வேலூர் மாவட்டம்!!!
19 ஆம் நூற்றாண்டில் பிரித்தானியரால்
உருவாக்கப்பட்ட வட ஆற்காடு மாவட்டத்தின்
ஒருபகுதியாகவே இது இருந்தது. 1989 இல்
அந்த மாவட்டம் திருவண்ணாமலை சம்புவரையர்
மாவட்டம் (இன்றைய திருவண்ணாமலை), வட
ஆற்காடு அம்பேத்கர் மாவட்டம் ஆகிய
பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. வட
ஆற்காடு அம்பேத்கர் மாவட்டம் 1996 இல்
வேலூர் மாவட்டம் எனப் பெயரிடப்பட்டது.
வேலூர் மாவட்டத்தில் அதிகமாக
நடைபெறுவது தோல் தொழில்கள்தான
்
ஆம்பூரிலும், ராணிபேட்டையிலும்,
வாணியம்பாடியிலும் அதிகளவு தோல்
தொழிற்சாலைகள் காணப்படுகின்றன.வேலூர்
மாவட்டத்திலுள்ள ஆம்பூர் பிரியாணி மிக
சிறப்பு பெற்றது.
வேலூர்:
வேலூருக்கு கோட்டையும், சிறைச்சாலையும்
அடையாளங்கள். சுற்றுபுறக் கிராமங்களுக்கான
சந்தை நகரம். கோட்டைக்குள் இருக்கும் கோயில்
பிரசித்திப்பெற்றது. இங்கு மாவீரன்
திப்பு சுல்தானை கி.பி. 1799 இல் தோற்கடித்த
போரில் உயிரிழந்த ஆங்கிலேய
தளபதி ஒருவரின் கல்லறை உள்ளது.
இந்நினைவிடம் வேலூர் கலகத்திற்கும்
சாட்சியாக இருக்கிறது. இங்கு பாலாறும்
பொன்னையாறும் ஓடுகின்றன . வேலூர்
மாவட்டத்தின் வெயில் ஊருக்கெல்லாம் தெரிந்த
செய்தி.
வேலூர் கோட்டை:
பழமையின் சான்றாக கம்பீரமாக
இருக்கிறது வேலூர் கோட்டை. இந்தியாவின்
முதல் சுதந்திரப் போர் வெடித்த முக்கிய இடம்
இது. வேலூர் என்றதும் சட்டென மனத்தில்
நிழலாடும் கற்கோட்டை இது. கோட்டைச்
சுவர்கள் உட்பொருந்தும் செங்கோணக் கற்களில்
கட்டப்பட்டுள்ளது. இக்கட்டடக் கலை நுட்பம்
ஆங்கிலேயர்களின் பொறியியல்
பாணியை நினைவூட்டுகின்றன.
கோட்டையின் பிரதான சுவர் கருங்கற்களால்
ஆனது. சுவரில் சாந்துப்பூச்சு இல்லை.
கோட்டைச் சவரில் நடப்பதற்கான நடைபாதைகள்
அமைக்கப்பட்டுள்ளன. இக்கோட்டையின்
பழையவாசல் பல கதவுகளுடன் சாலை வழியும்
அதைத் தற்காக்கும் இழுவைப் பாலமும்
கொண்டுள்ளது.கோட்டையைச் சுற்றி அகழியும்
அதற்குச் செல்லும் கீழ் வழிகளும் கூட உள்ளன.
இந்த நுட்பமபன வசதிகளை வைத்துப் பார்த்தால்
வேலூர் கோட்டை எந்த அளவு ராணுவ
முக்கியத்துவமானது என்பதை அறியலாம்.
கோட்டையைச் சூழ்ந்துள்ள அகழியின் நீளம்
8000 அடியும் ஆழம் 190
அடியிலிருந்து முறையே 20
அடி வரையிலும் உள்ளது.
தற்போது இங்கு படகுக் குழாம்
அமைக்கப்பட்டுள்ளது
ஜலகண்டேஸ்வரர் ஆலயம்-வேலூர் கோட்டை:
வேலூர் கோட்டையில் உள்ள புகழ்பெற்ற
கோயில். இங்கு மூலவர் ஜலகண்டேஸ்வரர்.
மூலவரைச் சுற்றி ஒரு சுற்றுப் பாதையும்
மகா மண்டபமும் வடக்கு முகம் நோக்கிய
நடராசர் சிலையும் மற்றும் பல உப
தெய்வங்களும் உள்ளன. விஜயநகர கட்டடக்
கலையின் அற்புதமாக விளங்கும்
இக்கோயிலின் வெளிப்பிரகாரத்தின் தெற்கில்
அமைந்துள்ள கல்யாண மண்டபம் பிற்கால
விஜயநகர கட்டடக் கலையின் ரத்தினமாக
விளங்குகிறது. இத் திருத்தலத்தில்
சிற்பங்பளும் கலை எழில்மிக்க தூண்களும்
சிறப்பு சேர்க்கின்றன