06/12/2021
05.12.2021 (ஞாயிற்றுக்கிழமை), சங்கானை லயன்ஸ் கழகமும், கருகம்பனை தமிழ் மன்ற சனசமூக நிலையமும் மற்றும் இந்து இளைஞர் விளையாட்டுக்கழகமும் இணைந்து கீரிமலை கருகம்பனையில் மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது.
Note:- இந்த இரத்ததான முகாமில் மேற்படி சங்கானை லயன்ஸ் கழக உறுப்பினர்களும், கருகம்பனை தமிழ்மன்ற சனசமூக நிலையம் மற்றும் இந்து இளைஞர் கழகம் ஆகிய கழகங்களின் உறுப்பினர்களாகவுள்ள பெண்கள், காங்கேசன்துறை மற்றும் இளவாலை பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த 10 பொலிஸ் உத்தியோகத்தர்கள், கருகம்பனைக் கிராமத்தவர்கள், தன்னார்வக் குருதிக் கொடையாளர்கள் என 120 பேர் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு உயிர்காக்கும் உன்னத பணிக்கு ஒத்துழைப்பு வழங்கினர்.
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் நடமாடும் இரத்த வங்கிப் பிரிவினரும், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவினரும் இணைந்து நேரடியாக இரத்தம் பெற்றுக் கொண்டனர்.
இடம்: கீரிமலை கருகம்பனை கலாசார மண்டபம்
*WE SERVE WITH LOVE*
❤️
🙏🏻🙏🏻🦁🙏🏻🙏🏻
*LIONS CLUB OF CHANKANAI*