மலையக சிறுத்தைகள் கட்சி

மலையக சிறுத்தைகள் கட்சி Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from மலையக சிறுத்தைகள் கட்சி, Political Party, no 14c, dewala Street, badulla, Badulla.

14/08/2026
14/08/2026


மலையகத்தின் உண்மையான மாற்றத்தை சுமப்பவர்கள்…!மலையகத்தின் அடையாளம் என்று காலங்காலமாகச் சொல்லப்பட்டு வரும் பல்வேறு விடயங்க...
13/08/2026

மலையகத்தின் உண்மையான மாற்றத்தை சுமப்பவர்கள்…!

மலையகத்தின் அடையாளம் என்று காலங்காலமாகச் சொல்லப்பட்டு வரும் பல்வேறு விடயங்களைத் தாண்டி, மிக மிக ஆரோக்கியமானதும், பெறுமதியானதுமான பல விஷயங்கள் இன்னும் நமக்குள் உயிரோடு இருக்கின்றன.

அவற்றில் மிக முக்கியமான ஒன்று — சமூக மாற்றத்தையும், எழுச்சியையும் கனவு கண்டு, அதற்காகத் தங்களுடைய சொந்த வாழ்க்கையையே தியாகம் செய்து கொண்டிருக்கும் ஒரு சுயநலமற்ற இளைஞர் படை.

அவர்கள் பல்வேறு அரசியல் கட்சிகளில் இருக்கலாம். ஏன், ஏமாற்று அரசியல்வாதிகளின் அருகில்கூட இருக்கலாம். ஆனால் அவர்களின் மனதிற்குள் இருப்பது ஒன்றே ஒன்று — சூழ்நிலை எதுவாக இருந்தாலும், தங்களால் முடிந்த ஏதாவது ஒன்றை தங்கள் சமூகத்திற்குச் செய்ய வேண்டும் என்ற எண்ணம்.

பதவிக்காக ஓடாமல், பணத்திற்காக வளையாமல், புகழுக்காக அரசியல் செய்யாமல்…

பல ஆண்டுகளாக செம்பு தூக்கியெனவும் கொடிகள் சுமந்தும், கூட்டங்களில் அலைந்தும், ஏராளமான அவப்பெயர்களையும் விமர்சனங்களையும் சுமந்தும், “என்றாவது ஒருநாள் மாற்றம் வரும்” என்ற மாறாத நம்பிக்கையுடன் போராடிக் கொண்டிருக்கும் ஏராளமான மலையக இளைஞர்கள் நம்மிடையே இருக்கிறார்கள்.

அந்த வரிசையில், பல ஆண்டுகளாக நம் சமூகத்தில் ஆரோக்கியமான, கேள்வி கேட்கும், புரட்சிகர அரசியல் சிந்தனையை விதைத்தவர்களில் தோழர் மோகனும் ஒருவர்.

தனக்காக எதையாவது சாதிக்க வேண்டும் என்று அவர் நினைத்திருந்தால், அவரிடம் இருக்கும் எழுத்தாற்றலையும் பேச்சாற்றலையும் பயன்படுத்தி இந்தப் பரம்பரை அரசியலுக்கு ஒரு முட்டுக்கொடுத்திருந்தாலே போதும் — அடுத்த நாளே ஏதாவது ஒரு பதவி அவரது கையில் இருந்திருக்கும்.

ஆனால் அவர் அந்தப் பாதையைத் தேர்ந்தெடுக்கவில்லை.

அனைவரையும் திருப்திப்படுத்துவதற்குப் பதிலாக உண்மையைப் பேசினார்.
பதவியைத் தேடுவதற்குப் பதிலாக கேள்விகளைத் தேடினார்.
அரசியல்வாதிகளைப் புகழ்வதற்குப் பதிலாக, அவர்களின் ஏமாற்று நாடகங்களைத் தோலுரித்தார்.

அதற்காக நண்பர்களை இழந்திருக்கலாம். எதிரிகளைச் சம்பாதித்திருக்கலாம். பல விமர்சனங்களை எதிர்கொண்டிருக்கலாம்.

