06/09/2020
இன்று 6.9.2020 கல்வி தந்தை அமரர் .P.K. மூக்கை யாத்தேவர் 41. வது நினைவு தினம் நாள்
தமிழக அரசியல் வரலாற்றில் அய்யா மூக்கையாத்தேவர் ஓர் அதிசயம். ஆம் நண்பர்களே!
1952 முதல் பொதுத் தேர்தலில் இருந்து 1979 இறக்கும் வரை தமிழக சட்டமன்றத்
தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியே அறியாமல் வெற்றி பெற்ற பெருமகனார்
அய்யா மூக்கையாத் தேவர்.
காமராசர், அண்ணா, கலைஞர், எம்ஜிஆர், செயலலிதா உட்பட யாரும் படைக்க
முடியாத வரலாற்றுச் சாதனையைச் செய்தவர் அய்யா மூக்கையாத் தேவர்.
ஆம் நண்பர்களே!
ஒரே தொகுதியில் போட்டியிட்டு அனைத்து தேர்தல்களிலும் வென்ற பெருமை
மூக்கையாத்தேவருக்கு மட்டுமே உண்டு. விதிவிலக்கு அய்யா பசும்பொன் தேவர்
திருமகனார் அவர்கள் மட்டுமே! பசும்பொன் தேவர் திருமகனார் அவர்களும் 1952
, 57,62 தேர்தல்களில் முதுகுளத்தூர் தொகுதியில் நின்று வெற்றி
பெறுகிறார். அவரது சீடரோ1952 முதல் 1979 வரை எவரும் அடைய முடியாத
வெற்றிகளை ஈட்டுகிறார். அய்யா பி.கே.எம் அவர்களின் அரசியல் வெற்றிகளின்
பட்டியலைப் பாருங்கள்.'
1952 பெரியகுளம் சட்டமன்ற தொகுதி(அப்போது உசிலம்பட்டி தனித் தொகுதி கிடையாது).
1952- பெரியகுளம்
மூக்கையாத்தேவர் - 36,515
என்.ஆர். தியாகராஜன் - 31, 188
1957- உசிலம்பட்டி
மூக்கையாத் தேவர் - 31,631
பி.வி.ராஜ் - 11, 459
1962- உசிலம்பட்டி
மூக்கையாத்தேவர் - 47,069
தினகரசாமித்தேவர் - 22,992
1967- உசிலம்பட்டி
மூக்கையாத்தேவர் - 44,714
நல்லதம்பித்தேவர் - 16 ,225
1971 - உசிலம்பட்டி
மூக்கையாத்தேவர் - 42 , 292
ஆண்டித்தேவர் - 16, 909
1977- உசிலம்பட்டி
மூக்கையாத்தேவர் - 35,361
பொன்னையா - 1 1,422
இவை தவிர 1971ல் இராமநாதபுர நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி
பெறுகிறார்.
1971 - இராமநாதபுரம் - எம்.பி. தேர்தல்
மூக்கையாத்தேவர் - 2, 08,431
பாலகிருஷ்ணன் - 1 , 39, 276
மூக்கையாத் தேவர் பெற்ற வாக்குகளையும் , வாக்கு வித்தியாசத்தையும்
பாருங்கள். தமிழ்நாட்டில் மிக அதிக வாக்குகள் பெற்று தொடர்ச்சியாக வென்ற
பெருமை அய்யா மூக்கை யாத்தேவருக்கு மட்டுமே உண்டு.
1967 ல் அண்ணா முதல்வராகப் பதவியேற்ற போது பதவிப் பிரமாணம் செய்து
வைத்தவர் அய்யா மூக்கையாத்தேவர் அவர்களே.
அதனால் தான் 1977 தமிழக சட்டமன்றத் தேர்தலில் உசிலம்பட்டி தொகுதியில்
அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளரை திரு.எம் ஜி ஆர் அவர்கள் வாபஸ்
பெறச் செய்தார். இத்தனைக்கும் வேட்பு மனுத்தாக்கல் செய்த பிறகு வாபஸ்
பெறச் செய்தார். அதற்கு எம் ஜி ஆர் கூறிய காரணம் முக்கியமானதாகும். "
நீண்ட காலம் பொது வாழ்க்கையில் இருக்கும் பெருந்தலைவரான அய்யா
மூக்கையாத்தேவர் அவர்கள் அண்ணாவிற்கே பதவி பிரமாணம் செய்து வைத்தவர்.
அப்பேர்பட்ட பெருந்தலைவரை எதிர்த்து என் கட்சி போட்டியிட விருப்பமில்லை"
என்று வாபஸ் பெற வைத்தார். வைகை வடகரையில் கோரிப்பாளையத்தில் தெய்வீகத்திருமகன் ஐயா பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர் அவர்களுக்கு வான் உயரச்சிலை வைக்கப்பட்டது அன்றைய தினம் மாநகர் தலைவர் அமரர் ஐயா செல்லூர் மா.பரமத் தேவர் அவர்களும்
தலைவர்கள் போற்றும் பெருந்தலைவர் மூக்கையாத் தேவர் இறுதிக் காலம் வரை
மதுரையில் வாடகை வீட்டில் தான் வசித்து வந்தார். சாகும் போது 600 00 கடன்
சுமையோடுதான் இறந்தார். எளிமையின் மறு உருவம் அய்யா மூக்கையாத்தேவர்.
அவரை அடையாளப்படுத்த நாம் தவறிவிட்டோம். இறுதி வரை தேவர் பெருமகனாரின்
திருத்தொண்டராகவே வாழ்ந்த அரசியல் அதிசயம் அய்யா மூக்கையாத்தேவர்.
அய்யாவின் கொள்கைகளை என்றும் நெஞ்சில் ஏந்துவோம்.