Sri Lanka janaza announcement

Sri Lanka janaza announcement ஜனாஸா செய்திகளை எமக்கு அனுப்பி வையுங்கள்

ஜனாஸா அறிவித்தல் சின்னக் கிண்ணியா 2ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் மாஞ்சோலைச் சேனை ஆலிம் வீதியை வசிப்பிடமாக கொண்டவரும் இலங...
27/05/2025

ஜனாஸா அறிவித்தல்

சின்னக் கிண்ணியா 2ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் மாஞ்சோலைச் சேனை ஆலிம் வீதியை வசிப்பிடமாக கொண்டவரும் இலங்கை மின்சார சபை ஊழியருமான பாரூக் சிப்லி என்பவர் 27-05-2025 காலை 6.00 மணியளவில் மகரகம வைத்தியசாலையில் வபாத்தானார்

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்

அன்னார் அப்துல் ஹமீது பயாஸா என்பவரின் அன்புக் கணவரும்

அப்துல் ரஹீம் பாரூக் செய்லக்காதர் பஸுரா என்பவர்களின் அன்பு மகனும்

மர்ஹும் அப்துல் ஹமீது
உம்மு நத்திமா என்பவர்களின் அன்பு மருமகனும்

சிப்னா ஆசிரியை
சிப்ரினா ஆசிரியை .சஹ்னா என்பவர்களின் அன்புச் சகோதரரும்

அஹமட் டீடாட். தியான் என்பவர்களின் அன்புத் தந்தையும்

பாமிஸ் GS பாரிஸ் DO இஜாஸ்
பாரிஸ் ஆகியோரின் மச்சானும் ஆவார்

அன்னாரின் ஜனாஸா இன்று இஷாத் தொழுகையின் பின்னர் மாஞ்சோலைச் சேனை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்

அன்னாரின் மறுமை வாழ்வுக்காக பிரார்த்திப்போமாக ஆமீன் ஆமீன் ஆமீன்

தகவல்
மச்சான் பாமிஸ் GS

ஜனாஸா அறிவித்தல். ஜூம்மாஆ பள்ளிவாயல் வீதி மீராவோடை (04) யை வசிப்பிடமாக கொண்ட .சரீப் லெப்பை ஆதம் லெப்பை என்பவர் நேற்று 23...
24/05/2025

ஜனாஸா அறிவித்தல்.

ஜூம்மாஆ பள்ளிவாயல் வீதி மீராவோடை (04) யை வசிப்பிடமாக கொண்ட .

சரீப் லெப்பை ஆதம் லெப்பை என்பவர் நேற்று 23.05.2025 பி.ப (08) மணியளவில் வாழைச்சேனை வைத்தியசாலையில் வைத்து இறையழைப்பை ஏற்றுக் கொண்டார்.

இன்னாலில்லாஹி வ இன்னாயிலஹி ராஜிஊன்.

அன்னார். இஸ்மா லெப்பை வெள்ளையும்மா என்பரின் அன்புக் கணவரும்.

நுபையில். முஸம்மில், முஸம்மினா ஆகியோரின் அன்புத் தந்தையும்.

பசீர், மர்ஹூம் றிசாயினா. றிபானா ஆகியோரின் மாமனாரும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா தற்போது அவருடைய மகளின் வீட்டில் உள்ளது
இடம் மீராவோடை ஜிம்மா பள்ளி வாயலுக்கு முன்பாக

ஓட்டமாவடி மாணவன் நீரில் மூழ்கி மரணம்! - முழு விபரம்பாடசாலை மாணவன் ஒருவன் நீரில் மூழ்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளத...
18/05/2025

ஓட்டமாவடி மாணவன் நீரில் மூழ்கி மரணம்! - முழு விபரம்

பாடசாலை மாணவன் ஒருவன் நீரில் மூழ்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் இன்று (18) வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சந்தியாற்றுப் பகுதியில் வைத்து இடம்பெற்றுள்ளது.

நண்பர்களுடன் சேர்ந்து சந்தியாற்று நீரோடையில் குளித்துக் கொண்டிருக்கும் போதே மாணவர் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளதாக விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.

