07/09/2026
அரசாங்கத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான சிறு போக நெல் கொள்வனவு வேலைத்திட்டம் சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலைகளின் ஊடாக நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் அட்டாளைச்சேனை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட தீகவாபி அரிசி ஆலையில் இன்று (2026.09. 07) இவ்வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம். ஜெளபர், விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரிவிற்கு பொறுப்பான பிரஜா சக்தி தவிசாளர் மற்றும் சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர், அரிசி ஆலை உரிமையாளர் மற்றும் விவசாயிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.