13/09/2026
🌷 #ஓம்சரவணபவ 🌷 #மயில்விருத்தம் 10
#நிராசத விராசத வரோதய பராபர
னிராகுல னிராமய பிரா
னிலாதெழு தலாலற மிலானெறி யிலானெறி
நிலாவிய உலாசஇ தயன்
#குராமலி விராவுமிழ் பராரை யமராநிழல்
குராநிழல் பராவு தணிகைக்
குலாசல சராசரம் எலாமினி துலாவிய
குலாவிய கலாப மயிலாம்
#புராரிகும ராகுரு பராஎனும் வரோதய
புராதன முராரி மருகன்
புலோமசை சலாமிடு பலாசன வலாரிபுக
லாகும் அயி லாயுதனெடுந்
#தராதல கிராதர்கள் குலாதவபி ராமவல
சாதனன் விநோத சமரன்
தடாரி விகடாசுரன் குடாரித படாதிகழ்
ஷடாநநன் நடாவு மயிலே.
🌷 #மகான்_அருணகிரிநாதர்
🌷 #கவிவிளக்கம்
🌷 முன்னுரை : " #நிராஜத" என்று தொடங்கும் மயில் விருத்தம். #எம்பெருமான் #முருகனின் உன்னதமான கல்யாண குணங்களை அர்ச்சனைப் பூக்கள் போல் ஒவ்வொன்றாய் எடுத்துச் சொல்லி அவன் பாதங்களை நெஞ்சில் பதிக்கும் பாடல். எப்படி தெய்விக குணங்களை நோக்கி நம் வாழ்வும் நகர வேண்டுமெனக் காட்டத்தான் மயிலேறி வந்து, குன்றேறிக் கோயில கொண்டிருக்கிறானோ குமரன்? அவன் மந்திர மயில் எடுத்து வைக்கும் அழகிய நடையும், அந்த வனப்பான வாழ்வுக்குத்தான் இலக்கணம் வகுக்குகிறதோ! பக்தியில் உருகும் #அருணகிரியின் பாகு தமிழ் வளத்தில் மயங்குகிறோம். #முருகன் முழுவதுமாய் ஆட்கொள்கிறான். வேலோடும், மயிலோடும் இதய மேடையில் காட்சி தருகிறான்.
🌷நிராஜத விராஜத வரோதய பராபரன்
நிராகுல நிராமயன்
விளக்கம் : குணங்கள் அனைத்தும் கடந்த அரும்பொருளே முருகா. ஆனாலும் லோகம் முழுவதும் எந்த குணத்தைக் கை கொள்ளக் கூடாது, எந்த குணத்தை கை கொள்ள வேண்டும் என்பதில் ஒரு தெளிவைத் தருகிறான். அவற்றையே தன் உன்னத குணங்களாக காட்டுகிறான். ரஜத குணமே அற்றவன். ஏனென்றால் அந்த ரஜதகுணம் மெதுவே, மெதுவே, ஆணவத்திலும், அசுர சக்திக்கும் வழி வகுத்து விடும். தவமிருந்து தான் ஆரம்பிப்பார்கள் அசுரர்கள். வரமெல்லாம் கைக்கு வந்தவுடன் அட்டகாசங்கள் ஆரம்பிக்கும். ரஜத்துக்கு எதிரான சாத்வீக குணம் கொண்டவன் எம்பெருமான். ஏனென்றால் அந்த சாத்வீகம், தெய்வப் பண்புகளின் பக்கம் கொண்டு சேர்க்கும். வரங்களை வாரி வழங்குபவன். அந்தக் கருணைக்கு எல்லை வகுத்துக் கொள்வதில்லை, ஏனெனில் அவன் பரமேஸ்வரன். ஆகுலம் என்னும் மனக்கிலேசமும் மனக்கவலையும் அற்றவன். அவன் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு மகிழ்ச்சியாய் இருக்கச் சொல்கிறான். எந்த நோயும் அணுக முடியாப் பரிசுத்தன். அப்படித்தான் மானுடரும், நோய் நெருங்க முடியா உடலும் உள்ளமும் கொண்டிருக்க வேண்டும் என்கிறான். தலைவா, உன் வழிகாட்டல் புரிகிறது.
🌷நிலாது எழுதலால் அறமிலான் நெறியிலான் நெறி
நிலாவிய உலாச இதயன்
விளக்கம் : நெறியில்லாத, அறவழி நடக்காத கீழோர் இவனை அணுகும் தூரத்தில் இல்லை. அதனால் ஆனந்தமயமாய் இருக்கிறான். உலகத்தோரும், தீயதை விலக்கிக் கொண்டே வந்தால், இதயம் சமன்பட்டு இன்பம் துளிர்க்கும் என்கிறான்.
