04/07/2025
இணையம் வழியாக சமூக வலைத்தளங்கள் அனைத்து வகை மக்களின் வாழ்வில் ஒரு அங்கமாக மாறிவிட்டன.இத்தகைய சமூக வலைத்தளங்களினால் பல நன்மைகள் இருந்தாலும் தற்சமயம் பல குற்றங்களும் பெருகி வருகின்றன என்பதை மறுக்க இயலாது.பல்வேறு இணையங்களும்,சமூக வலைத்தளங்களும் மக்களின் முன்னேற்றத்திற்காக வடிவமைக்கப்பட்டவையாக அமைந்துள்ளன.
சமுக வலைத்தளங்களைப் பயன்படுத்துபவர்கள் அதில் உள்ள நன்மை தீமைகளை அறிந்து அளவோடும், பாதுகாப்போடும் பயன்படுத்தினால் இதுபோன்ற குற்றங்களைக் குறைக்க இயலும்.குறிப்பாக பெண்கள் புத்திசாலித்தனமாகவும்,சற்று விழிப்போடும் பயன்படுத்துவது நன்மை பயக்கும்.
அந்த வகையில் கண்டி மாவட்டத்தின் பல பாடசாலைகளில் இது தொடர்பான விழிப்புணர்வினை இலங்கையின் பல பகுதிகளிலும் பல்வேறுபட்ட வேலைத்திட்டங்களை சிறந்த முறையில் முன்னெடுத்து வரும் ROOM TO READ நிறுவனத்தினர் முன்னெடுத்து வருகின்றனர்.
இதன் முதல்கட்டமாக புஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரி
(தேசிய பாடசாலை) மாணவர்களிடையே சமூக வலைத்தளங்களின் பாதிப்புக்கள் மற்றும் சமூக வலைத்தளங்களை எவ்வாறு கல்வி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தலாம் என்பது தொடர்பாக வீதி நாடகத்தினூடாக விழிப்புணர்வினை ஏற்படுத்திய தருணம்.
Effects of Social Media
impact of Social Media
Advantages and Disadvantages
#வீதிநாடகம் #விவாதஅரங்கம்
/Pussellawa Saraswathi Central College
@புஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரி
(தேசிய பாடசாலை)
𝑻𝒉𝒂𝒏𝒌𝒔 𝑻𝒐 𝑴𝒚 𝑳𝒐𝒗𝒆𝒂𝒃𝒍𝒆 𝑩𝒐𝒚𝒔 & 𝑮𝒊𝒓𝒍𝒔 &
𝑯𝒆𝒂𝒓𝒕𝒇𝒆𝒍𝒕 𝑻𝒉𝒂𝒏𝒌𝒔 𝑻𝒐 𝑨𝒍𝒍 𝑻𝒉𝒆 𝑮𝒐𝒐𝒅 𝑺𝒐𝒖𝒍𝒔 𝑾𝒉𝒐 𝑮𝒂𝒗𝒆 𝑻𝒉𝒆 𝑶𝒑𝒑𝒐𝒓𝒕𝒖𝒏𝒊𝒕𝒚 𝑻𝒐 𝑾𝒐𝒓𝒌 𝑶𝒏 𝑻𝒉𝒊𝒔 𝑷𝒓𝒐𝒋𝒆𝒄𝒕 𝑨𝒏𝒅 𝑯𝒆𝒍𝒑𝒆𝒅 𝑰𝒏 𝑴𝒂𝒏𝒚 𝑾𝒂𝒚𝒔 ❤︎🙏❤︎