு கட்சித் தலைவர் ரிஷாத் பதியுதீன் மட்டுமே காரணம் என்றும் சுட்டிக்காட்டினார்

மர்ஹூம் ஹமீதின் "நினைவுப் பகிர்வு" நிகழ்வுக்கு ரிசார்டின் அழைப்பும் மறுப்பும்.------------------------------------------...
28/01/2024

மர்ஹூம் ஹமீதின்
"நினைவுப் பகிர்வு" நிகழ்வுக்கு
ரிசார்டின் அழைப்பும் மறுப்பும்.
--------------------------------------------------------
ஜனவரி 27, 2024 அன்று மர்ஹூம் Yls Hameed அவர்களின் பெயரில் Rishad Bathiudeen அவர்களின் அரசியல் இலாப நோக்காகக் கொண்ட கூட்டத்திற்கு ஒரு அழைப்பு விடுக்கப்பட்டது. அதற்கு ஹமீதின் சகோதரரான டாக்டர். யூசுப் அவர்கள் அனுப்பிய பதில்.


மிஸ்டர் ரிசார்ட்,
அஸ்ஸலாமு அலைக்கும், வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹு.

இந்த நிகழ்வில் வை.எல்.எஸ்ஸின் குடும்பத்தை நோக்கிய உங்கள் கோழைத்தனமான அணுகுமுறை, குறிப்பாக உங்களைப் போன்ற அரசியல் வியாபாரிகளுக்கு எதிராக கருத்து தெரிவிக்கும் புத்திஜீவிகளுக்கு எதிரான உங்கள் குற்ற மனப்பான்மையை மேலும் உறுதிப்படுத்துகிறது.

இந்த விஷயத்தில் YLS இன் குடும்பத்தை அணுக தகுதியற்ற நீங்கள் மிகவும் நேர்மையற்றவர் மற்றும் தந்திரக்காரன். பெரும்பாலான பணக்காரர்கள் மற்றும் அரசியல்வாதிகள் புத்திசாலிகள் அல்ல, குற்றவாளிகள் என்பதை நான் நன்கு அறிவேன்.

இந்தச் சம்பவத்தில் நீங்கள் நேரடியாகத் தொடர்பு கொள்ளாவிட்டாலும், நீங்கள் சமீபத்தில் சிறையில் அடைந்த தண்டனை, அரசியலில் உங்களின் தவறான நடைமுறையைத் திருத்துவதற்கு நிச்சயமாக உங்களுக்குப் பாடம் கற்பித்ததாகத் தெரியவில்லை.

எல்லாம் வல்ல அல்லாஹ் நீங்கள் திருந்த உதவுமாறு பிரார்த்திக்கிறேன். உங்களுக்காக அரசியல் ஆதாயம் தேடி நானும் எனது குடும்ப உறுப்பினர்களும் உங்கள் நிகழ்வுக்கு வரமாட்டோம் என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் அவனல்ல ரிசார்ட்,
இதை தயவு செய்து மறக்க வேண்டாம்.

Dr Yoosuff, AAL

கல்முனை மக்களே ஏமாந்து விடாதீர்கள்.-------------------------------------மர்ஹூம் YLS HAMEED அவர்களின் அரசியல் பயணத்திற்கு...
24/01/2024

கல்முனை மக்களே
ஏமாந்து விடாதீர்கள்.
-------------------------------------
மர்ஹூம் YLS HAMEED அவர்களின் அரசியல் பயணத்திற்கு திட்டமிட்டு முற்றுப்புள்ளி வைத்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், அன்னாரின் மறைவின் பின்னாலுள்ள மகிழ்ச்சியை ஓர் நினைவுப் பகிர்வு மூலம் கொண்டாடி மக்களிடம் அனுதாபம் தேட முனைகிறது. இதன் மூலம் வை.எல்.எஸ். ஹமீட் அவர்களுக்கு செய்த அநீதியை அ.இ.ம.கா மறைத்து, அதனை தமக்கு சார்பான அரசியல் இலாபம் தேட முனைகிறது.

கல்முனை மக்களே ஏமாந்து விடாதீர்கள்.

நாளை மறுநாள் நடைபெறவிருக்கும் இந்த கூட்டத்திற்கு மர்ஹூம் வை.எல்.எஸ். ஹமீதின் குடும்பம் எவரும் செல்வதில்லை என ஏகமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது என்பதை குறிப்பிட்டுக் கூற விரும்புகிறேன்.