ஆனால் ஒரு விஷயத்தில் மட்டும் அவர் ஒருபோதும் சமரசம் செய்யவில்லை — தன் சமூகத்தின் மீதான அக்கறையில்.

இப்படிப்பட்ட ஒருவர் மலையக சிறுத்தைகள் கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளராகப் பொறுப்பேற்பது, அவருக்கு கிடைத்த பதவி மட்டுமல்ல; அந்தப் பதவிக்கே கிடைத்த ஒரு பெருமை.

வாழ்த்துக்கள் தோழா! ❤️‍🔥

இனி உங்களுக்கான களம் பெரிது…
உங்கள் எழுத்துக்கும், உங்கள் பேச்சுக்கும், உங்கள் சிந்தனைக்கும் களம் இருக்கிறது.

கலக்குவாயாக…!
மலையகத்தின் மாற்றத்திற்கான குரலாக உயர்வாயாக…!

— வாழ்த்துக்களுடன்
மலையக சிறுத்தைகள்

மலையக மாற்றத்தில் பெண்களின் பங்கு — இனி தவிர்க்க முடியாது!மலையகத்தின் உண்மையான மாற்றம் இன்னும் பல தசாப்தங்களாக நம்மை நெர...
13/08/2026

மலையக மாற்றத்தில் பெண்களின் பங்கு — இனி தவிர்க்க முடியாது!
மலையகத்தின் உண்மையான மாற்றம் இன்னும் பல தசாப்தங்களாக நம்மை நெருங்க முடியாமல் இருப்பதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று, மலையகப் பெண்களின் அரசியல் பங்களிப்பு போதிய அளவில் இல்லாமையே.

காலங்காலமாக நம்மைச் சுற்றி நடைபெறும் அரசியலைப் பார்த்து, பெரும்பாலான நம் பெண் பிள்ளைகள் அரசியலையே வெறுத்து ஒதுக்கிவிடுகிறார்கள். ஆனால், அந்த விலகலின் விளைவுகளால் இறுதியில் அதிகம் பாதிக்கப்படுவதும் அவர்களே.

தனித்துவமான அரசியலைத் தைரியமாகப் பேசத் தொடங்கும் ஒவ்வொரு மலையகப் பெண்ணும் ஒரு மாற்றத்தின் விதை.
ஆனால், அந்த விதைகள் முளைக்கத் தொடங்கும்போது அவற்றை #வார்த்தைகளாலும் #அவதூறுகளாலும் #உடைத்தெறியாமல், அவர்களின் குரலுக்கு மதிப்பும், களத்தில் நிற்கும் தைரியத்திற்கு #மரியாதையும் கொடுக்க வேண்டியது இந்த #சமூகத்தின் #பொறுப்பு.

நமது வீடுகளில் இருக்கும் பெண் பிள்ளைகளுக்கு நாம் கொடுக்கும் அதே மதிப்பையும், கண்ணியத்தையும், பாதுகாப்பையும், ஊக்கத்தையும் அரசியல் களத்தில் தைரியமாகக் களம் காணும் ஒவ்வொரு சகோதரிக்கும் வழங்கும் நாள் வர வேண்டும்.
அன்றுதான் உண்மையான மலையக மாற்றம் துளிர்விடத் தொடங்கும்.

அந்த மாற்றத்திற்கான பயணத்தில்,
மலையக சிறுத்தைகள் கட்சியின்
#மகளீர் #விவகாரப் #பொறுப்பை ஏற்றிருக்கும் அன்புச் சகோதரிக்கு, #மசிகவின் இதயப்பூர்வமான வாழ்த்துக்கள்! ❤️
பெண்கள் பார்வையாளர்கள் அல்ல…
மாற்றத்தை உருவாக்கும் சக்திகள்!
#மலையகசிறுத்தைகள்கட்சி
#மலையகமாற்றம்
#பெண்களின்அரசியல்
#பெண்களின்பங்களிப்பு
#மசிக
#மக்களோடுமக்களாக

