N அசோக் குமார்

N அசோக் குமார் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from N அசோக் குமார், Thanjavur.

நமது அண்ணன் திரு N அசோக்குமார் அவர்களின் மாபெரும் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தா அனைவருக்கும் நன்றி. இனி நமது பேராவூரணியி...
02/05/2021

நமது அண்ணன் திரு N அசோக்குமார் அவர்களின் மாபெரும் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தா அனைவருக்கும் நன்றி. இனி நமது பேராவூரணியின் வளர்ச்சியை நோக்கி நமது பயணம்.

04/04/2021

N. Ashok Kumar ஆகிய நான்
பேராவூரணி மக்களின் மீது ஆணையாக வெளியிடும்
21-ம் நாள்
பேராவூரணி மின்சாரம் மற்றும் குடிசைகள் நல மேம்பாட்டு நலத்திட்டங்கள்

தெருவிளக்கு, மின்கம்பங்கள் சார்ந்த உயர் மின் அழுத்த ஒயர்கள் தாழ்வாக இருக்கும் இடங்களில் சீர் செய்யும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்

உயர் மின் அழுத்த ஒயர்களுக்கு இடையூராக உள்ள மரக்கிளைகள் அகற்றப்படும்

தெருவிளக்கு முறையாக எரிவதற்கான அனைத்து நடவடிக்கைககளும் எடுக்கப்படும்

பேராவூரணி குடுசைகளற்ற தொகுதியாக மாற்றி அமைக்கப்படும்

பழுதடைந்த குடிசை வீடுகளை சீர் செய்து தருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்

இங்ஙனம் பேராவூரணியின் மின்சாரம் மற்றும் குடிசைகள் நலனை மேம்படுத்த உறுதி பூணும் உங்கள்
பேராவூரணி மக்களின் பெருந்தொண்டான்!!
ோக்குமார் #பேராவூரணி #21நாள் #வாக்குறுதிகள்
Disclaimer: We don't have copyrights for this audio. Music used is purely for the entertainment purpose.

01/04/2021

N. Ashok Kumar ஆகிய நான்
பேராவூரணி மக்களின் மீது ஆணையாக வெளியிடும்
18-ம் நாள்

பேராவூரணி பாதாள சாக்கடை மேம்பாட்டுத் திட்டம்

பேராவூரணி பேரூராட்சி முழுவதும் பாதாள சாக்கடை அமைப்பு சீர்செய்யப்படும்.

பாதாள சாக்கடை அமைப்பு தனிநபர் மனித கழிவுகளை அகற்றுவதற்கான முக்கிய வழிமுறையாகும்.

பாதாள சாக்கடை குழாய்கள் சீரமைப்பட்டு, பேரூராட்சியின் அனைத்து பகுதிகளிலும் இருந்து கழிவு நீர் சேகரிக்கப்படும்.

அதனை பிரதான கழிவுநீர் நீருந்து நிலையம் மூலமாக கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு சுத்திகரிப்பு செய்யப்படும்.

பின்னர் ஊரின் வெளியிலுள்ள மூன்று கடல்களில் முறையான அமைப்புடன் கலக்க விடப்படும்.

இங்ஙனம்
பேராவூரணி பாதாள சாக்கடைகளை சீரமைக்க உறுதி பூணும் உங்கள்
பேராவூரணி மக்களின் பெருந்தொண்டான்!!
ோக்குமார் #பேராவூரணி #21நாள் #வாக்குறுதிகள்
Disclaimer: We don't have copyrights for this audio. Music used is purely for the entertainment purpose.

