விழுப்புரம் மாவட்ட பாமக

விழுப்புரம் மாவட்ட பாமக பாட்டாளி மக்கள் கட்சி, விழுப்புரம்

சிறுவனுக்கு ஸ்டெத் வைத்து பரிசோதனை செய்தார் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள். தெளிவாக வந்த காணொளியை கட் செய்து பொய் ...
09/12/2024

சிறுவனுக்கு ஸ்டெத் வைத்து பரிசோதனை செய்தார் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள். தெளிவாக வந்த காணொளியை கட் செய்து பொய் பரப்பும் திமுக கும்பலுக்கு ஊடகங்கள் ஆதரவு தருவது வெட்கக் கேடான விசயம்.



சிறுவனுக்கு ஸ்டெத் வைத்து பரிசோதனை செய்தார் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள். தெளிவாக வந்த காணொளியை கட் ச....

பசுமைத் தாயகம் சார்பாக வெட்டப்பட்ட மரங்களுக்கு இறுதி அஞ்சலி சாலை விரிவாக்கம் மரங்களை மாற்று நடவு செய்ய கோரிக்கை..!செப் -...
24/09/2024

பசுமைத் தாயகம் சார்பாக வெட்டப்பட்ட மரங்களுக்கு இறுதி அஞ்சலி சாலை விரிவாக்கம் மரங்களை மாற்று நடவு செய்ய கோரிக்கை..!

செப் - 24 விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி அரகண்டநல்லூர் அரசு தொழில் பயிற்சி கல்லூரி அருகிலுள்ள 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரம் உள்ளிட்ட பல மரங்கள் சாலை விரிவாக்க பணிகளுக்காக வெட்டப்படுவதைக் கண்டித்து பசுமை தாயகம் சார்பில் வெட்டப்பட்ட மரங்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியும் மற்றும் பழமை வாய்ந்த ஆலமரத்தை வேறு இடத்தில் மறு நடவு செய்ய கோரியும் ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டது.

விழுப்புரம் மத்திய மாவட்ட பா.ம.க செயலாளர் திரு.பாலசக்தி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பசுமைத் தாயகம் மாநில துணைச் செயலாளர்கள் திரு.ஐ.நா.கண்ணன் திரு.கே.பொன்மலை, மற்றும் மாவட்ட நிர்வாகிகள் திரு.மணிகண்டன், திரு.குமரகுருபரன் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

| |

சமூக நீதி போரில் இன மானம் காக்க இன்னுயீர் நீத்த இட ஒதுக்கீடு தியாகிகளுக்கு கனத்த இதயத்துடன் வீரவணக்கம் செலுத்திய மக்கள் ...
17/09/2024

சமூக நீதி போரில் இன மானம் காக்க இன்னுயீர் நீத்த இட ஒதுக்கீடு தியாகிகளுக்கு கனத்த இதயத்துடன் வீரவணக்கம் செலுத்திய மக்கள் காவலர் மருத்துவர் அய்யா மற்றும் இளம்போராளி மருத்துவர் சின்ன அய்யா அன்புமணி ராமதாஸ் அவர்கள்.!




09/09/2024
மருத்துவ மாணவர் சேர்க்கை: தனியார் கல்லூரிகளில்  நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை தமிழக மாணவர்களுக்கே ஒதுக்க வேண்டும்! பா.ம.க....
05/09/2024

மருத்துவ மாணவர் சேர்க்கை: தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை தமிழக மாணவர்களுக்கே ஒதுக்க வேண்டும்!

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் அறிக்கை!

விடுதலைப் போராட்ட வீரர் வ.உ. சிதம்பரனாரின் 153-ஆம் பிறந்த நாளில் அவரது தீரத்தையும்,தியாகத்தையும்  நினைவு கூர்ந்து போற்று...
05/09/2024

விடுதலைப் போராட்ட வீரர் வ.உ. சிதம்பரனாரின்
153-ஆம் பிறந்த நாளில் அவரது தீரத்தையும்,
தியாகத்தையும் நினைவு கூர்ந்து போற்றுவோம்!

