20/10/2024
#தொடரும்_சமூக_நற்பணிகள்
எமது குருநகர் ஜேம்ஸ் வோரியர்ஸ் சமூக முன்னேற்றக் கழகத்தின் "உயர்த்தும் கரங்கள்" செயற்குழுவிற்கு கிடைத்த வேண்டுகோளுக்கு இணங்க
அல்லைப்பிட்டி 3ம் வட்டாரம் வெண்புரவி கிராமத்தில் வசிக்கும் பொருளாதார ரீதியில் மிகவும் நலிவான நிலையில் வாழ்ந்து கொண்டு வருகின்ற, அசீர்வாதம் அன்ரன் றஞ்சிதம் குடும்பத்தினரிடம்
நாம் கேட்டு அறிந்தபோது கிட்டத்தட்ட 37 வருடங்களாக சிறு குழந்தையை போன்ற மனோ நிலையில் வாழ்கின்ற தம்மகளின் தேவைகளையும் தனது குடும்ப தேவைகளையும் தனது வயது முதிர்ந்த காலத்தில் தான் நோய்வாய் பட்டமையால் அன்றாட வாழ்வாதார நிலையில் பல கஷ்டங்களை சந்தித்து மிகவும் வறுமையோடு வாழ்ந்து வருவதையும் நாம் அறிந்து கொண்டோம்.
இக் குடும்பத்துக்கு, அவர்களின் அன்றாட வாழ்வாதார நிலை சிறப்புற செல்வதற்காக சிறுதொழில் செய்வதற்கு தேவையான 100 தேங்காய், 15 கோழி , கோழிமாஸ் மற்றும் அன்றாட தேவையை நிவர்த்தி செய்யும் முகமாக உலர் உணவு பொருட்களான அரிசி, மா, பருப்பு போன்றவையும் அந்த சகோதரி எம்மிடம் விரும்பி கேட்ட பிஸ்கட், அங்கர் பால்மா போன்றவையும் 16.10.2024 அன்று ஜேம்ஸ் வோரியர்ஸ் சமூக முன்னேற்ற கழக உறுப்பினர்களால் வழங்கி வைக்கப்பட்டது.
இவ் உன்னத பணியினை செய்வதற்கு 50000/= ரூபாய் நிதிப்பங்களிப்பினை
வழங்கிய பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் MAXIMILIEN & JADE (DAVID THOMAS ) FRANCE BANDOL
அவர்களுக்கு எமது ஜேம்ஸ் வோரியர்ஸ் சமூக முன்னேற்ற கழகத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்
கொள்கின்றோம்.