தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

  • Home
  • Sri Lanka
  • Jaffna
  • தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இரு தேசங்கள் ஒருநாடு Two Nation One Country

பிந்துனுவேவ தடுப்புமுகாம் படுகொ*லை - 25.10.2000மத்தியமாகாணத்தின் பண்டாரவளை பிந்துனுவேவ பகுதியில் இத்தடுப்பு முகாம் அமைந்...
25/10/2025

பிந்துனுவேவ தடுப்புமுகாம் படுகொ*லை - 25.10.2000

மத்தியமாகாணத்தின் பண்டாரவளை பிந்துனுவேவ பகுதியில் இத்தடுப்பு முகாம் அமைந்துள்ளது. பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் பலர் இங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 18க்கு வயதிற்கு குறைந்த சிறுவர்கள் சிலரும் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

2000 ஒக்டோபர் 25ம் திகதி காலையில் தடுப்பு முகாமிற்கு வெளியே அண்ணளவாக 3,000 வரையிலான சிங்களவர்கள் வாள்கள், கத்திகள் மற்றும் ஆயுதங்களுடன் கூடியிருந்தனர். திடிரென முகாமிற்குள் உள்நுழைந்த அவர்கள் அங்கிருந்த தமிழ் அரசியற்கைதிகள் மீது வாள்கள், கத்திகள் மற்றும் இரும்பு பைப்களால் தாக்குதல் நடாத்த தொடங்கினர். நான்கு அரசியற்கைதிகள் உயிருடன் தீ வைத்து எ*ரிக்கப்பட்டனர். ஒருவரின் தலை து*ண்டிக்கப்பட்டது. இச்சம்பவங்களை அங்கிருந்த பொலிஸார் தடுக்க முற்படாது வேடிக்கை பார்த்தவாறு இருந்தனர்.

சில அரசியல்கைதிகள் உயிர்தப்பிப்பதற்காக ஓடியபோது அவர்கள் மீது பொலிஸாரால் துப்பாக்கிச்சூடும் நடாத்தப்பட்டது. அதில் ஒருவர் கொ*ல்லப்பட்டார்.

இச்சம்பவத்தில் மொத்தமாக 27 அரசியற்கைதிகள் கொ*ல்லப்பட்டனர். 14 பேர் காயமடைந்தனர்.

கொ*ல்லப்பட்டவர்களில் சிலர் 18க்கு வயதிற்கு குறைந்த சிறுவர்களாவார்கள். அவர்களில் ஒருவருக்கு வயது 14. காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் மூவர் 18 வயதிற்கு குறைந்தவர்களாவார்கள். அவர்களில் இருவருக்கு 11, 12 வயதாகும்.

இச்சம்பவம் தொடர்பாக சிறை அதிகாரிகள், பொலிஸார் மற்றும் சிங்களக் காடையர்கள் என 41 பேருக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டது. அவர்களில் இரு பொலிஸார் மற்றும் 03 சிங்களக் காடையர்கள் என ஐவருக்கு 01 யூலை 2003 அன்று நீதிமன்றம் மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்தது. ஏனையவர்கள் குற்றமற்றவர்கள் என விடுவிக்கப்பட்டனர். அதன்பின்னர் அவர்களின் மேன்முறையீட்டுக்கமைய அவர்கள் அனைவரும் நிரபராதிகள் என நீதிமன்றால் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

இப்படுகொ*லைகளை எதிர்த்து மலையகத்தில் பல இடங்களில் அமைதியான முறையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடாத்தப்பட்ட போது, அங்கு வந்த பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடாத்தியதில் 04 மலையக தமிழ் இளைஞர்கள் கொ*ல்லப்பட்டு, பலர் காயமடைந்தனர். அப்பகுதியிலிருந்த தமிழர்களின் கடைகளும் சிங்களக்காடையர்களினால் தீவைத்து எரிக்கப்பட்டது.

அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியதாக, வன்முறையில் ஈடுபட்டதாக வழக்குத் தொடரப்பட்டது.

இப்படுகொ*லையில் ஈடுபட்ட அனைவரும் சில காலங்களில் நிரபராதிகள் என நீதிமன்றால் விடுவிக்கப்பட்டபோதும், படுகொ*லைகளைக் கண்டித்து, அவற்றுக்காக நீதிக்காக போராடியவர்கள் மீதான வழக்கு 15 வருடங்கள் கடந்த நிலையிலும் நடைபெற்று வந்தது.

