Thopputhurai Rider’s Blood Organization

Thopputhurai Rider’s Blood Organization உதிரம் கொடுப்போம்..
உயிர்களைக் காப்ப?

15/05/2020

இரத்த தானம் செய்வோம்! இன்னுயிர் காப்போம்!

மனிதனுக்கு உயிர் இரத்தம் தான். ஓர் ஆரோக்கியமான மனிதனின் உடலில் 5 முதல் 6 லிட்டர் இரத்தம் உள்ளது. இரத்த தானம் செய்பவர்கள் ஒரே நேரத்தில் 200,300 மி.லி இரத்தம் வரை கொடுக்கலாம். அவ்வாறு நாம் கொடுக்கும் இரத்தம் இரண்டு வாரங்களில் நாம் உண்ணும் சாதாரண உணவிலேயே உற்பத்தியாகிவிடும். நாம் தானமாக கொடுக்கிற இரத்தம், அறுவை சிகிச்சையின் போதும், விபத்தின் போதும் அல்லது ஏதாவது ஒரு வழியில் ஒருவருக்கு இரத்த இழப்பு ஏற்பட்டால், அதனை ஈடு செய்வதற்கு நாம் தானமாக கொடுக்கிற இரத்தம் பயன்படுகிறது. சிலர் தன்னார்வத்துடன் இரத்த தானம் செய்ய முன் வருகினறனர். வேறு சிலர் சமூக சேவை அமைப்புகளின் வழிகாட்டுதலின் பேரில் இரத்த தானம் செய்து வருகின்றனர். நம்மால் இயன்ற வரை இரத்த தானம் செய்வோம். இரத்த குறைபாடால், ஏற்படும் உயிரிழப்பை தவிர்ப்போம்.

உதிரம் கொடுப்போம்..
உயிர்களைக் காப்போம்..! 🩸

நம் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக..!*தோப்புத்துறை ரைடர்ஸ் நண்பர்களின் இரத்த ...
01/05/2020

நம் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக..!

*தோப்புத்துறை ரைடர்ஸ் நண்பர்களின் இரத்த கொடையாளர்கள் விவரங்களை சேகரிக்கும் முயற்சி..🩸*

இந்தப் படிவம் தன்னார்வ இரத்த கொடையாளர்களின் விவரங்களை சேகரிக்கும் முயற்சியாகும்.இது நமக்கு நாமே உதவிக்கொள்ளும் பொருட்டு ஏற்படுத்தப்பட்ட சிறு இணைப்பு முயற்சி.இரத்தம் அவசரத் தேவையெனில் கீழ்க்கண்ட நபர்களை அணுகினால் அவர்கள் தங்களிடம் இருக்கும் விவரங்களின் மூலம் தேவையான இரத்த வகை உள்ளவரை அணுகி இரத்தம் கிடைக்க ஏற்பாடு செய்வார்கள்.இதன் மூலம் இரத்த கொடையாளர்கள் இரத்தம் தேவையாளர்களுக்கு உதவ ஏதுவாக இருக்கும். இரத்த தானம் செய்ய விருப்பம் உள்ள கொடையாளர்கள் தங்களது விவரங்களை இந்த இணைப்பில் பதிவு செய்யவும்.

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSflea7Fmfg1ABgbtVSFyNZYMHs1_XV7u7HyJjr3zESNWrdGmQ/viewform?usp=pp_url

இரத்தம் தேவையெனில் அணுக வேண்டிய தொடர்பு எண்கள்:
9677062773
9500626736
7558187593

உதிரம் கொடுப்போம்..
உயிர்களைக் காப்போம்..! 🩸

This form is to collect voluntary blood donors details. Interested candidate can fill the form and incase of urgent needs, we will contact you for blood donation

Address

Vedaranyam
614809

Alerts

Be the first to know and let us send you an email when Thopputhurai Rider’s Blood Organization posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Thopputhurai Rider’s Blood Organization:

Share

Category