இவ்வாறு மரணமடைந்தவர் ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் உயர்தரத்தில் கணிதப் பிரிவில் கல்வி கற்று வரும் ஓட்டமாவடி பி.எஸ்.குறுக்கு வீதியில் வசித்து வரும் முகம்மது அலிகான் அஸ்லூன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Kalkudah Nation

இலங்கையில் அக்கரைப்பற்றை சேர்ந்த குர்சித் அப்துல் காசிம் பௌசுல் அமீன் (31 வயது) அவர்கள் இன்று 31/03/2025 திங்கள்கிழமை கட...
31/03/2025

இலங்கையில் அக்கரைப்பற்றை சேர்ந்த குர்சித் அப்துல் காசிம் பௌசுல் அமீன் (31 வயது) அவர்கள் இன்று 31/03/2025 திங்கள்கிழமை கட்டாரில் காலமானார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

வல்ல அல்லாஹ் அன்னாரின் நற்கிரியைகளை ஏற்று ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனத்தை வழங்குவானாக.

அன்னாரின் இழப்பை தாங்கும் மன வலிமையை அன்னாரின் குடும்பத்தினருக்கு வழங்க இறைவனிடம் பிரார்த்திப்போமாக.

இன்ஷா அல்லாஹ் ஜனாஸா நல்லடக்கம் பற்றிய தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

 #ஜனாஸா_அறிவித்தல்!!மன்னார் பொற்கேணியைப் பிறப்பிடமாகவும் கல்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட  #முகமட்  #ஹனீபா (G.S) அவர்கள...
13/03/2025

#ஜனாஸா_அறிவித்தல்!!

மன்னார் பொற்கேணியைப் பிறப்பிடமாகவும் கல்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட #முகமட் #ஹனீபா (G.S) அவர்கள் கற்பிட்டியில் காலமானார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.
அன்னார் காலஞ்சென்ற சரீபா உம்மாவின் அன்புக் கணவரும்,
❤️சமீறா உம்மா
❤️பஸ்னா உம்மா
❤️ஜலீஸா (ஆசிரியை)
❤️ஸியான் (முசலி பிரதேச செயலகம்)
❤️மில்ஹான் ஆகியோரின் அன்புத் தந்தையுமாவார் அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பற்றிய தகவல் பின்னர் அறிவிக்கப்படும்

ஜனாஸா அறிவித்தல் ஏறாவூர் பெண்பாடசாலை விதியில் வசித்துவந்த ஏறாவூர் பலநோக்கு கூட்டுறவுச்சங்க முன்னால் களஞ்சியப் பொறுப்பாளர...
11/03/2025

ஜனாஸா அறிவித்தல்

ஏறாவூர் பெண்பாடசாலை விதியில் வசித்துவந்த ஏறாவூர் பலநோக்கு கூட்டுறவுச்சங்க முன்னால் களஞ்சியப் பொறுப்பாளர் "முகம்மது இஸ்மாயில் முகைதீன் பாவா” அவர்கள் இன்று காலை வபாத்தானார்கள் (இன்னாலில்லாஹி.....)

அன்னார் முகம்மது இஸ்மாயில் - பாத்திமுத்து ஆகியோரின் அன்பு மகனும் மீராசாய்வு மரியம் கண்டு என்பவரின் அன்புக் கணவரும் அஹமட் ரஸ்மி, அஹமட் ராசித்(துபாய்), அப்துல் ஹபீல் மெளலவி பாத்திமா நுபைரா (மட்டக்களப்பு, போதனா வைத்தியசாலை) பாத்திமா ரஸதா ஆகியோரின் அன்பு தந்தையும், MBM, பஸ்லான் (MLT) என்பவரின் மாமாவும் ஆவார்கள் மற்றும் சதக்கத்துல்லாஹ், மர்ஹூமா ஜெமீலா, தாகிரா, சித்திசரிபா, சாலிகா ஆகியோரின் சகோதரரும் ஆவார்கள் இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் தெரியபடுத்துகின்றோம்.

இவ்வண்ணம்
தகவல்
அகமட் ரஸ்மி
(மகன்)

ஜனாஸா நல்லடக்கம் இன்று காலை சுபஹ் தொழுகையை தொடர்ந்து காட்டுப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

 #ஜனாஸா_அறிவித்தல்03 Mar 2025 இறக்காமம் 01ம் பிரிவில் வசித்து வந்த S.றிஸ்வான் (மௌலவி) என்பவர் இன்று (03 ) அதிகாலை காலமான...
03/03/2025

#ஜனாஸா_அறிவித்தல்

03 Mar 2025
இறக்காமம் 01ம் பிரிவில் வசித்து வந்த S.றிஸ்வான் (மௌலவி) என்பவர் இன்று (03 ) அதிகாலை காலமானார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