இன்று இப்படுகொ*லையின் 25வது ஆண்டு நினைவாகும்

#தமிழினப்படுகொலை

சிறிலங்கா அரச ப*யங்கரவாதத்தினால் தமிழர்களுக்கெதிராக நடத்தப்பட்ட இனஅழிப்பானகறுப்பு யூலையை நினைவு கூருவோம்!🛑 போலி சகோதரத்த...
22/07/2025

சிறிலங்கா அரச ப*யங்கரவாதத்தினால் தமிழர்களுக்கெதிராக நடத்தப்பட்ட இனஅழிப்பான
கறுப்பு யூலையை நினைவு கூருவோம்!

🛑 போலி சகோதரத்துவ நாள் வேண்டாம் - உண்மை நீதி பொறுப்புக்கூறல் வேண்டும் 🛑

”அவர்கள் என்னை நி*ர்வாணப்படுத்தி நிலத்தில் படுக்கப் போட்டார்கள். பின் ஏதோவொன்று என்னைத் தொடுவதை உணர்ந்தேன். அது ஒரு சூடா...
29/06/2025

”அவர்கள் என்னை நி*ர்வாணப்படுத்தி நிலத்தில் படுக்கப் போட்டார்கள். பின் ஏதோவொன்று என்னைத் தொடுவதை உணர்ந்தேன். அது ஒரு சூடான இரும்புக்கம்பி. அவர்கள் அக்கம்பியால் எனது முதுகு மற்றும் தோள்ப்பட்டையில் ஒரிரு செக்கன்கள் வைத்து அழுத்தினார்கள். பின்னர் அவ்விடத்திலிருந்து எடுத்து மீளவும் வைத்து அழுத்தினார்கள். இவ்வாறு எனது உடலில் பல இடங்களில் தொடர்ச்சியாகச் செய்து கொண்டிருந்தார்கள். எனது தோள்ப்பட்டை மற்றும் முதுகிலிருந்த முடிகள் கருகிவரும் வாசனையை என்னால் உணரமுடிந்தது. என்னால் வலியைத் தாங்கிக் கொள்ளமுடியாமல் கத்திக் கொண்டிருந்தேன். அவர்கள் தொடர்ந்து சூடு வைத்துக் கொண்டிருந்தார்கள்” - சிறிலங்காப் படைகளின் சித்திரவதை முகாமில் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட தமிழர் ஒருவரின் அனுபவப் பகிர்வு.

- ஆவண வெளியீட்டுப் பிரிவு,
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி
22.07.2022

#தமிழினப்படுகொலை

எம் மண்ணை நாமே ஆளுவோம் ❤️💛     #யாழ்  #மாநகரசபை
05/04/2025

எம் மண்ணை நாமே ஆளுவோம் ❤️💛
#யாழ் #மாநகரசபை

யாழ்ப்பாணத்தின் மையமாம்  #யாழ்  #மாநகரசபையைத் தேசவிரோத சக்திகள் கைப்பற்றுவதைத் தடுக்கத் தொழிற்சங்கவாதி  #தீபன்  #திலீசன்...
05/04/2025

யாழ்ப்பாணத்தின் மையமாம் #யாழ் #மாநகரசபையைத் தேசவிரோத சக்திகள் கைப்பற்றுவதைத் தடுக்கத் தொழிற்சங்கவாதி #தீபன் #திலீசன் தலைமையிலான அணியை ஆதரிப்போம்!

26/12/2024

கிளிநொச்சி மாவட்ட மக்களது தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் தொடர்பில் இன்று இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள்!

🔴 கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள உறுதி இல்லாத அனுமதிப்பத்திர (Permit) காணிகளுக்கு உறுதிகள் வழங்கப்பட வேண்டும்.

🔴 16.1 கிலோமீற்றர் நீளமுள்ள பரமன்கிராய் - கல்முனை வீதி உடனடியாக திருத்தப்பட வேண்டும்.

🔴 சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் கீழ் இயங்கும் முன்பள்ளிகள் அனைத்தும் கல்வித் திணைக்களத்தின் கீழ் மாற்றப்பட வேண்டும்.