மருத்துவர் இராம்தாஸ் அய்யா !

இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழ்நாட்டின் அடையாளமாகத் திகழும் செக்கிழுத்தச் செம்மல் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் 153-ஆம் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், இந்த நாளை, நாட்டின் விடுதலைக்காக அவர் பட்ட பாடுகளையும், நடத்திய போராட்டங்களையும், அனுபவித்த கொடுமைகளும் நினைத்துப் பார்த்து நாட்டிற்காக நாமும் உழைக்க வேண்டும் என்று உறுதியேற்க பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

வணிகம் செய்வதாகக் கூறி இந்தியாவுக்குள் வந்த வெள்ளையர்களை, வணிகம் மூலமாகவே வீழ்த்தி நாட்டை விட்டு விரட்ட வேண்டும் என்று போராடியவர் வ.உ.சி அவர்கள். ஆங்கிலேயர்களுக்கு எதிராக அவர் தொடங்கிய சுதேசி கப்பல் நிறுவனத்தின் வெற்றியும், அவரது ஆதரவுடன் நடைபெற்ற தூத்துக்குடி நூற்பாலை வேலைநிறுத்தப் போராட்டத்தின் வெற்றியும் ஆங்கிலேயர்களை நடுங்க வைத்தது. அதனால் வ.உ.சி கடுமையான அடக்குமுறைகளுக்கும் கொடுமைக்கும் ஆளானார்.

சிறையில் அவருக்கு சணல் பிரிக்கும் எந்திரத்தை சுழற்றும் பணி முதலில் வழங்கப்பட்டிருக்கிறது. அந்தப் பணியின் போது, அவரது கைத்தோல் உரிந்து ரத்தம் வடிந்திருக்கிறது. எதற்கும் கலங்காதவரான வ.உ.சி அந்த தண்டனை மற்றும் அதனால் ஏற்பட்ட உடல்நல பாதிப்புகளை எண்ணி கண்ணீர் வடித்தார். சணல் பிரிக்கும் எந்திரத்தை சுழற்ற அவரது உடல்நிலை இடம் தராத நிலையில் தான் அவருக்கு மாற்று தண்டனையாக செக்கு இழுக்கும் பணி வழங்கப்பட்டுள்ளது. சிறையில் மாடுகளை விட மோசமாக கொடுமைப்படுத்தப்பட்டவர் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம் பிள்ளை ஆவார்.

வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் போராட்டங்களும், தியாகங்களும் போற்றத்தக்கவை. அவற்றை இந்த நாளில் நினைவு கூர்ந்து வ.உ.சி அவர்களுக்கு மரியாதை செலுத்துவோம்!


உழைப்புச் சுரண்டலால் கொட்டும் லாபம்: என்.எல்.சி ஒப்பந்தத் தொழிலாளர்களை உடனே பணிநிலைப்பு செய்ய வேண்டும்! பா.ம.க. நிறுவனர்...
02/09/2024

உழைப்புச் சுரண்டலால் கொட்டும் லாபம்: என்.எல்.சி ஒப்பந்தத் தொழிலாளர்களை உடனே பணிநிலைப்பு செய்ய வேண்டும்!

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களின் அறிக்கை!

| | | |
|

தொடர்ந்து சரியும் நெல் கொள்முதல் அளவு: கொள்முதல் விலையை உயர்த்துவது உள்ளிட்ட சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்! பா....
02/09/2024

தொடர்ந்து சரியும் நெல் கொள்முதல் அளவு: கொள்முதல் விலையை உயர்த்துவது உள்ளிட்ட சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் MP அவர்களின் அறிக்கை!

| | |

Address

Villupuram

Alerts

Be the first to know and let us send you an email when விழுப்புரம் மாவட்ட பாமக posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share