வை.எல்.எஸ்ஸின் நலன் விரும்பிகள் அனைவரும் இந்த கூட்டத்தை பகிஸ்கரிக்க வேண்டும் எனவும் வினையமாக வேண்டுகிறேன்.

மர்ஹூம் வை.எல்.எஸ். அவர்கள் தனது மௌத்திற்கு முன்னர் அன்னாருக்கு அ.இ.ம.கா இழைத்த அநீதிகளால் மிகவும் மோசமான மன அழுத்தத்தினால் பாதிப்படைந்திருந்தார். இந்த மன அழுத்தம் அவரது மாரடைப்பிற்கு ஒரு பாரிய காரணியாக அமைந்திருந்தது எனலாம். அதாவது வை.எல்.எஸ் அவர்களின் மரணத்திற்கு அ.இ.ம.காங்கிரசின் அநியாயமும் அதனால் அவரின் இதயத்தில் ஏற்பட்ட பாதிப்பும் அவரது மரணத்திற்கு ஒரு பெரும் காரணமாக அமைந்திருந்தது என பொது மருத்துவ அறிவின் பிரகாரம் கூறலாம்.

இப்போது அவற்றினை மறைத்து அரசியல் இலாபம் தேட முனைகிறது அ.இ.ம.கா.

இன்னும் பல உண்மைகள் எதிர்காலத்தில் வெளிவரும்.
இன்ஷா அல்லாஹ்.

Dr Yoosuff, AAL
(YLS ஹமீடின் சகோதரன்).

இன்று வாக்களிக்க தவறியதுரிஷாட்டின் சமூகத் துரோகமா?------------------------------------------------------இன்று பட்ஜட் 202...
13/12/2023

இன்று வாக்களிக்க தவறியது
ரிஷாட்டின் சமூகத் துரோகமா?
------------------------------------------------------
இன்று பட்ஜட் 2024 வாக்கெடுப்பில் கலந்து கொண்டு ஆளும் கட்சிக்கு எதிராக வாக்களிக்க தவறிய Rishad Bathiudeen சமூகத் துரோகியே.

கட்சி உயர் பீடத்தின் முடிவு இல்லாமல், தான் ஆதரித்து வருகின்ற சஜித் அணியினருக்கு துரோகம் செய்தது மட்டுமல்லாமல் கடந்த தேர்தலில் மொட்டுக்கு (தற்போதைய ரணில் அணி) எதிராக வாக்களிக்க தனது கட்சி ஆதரவாளர்களை தூண்டிய கட்சி தலைவர், எந்த அடிப்படையில் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை என்பதை மக்கள் மன்றிற்கு வெளிப்படுத்த வேண்டும்.

தவறும் பட்சத்தில், கட்சி உயர்பீடமானது பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் றஹுமானுக்கு விளக்கம் கோரியது போல விளக்கம் கேட்டு தகுந்த காரணம் சொல்ல மறுக்கும் பட்சத்தில், தலைவருக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும்.

மேலும், ரணிலிடம் 250 மில்லியன் றூபாய் TFR க்கு பெற்றுக் கொள்ளுவதற்காக எதிர்த்து வாக்களிக்க றிஷாட் தவறினாரா ?

அப்படியாயின் உயர்பீட அங்கீகாரம் பெறப்பட்டதா?

அப்படி உயர்பீட அனுமதி இல்லாமல் இன்று வாக்களிக்க தவறிய ரிஷாட்டுக்கு எதிராக கட்சியின் உயர்பீடம் இஷாக் ரகுமானுக்கு எதிராக நடவக்கை எடுத்தது போன்று செய்யத் தவறுமாயின், அவ்வாறான உயர்பீடம் றிஷாட்டின் கூலியில் ரிஷாட்டின் சுயநல அரசியலுக்காக மகுடி ஊதுகின்ற ஒரு குளு என்று மக்கள் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் தீர்மானிக்க வாய்ப்பு ஏற்படும் அல்லவா?

தலைவரும் உயர்பீடமும் சரியான பதிலை தருவார்களா?

மக்கள் காங்கிரஸ் ஆதரவாளர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

Address

Kalmunai

Website

Alerts

Be the first to know and let us send you an email when ACMC கல்முனை மாவட்டம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to ACMC கல்முனை மாவட்டம்:

Share