🔴 பளையில் அமைந்துள்ள காணிச் சீர்திருத்த ஆணைக்குழு (LRC) காணிகளை சட்டவிரோதமான முறையில் ஆக்கிரமித்துள்ள நிறுவனம் சம்பந்தமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்.

🔴 கனகாம்பிகைக்குளத்தின் ஒரு பகுதி தனியார் ஒருவரினால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டு மண்கொட்டி நிரப்பப்பட்டமை தொடர்பான விசாரணைகளின் நிலை.

🔴 கிளிநொச்சி கோணாவில் மகாவித்தியாலய அபிவிருத்தி பணிகளுக்கென கஜேந்திரகுமார் மற்றும் கஜேந்திரன் ஆகியோரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் 21 லட்சம் ஒதுக்கப்பட்டிருந்தது. அந்த வேலைகள் நிறுத்தப்பட்டுள்ளது. அந்த வேலைகள் மீள ஆரம்பிக்கப்பட வேண்டும்.

🔴 கிளிநொச்சி மாவட்டத்தில் அரசபடைகள் மற்றும் பொலிஸாரினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகள் தொடர்பான விடயங்கள்.

போன்ற விடயங்கள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களினால் சுட்டிக்காட்டப்பட்து,

11/12/2024

🔴 இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட எமது பிள்ளைகள் எங்கே?

🔴 சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு மன்னார் மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோர் உறவுகளின் சங்க ஏற்பாட்டில் மன்னார் நகர்ப்பகுதியில் நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமாகிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் தெரிவித்த கருத்து...!

08/12/2024

🛑 தென்மராட்சி வரணி நாவற்காடு பகுதி நெல் வயல்கள் வெள்ளநீர் தேங்கிநிற்பதால் அழிவடையும் நிலையில் இருப்பதாகத் தெரிவித்து நேற்று முன்தினம் நாவற்காடு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.

🛑 குறித்த பகுதிக்குச் சென்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் செயற்பாட்டாளர்கள் பாதிகப்பட்ட விவசாயிகளுடன் கலந்துரையாடி பிரச்சினைகளை கேட்டறிந்ததுடன், குறித்த விடயங்களை பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஊடாக கவனத்திற்குக் கொண்டுவந்து பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார்.

06/12/2024

🛑 இலங்கையில் நீண்ட காலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 10 தமிழ் அரசியல்கைதிகளின் விடுதலை தொடர்பாக அனுரவிடம் பேசுவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும்இ பாராளுமன்ற உறுப்பினருமாகிய கஜேந்திரகுமார் பொம்பம்பலத்திடம் ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி அன்ரூ பிரான்ஸ் வாக்குறுதி வழங்கியுள்ளார்.

🛑 ஐ.நா வதிவிடப் பிரதிநிதிக்கும், கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கும் இடையில் நடந்த சந்திப்பின் போது அரசியல்கைதிகள் தொடர்பிலும் வலியுறுத்தப்பட்டது. அதன்போதோ ஐ.நா வதிவிடப் பிரதிநிதி இந்த வாக்குறுதியை வழங்கியுள்ளார்.

06/12/2024

அண்மையில் பெய்த கனமழையினால் பாதிக்கப்பட்ட தென்மராட்சி தவசிக்குளம், மிருசுவில் பகுதி மக்களின் நிலை தொடர்பாக கேட்டறிந்ததுடன், அவர்களுக்கான உதவிப்பொருட்களும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமாகிய செல்வராசா கஜேந்திரன் மற்றும் செயற்பாட்டாளர்களினால் வழங்கிவைக்கப்பட்டது.

எமது அரசியல் இயக்கத்தின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் பாரளுமன்றத்திற்கு செல்லும் முன்னர், பொதுச்செயலாளர் செ...
19/11/2024

எமது அரசியல் இயக்கத்தின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் பாரளுமன்றத்திற்கு செல்லும் முன்னர், பொதுச்செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் மற்றும் ஏனைய செயற்பாட்டாளர்களுடன் முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை நினைவு முற்றத்திற்கும் துயிலுமில்லத்திற்கும் சென்று வணக்கம் செலுத்தி தனது பயணத்தை ஆரம்பித்தார்.

Address

Sabapathi Lane, Kokuvil Est
Jaffna

Alerts

Be the first to know and let us send you an email when தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி:

Share