31/03/2021

N. Ashok Kumar ஆகிய நான்
பேராவூரணி மக்களின் மீது ஆணையாக வெளியிடும்
17-ம் நாள்
பேராவூரணி குளங்கள் சீரமைப்பு நலத்திட்டங்கள்
பேராவூரணியின் அனைத்து குளத்தின் கரைகளும் மேம்படுத்தப்படும்.
குளக்கரைகளில் செடிகள் நடப்பட்டு முறையான வகையில் பராமரிக்கப்படும்.
மழை காலங்களில் குளத்தின் கரைகள் உடையாமல் இருப்பதற்கேற்றாற்போல வெட்டிவேர் நடப்படும்.
தொகுதி முழுவதும் ஏதுவான இடங்களில் குறுங்காடுகள் அமைக்கப்படும்.
குறுங்காடுகள் மூலம் கடந்து செல்லும் மேகங்களை மழையாக மாற்றி பேராவூரணியின் நீர்வளம் பேணப்படும்.
இங்ஙனம்
குளங்களை மீட்டெடுக்க
உறுதி பூணும் உங்கள்
பேராவூரணி மக்களின் பெருந்தொண்டான்!!
ோக்குமார் #பேராவூரணி #21நாள் #வாக்குறுதிகள்
Disclaimer: We don't have copyrights for this audio. Music used is purely for the entertainment purpose.

30/03/2021

N. Ashok Kumar ஆகிய நான்
பேராவூரணி மக்களின் மீது ஆணையாக வெளியிடும்
16-ம் நாள்
பேராவூரணியை நகராட்சியாக மேம்படுத்தும் திட்டங்கள்
பேராவூரணியை முழு கட்டமைப்புடன் கூடிய நகராட்சியாக மாற்றுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும்
பெருமகளூர் தனி தாலுகாவாக செயல்பட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும்
திருச்சிற்றம்பலம் தனி தாலுகாவாக செயல்பட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும்
பேராவூரணியில் நீதிமன்றம் உடனடியாக அமைத்து தரப்படும்
பேராவூரணி நகராட்சி சார்ந்த அரசு அலுவலகங்கள் அனைத்தும் பேராவூரணியில் திறம்பட இயங்க வழிவகை செய்யப்படும்
பெருமகளூர் மற்றும் திருச்சிற்றம்பலம் தாலுகா சார்ந்த அரசு மற்றும் இதர அலுவலகங்கள் தாலுகாவிற்குள்ளேயே மக்களின் வசதிக்கேற்ப இயங்க வழி செய்யப்படும்
இங்ஙனம்
பேராவூரணியை நகராட்சியாக மேம்படுத்த
உறுதி பூணும் உங்கள்
பேராவூரணி மக்களின் பெருந்தொண்டான்!!
ோக்குமார் #பேராவூரணி #21நாள் #வாக்குறுதிகள்
Disclaimer: We don't have copyrights for this audio. Music used is purely for the entertainment purpose.

29/03/2021

N. Ashok Kumar ஆகிய நான்
பேராவூரணி மக்களின் மீது ஆணையாக வெளியிடும்
15-ம் நாள்
பேராவூரணி மருத்துவமனை மேம்பாட்டு திட்டங்கள்

செருவாவிடுதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி அரசு மருத்துவமனையாக மேம்படுத்தப்படும்

திருவோணம் ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி 24மணி நேர அரசு மருத்துவமனையாக மேம்படுத்தப்படும்

அரசு மருத்துவமனை மேம்படுத்தி விரிவாக்கம் செய்து ஸ்கேன் வசதி, டயாலிசிஸ் வசதி விபத்து & அறுவை சிகிச்சை வசதி செய்து தரப்படும்

அரசு மருத்துவமனைக்கு கூடுதலான மருத்துவர்கள் நியமனம் செய்து தரப்படும்

இங்ஙனம்
பேராவூரணியின் மருத்துவமனைகளை சீரமைக்க
உறுதி பூணும் உங்கள்
பேராவூரணி மக்களின் பெருந்தொண்டான்!!
ோக்குமார் #பேராவூரணி #21நாள் #வாக்குறுதிகள்
Disclaimer: We don't have copyrights for this audio. Music used is purely for the entertainment purpose.

Address

Thanjavur

Alerts

Be the first to know and let us send you an email when N அசோக் குமார் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share