இலங்கை ஆரூரர் சைவப்பணி மன்றம்

  • Home
  • Sri Lanka
  • Jaffna
  • இலங்கை ஆரூரர் சைவப்பணி மன்றம்

இலங்கை ஆரூரர் சைவப்பணி மன்றம் சைவத்தின் மேல் சமயம் வேறில்லை 🙏
ஆரூரா தியாகேசா 🙏♥️

இலங்கை ஆரூரர் சைவப்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் நெல்லண்டை அம்மன் அறநெறிப்பாடசாலை, வாணிகல்விநிலைய மாணவர்களுக்கான சமயப்பணியி...
16/05/2026

இலங்கை ஆரூரர் சைவப்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் நெல்லண்டை அம்மன் அறநெறிப்பாடசாலை, வாணிகல்விநிலைய மாணவர்களுக்கான சமயப்பணியின் அவசியம் கருதி திருநாவுக்கரசர நாயனார் குருபூஜை மற்றும் கல்வி ஊக்குவிப்பு பணி நிகழ்வு நெல்லண்டை பத்திரகாளி அம்மன் ஆலய திருமண மண்டபத்தில் இனிதே இடம் பெற்றது. இலங்கை சைவநெறிக் கழகப் பணிகள் அவர்களுடைய வழிகாட்டலில் இலங்கை ஆரூரர் சைவப் பணி மன்றத்தின் நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் வாணி கல்வி நிலையம் ஆசிரியர்கள் நெல்லண்டை அம்மன் அறநெறி பாடசாலை ஆசிரியர்கள் , ஆரூரர் சைவப் பணி மன்றத்தின் உடைய நலன் விரும்பிகள் அனைவருடைய பங்களிப்போடு இனிதே மாணவர்களுக்கு அப்பியாசக்கொப்பிகள் மற்றும் மாணவர்களுக்கான கந்தபுராண நூல் வழங்கல் வைபவம், சிறுவர்களுக்கான அரங்கம் இவற்றோடு இச்சமயப்பணி ஆரூர் பெருமானுடைய திருவருளால் இனிதே இடம் பெற்றது. இந்நிகழ்வில் சிறப்புரை விருந்தினராக மதிப்பார்ந்த சிவஸ்ரீ . ரிஷாங்க குருக்கள் Rishi Kugathas அவர்கள் கலந்து சிறப்பித்து இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் ஏற்றார் போல் அப்பர் சுவாமியினுடைய பணி பற்றியும் இக்கால சமய சமூகப் பணியினுடைய அவசியம் பற்றியும் பேசி இந்நிகழ்வைச்சிறப்பித்தார்கள்.

திருவருளேயாம் சிவாய நம 🙏 ஆரூரா தியாகேசா 🙏♥️

" நால்வர் பொற்றாள் எம் உயிர்த்துணையே".      மக்கள் பணியே மகேசன் பணி 🙏🙏🙏🙏ஆரூர் பெருமான் திருவருள் துணை சிவாய நம 🙏
12/05/2026

" நால்வர் பொற்றாள் எம் உயிர்த்துணையே".
மக்கள் பணியே மகேசன் பணி 🙏🙏🙏🙏
ஆரூர் பெருமான் திருவருள் துணை சிவாய நம 🙏

07/03/2026
 #இலங்கை  #ஆரூரர்  #சைவப்பணி  #மன்றம் எல்லா திருவருளேயாம் 🙏நாட்டின் அனர்த்தப்பணியில் மக்கள் சேவையில் இலங்கை ஆரூரர் சைவப்...
05/12/2025

