12/07/2024
பட்டியடிப்பிட்டியின் மையவாடியினை சிரமதான மூலம்
துப்புரவு செய்வதற்கு Academy for Youth Affairs (பட்டியடிபிட்டி) இளைஞர்கள் படையணி களமிறங்கிருப்பது கோடி சந்தோஷங்களை கொடுக்கிறது அல்ஹம்துலில்லாஹ்.
மையவாடியினை சுத்தம் செய்ய வேண்டும் என்று ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய வருகின்ற ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் அந்த உணர்வுகள் முளைத்திருப்பது எல்லோருடைய உணர்ச்சிபூர்வமான பேச்சுக்களிலும் தெரிய முடிகிறது.
இதற்கெல்லாம் நல்லதொரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தந்திருக்கின்ற இந்த இளைஞர் படைபணியின் சிரமதான செயற்திட்டத்தில் எல்லோரும் ஒன்று சேர்ந்து கரம் கொடுத்து உதவுவோம்.
முடியுமானவரைக்கும் ஓர் இரு மணித்தியாலங்களேனும் நமது கப்றுக்காக மண் வெட்டிகளோடு வருகை தந்து சுத்தம் செய்வதில் பங்கெடுத்துக் கொள்வோம்.
* அக்கரைப்பற்று பிரதேச சபை,
* பட்டியடிப்பிட்டி ஜும்மா பள்ளிவாசல்,
* பள்ளி குடியிருப்பு ஜும்மா பள்ளிவாசல்,
* அக்கரைப்பற்று ஜும்மா பெரிய பள்ளிவாசல்,
* அக்கரைப்பற்று புதுப்பள்ளிவாசல்,
* அனைத்து இளைஞர் விளையாட்டுக் கழகங்கள்.
* அக்கரைப்பற்றின் அதி விசேட நிறுவனங்களான (Akp Janasa Team, Walkers Union) போன்ற
எல்லாம் நிறுவனங்களும் இணைந்து பங்கெடுத்துக் கொள்ளும்படியும்,
சனிக்கிழமை ஓய்வில் இருக்கின்ற ஒவ்வொரு கௌரவமான பிரஜைகளும் இணைந்து கொள்ளும்படியும் தாழ்மையோடு நினைவூட்டி வைக்கின்றோம்.
இன்ஷா அல்லாஹ்
நாளை சனிக்கிழமை அதிகாலை 5:45 ற்கு
மண் வெட்டிகளோடு மையவாடியில் சந்தித்துக் கொள்வோம்.