உளவியல் ஆலோசனை மய்யம்

உளவியல் ஆலோசனை மய்யம் "ஆரோக்கியமான மனோவலிமையுள்ள ஒரு சமூகத்தை உருவாக்குவோம்"

🩸 உங்கள் சில நிமிடங்கள்… ஒருவரின் முழு வாழ்க்கையைக் காப்பாற்றலாம்!PAC நிர்வாக உறுப்பினர் அமரர் நடராஜா கோபிநாத்தின் இரண்ட...
29/08/2026

🩸 உங்கள் சில நிமிடங்கள்… ஒருவரின் முழு வாழ்க்கையைக் காப்பாற்றலாம்!

PAC நிர்வாக உறுப்பினர் அமரர் நடராஜா கோபிநாத்தின் இரண்டாவது நினைவுதினத்தை முன்னிட்டு, உளவியல் ஆலோசனை மய்யம் மற்றும் Lions Club of Batticaloa Spectrum for Humanity இணைந்து மாபெரும் இரத்ததான முகாமை ஏற்பாடு செய்துள்ளன.

📅 20/09/2026 (ஞாயிற்றுக்கிழமை)

⏰ காலை 08:30 மணிமுதல்…

📍 RDHS Auditorium, Batticaloa

கோபிநாத்தின் நினைவுகளை வெறும் கண்ணீரால் மட்டுமல்ல—மற்றொருவரின் உயிரைக் காக்கும் உதிரத்தாலும் நினைவுகூர்வோம். ❤️

இரத்ததானம் செய்யத் தகுதியுடைய அனைவரும் தவறாது கலந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமும் இந்தப் பதிவைப் பகிர்ந்து, அதிகமான இரத்தக் கொடையாளர்களை இணைத்திடுங்கள்.

உதிரம் கொடுப்போம்… உயிரைக் காப்போம்! 🩸🤝

#குறிப்பு : கொடையாளர்களுக்கு சான்றிதழ்களும், பயன்மிகு மரங்களும் 🪴 வழங்கப்படும்.

Lions Club of BATTI Spectrum for Humanity

 #மீண்டும் களத்தில் PAC 🔥✌️உளவியல் ஆலோசனை மய்யமானது (PAC) கடந்த ஏழு வருடங்களுக்கு மேலாக வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் ...
24/03/2026

#மீண்டும் களத்தில் PAC 🔥✌️

உளவியல் ஆலோசனை மய்யமானது (PAC) கடந்த ஏழு வருடங்களுக்கு மேலாக வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் போன்ற பகுதிகளில் தேவையுடைய மக்களின் உளவள விருத்திக்காக பல்வேறு செயற்திட்டங்களை நேரடியாகவும், இணையவழி மூலமாகவும் நாடாத்தி அதில் சிறந்த பெறுபேற்றினையும் கண்டுவந்துள்ளது.

தனிநபர் வேலைப்பளு காரணமாக சிறிது காலம் இணையவழி செயற்பாடுகளை மட்டுமே நடாத்தி வந்த நாம் மீண்டும் நமது சமூகத்தில் தொடர்ச்சியாக நடந்துவரும் கசப்பான விடயங்களை தடுக்கும் முகமாக மீண்டும் களத்தில் செயற்திட்டங்களை மேற்கொள்ள முயற்சித்துள்ளோம்.

அந்த வகையில் கடந்த 21/03/2026 (சனிக்கிழமை) மட்டக்களப்பு மாவட்ட பட்டிருப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட ஓந்தாச்சிமடம் ஶ்ரீ விநாயகர் மகா வித்தியாலய மாணவர்களுக்கான உளநல, தலைமைத்துவ மற்றும் சமூகவலைத்தள பாவனை தொடர்பான செயற்திட்டம் நடைபெற்றது.