#இலங்கை #ஆரூரர் #சைவப்பணி #மன்றம்
எல்லா திருவருளேயாம் 🙏
நாட்டின் அனர்த்தப்பணியில் மக்கள் சேவையில் இலங்கை ஆரூரர் சைவப்பணி மன்றத்தின் இளையோர்களுக்கு தாமும் பணி செய்ய வேண்டும் என்ற எண்ணம் மனத்தில் தீப்போல் கனன்றுகொண்டுதான் இருந்தது. நாங்கள் இளைஞர்கள் சேர்ந்து சிவப்பணிக்காகவும் சைவநெறியை இளையோர் மத்தியில் வளர்க்கவும் எண்ணி குறுகிய காலத்தில் எம்பிரான் திருவாரூர் தியாகராஜர் திருவருளால் உருவாகிய சைவ அமைப்பு ஆகும். மன்றத்தின் அனைத்து நிர்வாக உறுப்பினர்கள் அங்கத்தவர்கள் அனைவரும் இளையோர்கள் பொருளாதார ரீதியாக சீரான வாழ்க்கை முறைமை அமைக்கும் நோக்கிலும் உள்ளவர்கள்.திடீரென சமூகப்பணிக்கு பெருந்தொகை பணத்தை அவர்கள் தருவது கடினம் ஆனாலும் பணி செய்ய வேண்டும் என்ற ஆவலில் அனைவருமே சிறு தொகை பணத்தை அளித்தனர் பத்து குடும்பத்திற்கு ஆவது பணி செய்ய வேண்டும் என்று இறைவன் திருவருளால் மன்றம் சார்ந்த உறுப்பினர்களது நண்பர்கள், வெளிநாட்டு நண்பர்கள், சமூக ஆர்வலர்கள் சிலர் எமது பதிவுகளை பார்த்து தாமாக பணிசெய்ய எம்மோடு இணைந்தனர். பத்து என்ற எண்ணிக்கை 25 குடும்பத்திற்கான உதவி பொதிகள் கொடுக்கும் அளவிற்கு தயாரானது. ஒரு இரவுக்குள் நினைத்ததைவிட பண வரவும் அனைத்து இடர்காலப்பணிக்கான பொதியிடல் பணியும் நடைபெற்று நேற்றையதினம் 04/12/2024 வியாழக்கிழமை மாலையில் பட்டியோடை கிராம மக்களுக்கு வழங்கிவைக்கப்பட்டது.பெண் தலைமைத்துவம் கொண்ட குடும்பங்கள் தேர்வு செய்யப்பட்டு வழங்கப்பட்டது.குறிப்பாக மன்றம் சார்ந்த பணியில் ஈடுபட்ட அனைத்து இளைஞர்கள் நிதியுதவி அளித்த பெருமக்கள், பொருட்கள் கொள்வனவு செய்யத கடை உரிமையாளர் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். திருவருள் துணை நிற்க 🙏
பெருமளவு முடியாவிடிலும் எம்மால் முடிந்தளவு பணியினை முதற்கட்டமாக வழங்கியுள்ளோம். எல்லாம் வல்ல சிவபிரானது பெரும் கருணையை எண்ணி வியந்து கொண்டே இப்பதிவினை மன்றத்தின் சார்பில் பதிவிடுகிறேன். இப்பணி இடர்காலத்தின் முதற்கட்ட பணியாகும் இப்பணியும் சமயப்பணியும் தொடர ஈசனிடத்தே விண்ணப்பம் 🙏 பணியின் கணக்கு விபரங்கள் நிர்வாகத்திற்கு உடனே சமர்பிக்கப்பட்டது. விரிவான கணக்கறிக்கை மற்றும் நிதி வழங்கிய சமூக ஆர்வலர்கள் விபரம் தனியாக பதிவேற்றப்படும். தொடர்ந்து எம்மோடு சமயபணியில் சமூகப்பணியில் இணைந்து பணியாற்றுவோரை இலங்கை ஆரூரர் சைவப்பணி மன்றம் இருகரம் கூப்பி வரவேற்று நிற்கின்றது.

#நற்றுணையாவது #நமச்சிவாயவே
#ஆரூரா #தியாகேசா
#சைவத்தின் #மேல் #சமயம் #வேறில்லை

 #இலங்கை  #ஆரூரர்   #சைவப்பணி  #மன்றம்  #இடர்காலசிவப்பணிநாட்டின் இடர்கால பணிக்காக இலங்கை ஆரூரர் சைவப்பணி மன்றத்தின் இளைய...
03/12/2025

#இலங்கை #ஆரூரர் #சைவப்பணி #மன்றம் #இடர்காலசிவப்பணி
நாட்டின் இடர்கால பணிக்காக இலங்கை ஆரூரர் சைவப்பணி மன்றத்தின் இளையோர்கள் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு, அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் பணியினை முன்னெடுத்துள்ளார்கள். இப்பணியை சமூக சிந்தனை கொண்ட இளையோர் மேற்கொண்டு முதற்கட்ட பணிகளை ஆரம்பித்துள்ளார்கள். இப்பணியில் ஆர்வம் உள்ள பெரியோர்கள் மன்றத்தோடு இணைந்து பணிசெய்ய முடியும். பணிசெய்ய விரும்புவோர் இலங்கை ஆரூரர் சைவப்பணி மன்றத்தினரோடு இணைந்து சமூகப்பணி மேற்கொள்ளவும். சிவாய நம 🙏

நற்றுணையாவது நமச்சிவாயவே 🙏

ஆரூரர் சைவப்பணி மன்ற சமூகப்பணிக்கு தொடர்பு கொள்ள வேண்டிய பணியாளர்கள்
தலைவர். சிவத்திரு. த. சதீபன் 0769023543
சமூகப்பணி பொறுப்பாளர் சிவத்திரு கி. அறோஜன் 0776995863
இணைப்பாளர் சிவத்திரு. இ . சஜீவன் +94783200245
சிவாய நம 🙏

29/11/2025
20/11/2025

#சைவக்கொடி
உமாபதி சிவாச்சாரியார் அருளிச்செய்த கொடிக்கவி

Address

PointPedro
Jaffna

Website

Alerts

Be the first to know and let us send you an email when இலங்கை ஆரூரர் சைவப்பணி மன்றம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category