S.T சுபைர் சாப் (துரைஸாப்) ஹாஜியார் அவர்களின் அன்பு மூத்த மகன் என்பது குறிப்பிடத்தக்கது

ஜனாஸா அறிவித்தல்மாவடிப்பள்ளி மர்கஸ் மஹல்லாவைச் சேர்ந்த *உதுமாலெப்பை முஹம்மத் ஹனீபா* என்பவர் காலமானார் இன்னாலில்லாஹி வ இன...
03/03/2025

ஜனாஸா அறிவித்தல்
மாவடிப்பள்ளி மர்கஸ் மஹல்லாவைச் சேர்ந்த *உதுமாலெப்பை முஹம்மத் ஹனீபா* என்பவர் காலமானார் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
*அண்ணார் மர்ஹூம்களான மைமுனாச்சி, உதுமாலெப்பை ஆகியோரின் அன்பு மகனும் ஐனுல் மர்ழியா (மெளபுரா ) என்பவரின் கணவரும் அஸ்வர், அர்ஸாத், அனீஸா ( அல் மதீனா பாலர் பாடசாலை ) ஆகியோரின் அன்புத் தந்தையும்* ஆவார். அன்னாரது ஜனாஸா இன்று இரவு 10 மணி அளவில் மர்க்கஸ் பள்ளிவாசலில் தொழுவிக்கப்பட்டு ரஹ்மானியா மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

ஜனாஸா அறிவித்தல்௧ல்முனை ஜும்மா பள்ளிவாசல் வீதியை சேர்ந்த அப்துல் காதர் முபாரக் (முன்னால் பொலிஸ் உத்தியோகத்தர்-STF) அவர்க...
27/02/2025

ஜனாஸா அறிவித்தல்

௧ல்முனை ஜும்மா பள்ளிவாசல் வீதியை சேர்ந்த அப்துல் காதர் முபாரக் (முன்னால் பொலிஸ் உத்தியோகத்தர்-STF) அவர்கள் இன்று 27.11..2025 புதன்கிழமை காலமானார்.

“இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்”
அன்னார் சஹீலா அவர்களின் கணவரும் மர்ஹும்களான அப்துல் காதர் (Royal) , றகுமத்துமா ஆகியோரின் புதல்வரும் சமீம் (Royal Travels), சலீம், வாஹிதா, கைறூன்நிஸா, சம்சுன் நிஷா (ஆசிரியை- அல் மிஸ்பா) ஆகியோரின் சகோதரரும் ஹலால்டீன், முபாரக் (ரஹ்மான் ஜும்மா பள்ளிவாசல்), அக்பர், மஹ்ரூப் ஆகியோரின் மச்சானும் தில்ஷாத் ஆஷிக் (Sri Lanka Telecom), றிஷாத் ஆகியோரின் மாமாவும் ஆவார்.

அண்ணாருடைய பாவங்கள் அனைத்தையும் மன்னித்து உயர்ந்த சொர்க்கமான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் என்னும் சுவனத்தை அவருக்கு வழங்க வல்லவன் அல்லாஹ்விடத்தில் பிரார்த்தனை செய்தவர்களாக…
ஆமீன்…🤲
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நாளை (2025.02.28) காலை 8 மணிக்கு நூறாணியா மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டும்.

ஜனாஸா அறிவித்தல்மாவடிப்பள்ளியைச் சேர்ந்த *செய்யது அப்துல் காதர் மௌலானா(* பூ வாப்பா) என்பவர் காலமானார் இன்னாலில்லாஹி வ இன...
24/02/2025

ஜனாஸா அறிவித்தல்

மாவடிப்பள்ளியைச் சேர்ந்த *செய்யது அப்துல் காதர் மௌலானா(* பூ வாப்பா) என்பவர் காலமானார் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அண்ணார்

பார் மௌலானாCDO, பாயிஸ் மௌலானா AMANA BANK, , பாஸில் மௌலனா TEACHER ஆகியோரின் அன்புத் தந்தையும் பஹ்மி மௌலானா, இர்பான் மௌலானா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார். அன்னாரது ஜனாஸா நல்லடக்கம் இன்று இரவு 9 மணி அளவில் மாவடிப்பள்ளி ரஹ்மானியா மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் தகவல் மகன் ஃபார் மௌலானா.

Address

332 Kal Vadi Road Mancholai Oddamavadi
Batticaloa
30420

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sri Lanka janaza announcement posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category