உளவியல் ஆலோசனை மய்யத்தின் (PAC) ஏற்பாட்டிலும் ஒருங்கிணைப்பிலும், அரிமாக கழகத்தின் (Lions Club of Batticaloa Supreme) அனுசரணையிலும் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாடசாலை அதிபர் திரு. E தவராஜா, அரிமா கழகத்தின் தலைவர் திரு I காண்டீபா, உளவியல் ஆலோசனை மய்ய செயலாளர் திரு T ரணீஷியன் பார்த்லட், உளவியல் ஆலோசனை மய்ய நிர்வாக உறுப்பினர்களான திரு சிரஞ்சீவி, திரு திவாகர், திரு கிருஷாந், திரு கோபி, செல்வி பிரஷா மற்றும் அரிமா கழக உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

சமகாலத்தில் எமது சமூகத்தின் குறிப்பாக பாடாசலை மாணவர்களுக்கு தடையின்றி தெரிந்தும் புரிந்தும் கொள்ள வேண்டிய பல விடயங்கள் எமது வளவாளர்களால் இலகுமுறையில் சேர்க்கப்படலே இச்செயற்திட்டத்தின் முக்கிய நோக்கம்.

குறித்த செயற்திட்டத்தின் வளவாளர்களாக செல்வி C பிரஷா, திரு P தினேஷ், திரு N சபேஷன், திரு T ரணீஷியன் பார்த்லட் மற்றும் திரு கோபி அவர்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த செயற்திட்டத்திற்கான அனுமதியை வழங்கிவைத்த வலயக்கல்விப்பணிப்பாளர், அனுசரணையை வழங்கி வைத்த அரிமா கழகம் (Lions Club of Batticaloa Supreme), தமது நேரத்தை மாணவர்களின் நலனுக்காக ஒதுக்கிய வளவாளர்கள், ஒத்துழைப்பை நல்கிய பாடசாலை அதிபர், கலந்து கொண்ட மாணவர்கள் அனைவருக்கும் உளவியல் ஆலோசனை மய்யம் சார்பாக மனநிறைவான நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

உளவியல் ஆலோசனை மய்யம்

ஊடகப்பிரிவு - PAC

06/01/2026
05/01/2026

நாம் ஏன் பிறர் பேசுவதைப் பற்றி கவலை கொள்ள கூடாது?

பிறர் பேசுவது அவர்களின் மனநிலையின் பிரதிபலிப்பு…
அது நமது வாழ்க்கையின் தீர்ப்பு அல்ல.

நாம் நன்றாக இருந்தாலும் பேசுவார்கள்,
முன்னேறினாலும் பேசுவார்கள்,
அமைதியாக இருந்தாலும் கூட பேசுவார்கள்.
ஏனெனில்—
பிறரின் வாழ்க்கையில் வெற்றிடமாக இருக்கும் இடங்களை
அவர்கள் நமது வாழ்க்கையைப் பற்றி பேசுவதால் நிரப்பிக் கொள்கிறார்கள்.

பிறர் சொல்வதெல்லாம் உண்மை என்றால்
இந்த உலகில் வெற்றியடைந்த ஒருவரும்
அமைதியாக வாழ்ந்திருக்க மாட்டார்.
வெற்றி பேசும் குரல்களை விட
வெற்றியை சகிக்க முடியாத குரல்களே அதிகம்.

நாம் கவலை கொள்ளும் ஒவ்வொரு வார்த்தைக்கும்
நமது மன அமைதி ஒரு சிறு பகுதியை இழக்கிறது.
அந்த அமைதியை மீண்டும் பெற
நாம் செலவிடும் காலத்தை
யாரும் திருப்பி தரப் போவதில்லை.

நீ சரியான பாதையில் இருந்தால்—
சத்தம் அதிகமாக இருக்கும்.
நீ உன் உண்மையில் நிலைத்திருந்தால்—
விமர்சனம் தவிர்க்க முடியாதது.

அதனால் நினைவில் கொள் 🌿
பிறர் பேசுவதை நிறுத்த முடியாது…
ஆனால், அதனால் உன் வாழ்க்கை பாதையை
மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

உன் கவனம் உன் வளர்ச்சியில் இருக்கட்டும்,
உன் அமைதி உன் கைகளில் இருக்கட்டும்.
மௌனம் பலவீனம் அல்ல—
அது முதிர்ச்சியின் அடையாளம்.

✍️மௌனத்தின் மொழி

Address

No. 568/2, 3rd Cross, Trinco Road, Sinna Urani
Batticaloa

Alerts

Be the first to know and let us send you an email when உளவியல் ஆலோசனை மய்யம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to உளவியல் ஆலோசனை மய்யம்:

Shortcuts

Share

Category