பணிவு, பக்குவம், தெளிவு ,தூரநோக்கு  ,அரசியல் சிந்தனை  #இவையெல்லாம்  #இயல்பாக கொண்ட  #இளைஞர்களை தேடி  #ஒன்றிணைத்தாலே சமூக...
12/08/2026

பணிவு, பக்குவம், தெளிவு ,தூரநோக்கு ,அரசியல் சிந்தனை #இவையெல்லாம் #இயல்பாக கொண்ட #இளைஞர்களை தேடி #ஒன்றிணைத்தாலே சமூக #மாற்றம் சாதரணமாக #எழுச்சிபெற தொடங்கிவிடும் .
அன்புத் தோழர் #சஞ்சீவ் அப்படியொரு #ஆளுமையான #இளைஞன்தான்,
சாதிக்க வேண்டும் இந்த சமூக இளைஞர்களுக்கு ஏதாவது நல்லது செய்து விட வேண்டுமென #பத்து #வருடங்களுக்கு மேல் பல முயற்சிகளோடு ஓடிக்கொண்டிருக்கும்
#ஸ்மார்டான #செயல்பாடுடைய ஒருவர் நம் கட்சி இளைஞர்களின் முன்நின்று, #முன்நகர்த்த வருகிறார் என்பது பேரானந்தம் .
தோழா காலங்கள் தந்த அனுபவங்கள் எதுவும் எப்போதும் வீண்போக வாய்ப்பில்லை...
#வெற்றித் #தோல்விக்கான பயணமல்ல #மசிக
#வரலாற்றை
படைக்கும்
#மகத்துவம் ....
வாழ்த்துக்கள் .......

நம் சமூகத்தில்  #யூகித்தேனும் பார்க்க இயலாத அளவிலான  #ஆளுமையான இளைஞர் பெருமக்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள்...அவர்கள்  #ஆ...
12/08/2026

நம் சமூகத்தில் #யூகித்தேனும் பார்க்க இயலாத அளவிலான #ஆளுமையான இளைஞர் பெருமக்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள்...
அவர்கள் #ஆர்வக்கோளாறாக இல்லாது அமைதியாக இங்கு நடக்கும் எல்லாவற்றையும் #அவதானித்து நிதானமாக கடந்து போகிறார்கள்...
#நேரம் #காலம் வரும் என்று காத்திருக்கிறார்கள்...
அப்படி ஒரு #காத்திருப்பை #கலைத்து ஆரோக்கியமான அரசியலை #மசிக வில் உணர்ந்து, தோளோடு தோள் நிற்க முழு மனதோடு தடம் பதிக்கும் உன்னதமான பண்பாளர் #எங்கள் #கட்சியின் #பிரதான #ஊடகச் #செயலாளராக பதவியேற்கும் தோழர் #ராமன் #சுந்தரலிங்கம் அவர்களை பேரன்போடு வாழ்த்துவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்...
பட்டித் தொட்டியெங்கும் நம் அமைப்பின் #கொள்கை #கோட்பாட்டை கொண்டு சேர்க்கும் உங்கள் அறிவார்ந்த அரசியலை காண ஆவலாக இருக்கிறோம்....

வாழ்த்துக்கள்

உண்மைதான் இந்த மலையகத்தில்  #தனித்துவமான  #புரட்சிகர அரசியலை செய்வதென்பது  #இயலாத  #காரியம்தான்...76 வருட சம்பிரதாய அரசி...
11/08/2026