🌷குராமலி விராவு உமிழ் பராரை அமரா நிழல்
குரா நிழல் பராவு தணிகை
விளக்கம் : செழித்து அடர்ந்து வேர்பிடித்த குரா மரங்களின் கூட்டம் இருக்கும் திருத்தலங்களில் இவன் சானித்தியம் கொண்டிருக்கிறான். இவன் இருக்கும் #திருவலஞ்சுழி போன்ற பக்தி ஸ்தலங்கள் ஓர் உதாரணம். குரா மர நிழல் பரவி நின்று இதம் தரும் ஒளிமயமான #தணிகை மலையை இருப்பிடம் கொண்டான்.
🌷குலாசலம் சராசரம் எலாம் இனிது உலாவிய
குலாவிய கலாப மயிலாம்
விளக்கம் : அந்தத் தணிகை மலைக்கு இணையான சிறந்த குன்றுகள் தோறும் குமரன் கோயில் கொண்டிருப்பதால் அவன் மயிலுக்கு ஒரே கொண்டாட்டம். அங்கெல்லாம் அது அழகு நடை பயின்று, ஆனந்த நடனம் புரியும். இன்ப உலா. குமரனுடன் கொஞ்சி நிற்கும் மயிலே சரணம்.
🌷புராரி குமரா குருபரா எனும் வரோதய
புராதன முராரி மருகன்
விளக்கம் : திரிபுர சம்ஹாரியின் திருப்புதல்வன் #சிவகுருநாதன், நித்திய யெளவனன்-- என்று உளம் உருகும் அடியாருக்காக, இரக்கத்தால் கசிந்து, வேண்டுகின்ற வரம் அளிப்பவன். மும்மூர்த்திகளில் முரன் என்னும் அசுரனை வதைத்துக் காக்கும் கடவுளாய் பெருமை கொண்டிருக்கும் #திருமால் மருகன்.
🌷பலாசன புலோமசை சலாமிடு
வலாரி புகலாகும் அயிலாயுதன்
விளக்கம் : இனிய கனிகளைப் புசித்துப் பசியாறும் அழகிய இந்திராணி போற்றி வணங்கும் முருகன்; இந்திரன் சரணாகதி செய்த வேலாயுதக் கடவுள்;
🌷தராதல கிராதர்கள் குல ஆதவ அபிராம வல
சாதனன் விநோத சமரன்
விளக்கம் : நீண்ட மலைத்தொடர்களை வாசஸ்தலமாகக் கொண்ட வேடுவர்களின் கடவுளாய், அவர்கள் மாப்பிள்ளையும் ஆகி விட்ட அழகன், வள்ளி மணாளான். தினைப்புனத்தில் வேடன், வேலன், விருத்தன் என்ற திருவிளையாடல்கள் நிகழ்த்தியவன்.
🌷தடாரி விகடாசுரன் குடாரி இதபடா திகழ்
ஷடாநநன் நடாவு மயிலே
விளக்கம் : அப்படி அன்பர்களுடனும், அடியார்களுடனும், விளையாடுபவன் தான் அன்று, க்ரௌஞ்சம் தூள் தூளாக்கியவன், சூரபன்மன் குடலைக் கோடரி போல் பிளந்தவன். பக்தர்களுக்கு பன்னிரு கையனாய், பன்னிரு விழி அழகனாய் கருணை புரிபவன். அவன் நடத்துகின்ற ஏறுமயிலே! அவன் சங்கல்பத்துக்கு ஏற்ப அருள் மயமாய், ஆனந்த மயமாய், உலவுகின்ற உன்னதமான மயிலே! சரணம் சரணம்.
🌷 #ஓம்_முருகா
🌷 #ஓம்_சரவணபவ
🌷 #ஓம்_சரவணஜோதியே_நமோ_நம
🌷 #ஓம்_சுப்பிரமணியர்_திருவடிகள்_போற்றி
🌷 #ஓம்_அகத்தியர்_திருவடிகள்_போற்றி
🌷 #ஓம்_அருணகிரிநாதர்_திருவடிகள்_போற்றி
🌷 #ஓம்_வள்ளலார்_திருவடிகள்_போற்றி
🌷 #ஓம்_ஆறுமுக_அரங்கர்_திருவடிகள்_போற்றி
🌷 மேற்கண்ட #நாமங்களை தினமும் காலை மாலை #பூஜித்து வந்தால் எல்லா நலமும் வளமும் கிடைக்கும்
🌷FaceBook
https://www.facebook.com/arangar.yugam
🌷youtube:
https://www.youtube.com/c/MurugaYugamArumugaArangar
🌷Instagram
https://www.instagram.com/murugayugam