உண்மைதான் இந்த மலையகத்தில் #தனித்துவமான #புரட்சிகர அரசியலை செய்வதென்பது #இயலாத #காரியம்தான்...
76 வருட சம்பிரதாய அரசியலையே எப்படி திருப்பிபோட்டு பிசைந்தாலும் அதே ரொட்டிதான் வரும்...
அதை ஆழமாக உணர்ந்தே #கட்சி #தொடங்குவதற்கு #முன்பே
#மசிக #அரசியல் #பாசறை தொடங்கப்பட்டு விட்டது...
ஆரம்பம் முதலே ஆர்வத்தோடும் நிதானத்தோடும் பின்தொடர்ந்த ஒரு இளைஞன்...தேடலும் ,கிரகித்துக் கொள்ளும் தன்மையும் ,ஒழுக்கமும் #நிறைந்த #பண்பாளன்,
இவ்வாறான ஒருவருக்கே #மக்கள் #பணத்தை #கையாளும் #தகுதியிருப்பதாய் உணர்கிறோம்...
அரசியல் #ஞானத்திற்கும், #சாணக்கியத்தனம் முன்பு #ஒழுக்கம்தான் மலையக சிறுத்தைகளின் எழுதாத சட்டம்,அந்த ஒழுக்கமே உருவான ஓர் இளைஞனை இந்த பதவியில் பார்க்க கட்சி பெருமை கொள்கிறது....
வாழ்த்துக்கள் தம்பி...
நிச்சயம் பெரும் வெற்றியுண்டு பொறுமையாக முன்நகர்வீராக.....

#ரிமல்

அரசியலில்  #தூய்மையானவர்களையும்,  #உண்மையானவர்களையும் கண்டு கொள்வது இயலாது என்பார்கள் ஆனால் மலையக சிறுத்தைகள் கட்சியில் ...
11/08/2026

அரசியலில் #தூய்மையானவர்களையும், #உண்மையானவர்களையும் கண்டு கொள்வது இயலாது என்பார்கள் ஆனால் மலையக சிறுத்தைகள் கட்சியில் அது #பொய்த்து #போனது என்றே சொல்ல முடியும் ,கட்சிக்காக எந்த வித தியாகத்தையும் செய்யவல்ல #மகத்துவமானவர்கள் எம்மோடு இருக்கிறார்கள்.
#தோழர் #சுரேஸ் #எந்தவித #தன்னலமும் இல்லாது எடுத்த நோக்கத்திற்காக #மலையக #மாற்றத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராகவுள்ள தூய உள்ளங் கொண்டவர், உப தலைவர் பதவி கூட கட்சியின் அனைத்து உறுப்பினர் வேண்டுகோளுக்கிணங்கவே பரிந்துரைக்கப்பட்டது.
மலையக சிறுத்தைகள் #கட்சியில் உங்களுக்கென்று #தனியான #இடமும் #மரியாதையும் எப்போதும் இருக்கும் தோழரே...
வாழ்த்துக்கள் ....

கட்சியின் இன்னுமொரு  #இரும்புக்கரம்..... #விஜய் மலையக சிறுத்தைகளின்  #இளையத்தளபதி....உண்மைக்கும் ஒரு வாட்டி முடிவு பன்னி...
11/08/2026

கட்சியின் இன்னுமொரு #
இரும்புக்கரம்.....
#விஜய் மலையக சிறுத்தைகளின் #இளையத்தளபதி....
உண்மைக்கும் ஒரு வாட்டி முடிவு பன்னிட்டா போய்ட்டே இருக்கும் ஆளுமை உடையவர்.
#தலவாக்கலையில் #தனக்கென தனி #சாம்ராஜ்யமே கொண்டு அரசியல் இருக்கிறதோ இல்லையோ தன்னாலான எல்லாவற்றையும் ஊருக்கும் இளைஞர்களுக்கும் இயலுமான வரையில் கொடுத்து உதவுவதும் ,நூற்றுக்கணக்கில் இளைஞர்கள் தன்னோடு இருந்தும் அவர்களை பகடைக்காயாக பயன்படுத்தாது நேர்மையான வழியில் வழிநடத்தும் #மிகச்சிறந்த #தலைமை #பண்புடைய தோழர்...
விஜய் தமிழகத்தில் இந்த பெயருக்கு எத்தனை ஜனரஞ்சகம் இருக்கிறதோ அதே போன்று மலையகத்தில் உங்களுக்கும் தனிப்படை உருவாகும் ...
#வாழ்த்துக்கள் #உபதலைவர் #விஜய்

11/08/2026

Address

No 14c, Dewala Street, Badulla
Badulla

Website

Alerts

Be the first to know and let us send you an email when மலையக சிறுத்தைகள் கட்சி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share