We The Leaders - Tamilnadu Zone

We The Leaders - Tamilnadu Zone LEAD THE CHANGE

15/07/2026
இன்றைய தினம், K. செட்டிபாளையம் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில், பெருந்தலைவர் காமராஜர் பிறந்தந...
15/07/2026

இன்றைய தினம், K. செட்டிபாளையம் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில், பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் மற்றும் கல்வி வளர்ச்சி நாள் விழாவில் மாணவர்களுடன் கலந்து கொண்டு உரையாற்றும் வாய்ப்பு கிடைத்தது பெருமையாகும்.

கர்மவீரர் காமராஜர் அவர்கள் விதைத்த கல்விப் புரட்சியின் விதைகள் இன்றும் ஒவ்வொரு மாணவரின் கனவுகளிலும் வளர்ந்து கொண்டிருக்கின்றன. அறிவும், ஒழுக்கமும், சமூகப் பொறுப்புணர்வும் கொண்ட தலைமுறையை உருவாக்கும் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்களின் மேலான பணிகளுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாணவ, மாணவியர் அனைவரின் கல்விப் பயணம், உயர்ந்த இலக்குகளை எட்டட்டும். நாட்டிற்கும் சமூகத்திற்கும் பெருமை சேர்க்கும் சிறந்த குடிமக்களாக திகழ, அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்.

கல்வி நிறுவனங்கள், கோவில்கள் மற்றும் பேருந்து நிலையங்களிலிருந்து 500 மீட்டர் சுற்றளவிற்குள் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடை...
15/07/2026

கல்வி நிறுவனங்கள், கோவில்கள் மற்றும் பேருந்து நிலையங்களிலிருந்து 500 மீட்டர் சுற்றளவிற்குள் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதாக தமிழக அரசு அறிவித்திருந்தது, சென்னையில் நாம் மேற்கொண்ட கள ஆய்வில், 500 மீட்டருக்குள் உள்ள பல டாஸ்மாக் கடைகள் இன்னும் இயங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தின் தலைநகரிலேயே இந்த நிலை நீடித்து வருகிறதென்றால், பிற மாவட்டங்களிலும் இதுபோன்ற நிலைமை இருக்கக்கூடும் என்பது கவனத்திற்குரியதாகும்.

உங்கள் பகுதியிலும் கல்வி நிறுவனங்கள், கோவில்கள், அல்லது பேருந்து நிலையங்களில் இருந்து 500 மீட்டர் தூரத்திற்குள் இயங்கும் டாஸ்மாக் கடைகள் இருந்தால், அதற்கு முன் நின்று Selfie வீடியோ எடுத்து, அருகிலுள்ள கல்வி நிறுவனம், கோவில் அல்லது பேருந்து நிலையத்தையும் Selfie வீடியோவாகப் பதிவு செய்து, இரண்டிற்கும் இடையேயான தூரம் மற்றும் தகவல்களைத் தெளிவாக குறிப்பிட்டு Reel ஆக பதிவு செய்து, பின்வரும் Google sheet-ல் விவரங்களை பதிவு செய்து எங்களுடன் இணையுங்கள்.

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSde3SMQp_9PaVqTnMSeO7MemxrZim1A1Hh_Fh3b7tP2ZvuodA/viewform?usp=publish-editor

12/07/2026

நமது நோக்கம்:

1. மெய்யான சமூகநீதி
2. நிலையான வளர்ச்சி
3. வேளாண்மை எழுச்சி
4. பண்பாட்டு மீட்சி
5. அரசியல் புரட்சி

~ தலைவர் 😍🔥😍🔥

12/07/2026

சாதி,மதங்களை கடந்து ஒரு தமிழனாக ஒரு இந்தியனாக அரசியல் செய்வோம் 🔥

l

12/07/2026

இன்று பொள்ளாச்சியில் நடைபெற்ற மாநாட்டில் நான் பார்த்து வியந்தது...

அரங்கிற்குள் மக்கள் வெள்ளம்...
அரங்கிற்கு வெளியேயும் மக்கள் வெள்ளம்...

எங்கு பார்த்தாலும் எழுச்சி, உற்சாகம், மாற்றத்தை விரும்பும் மக்களின் முகங்கள். மக்கள் தலைவர் அவர்கள் மீது நம்பிக்கை கொண்டு ஆயிரக்கணக்கான மக்கள் தன்னார்வமாக ஒன்று கூடி, "போதை இல்லா தமிழகம்" என்ற உயர்ந்த இலக்கிற்காக குரல் கொடுத்தது மனதை நெகிழ வைத்தது.

மாறுவோம்... மாற்றுவோம்...

போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவோம்! 💪🏻

பொள்ளாச்சியில் இன்று நடைபெற்ற போதை விழிப்புணர்வு மாநாட்டில் பெருந்திரளாக வந்து பங்கேற்ற என் அன்பு சொந்தங்கள் அனைவருக்கும...
12/07/2026

பொள்ளாச்சியில் இன்று நடைபெற்ற போதை விழிப்புணர்வு மாநாட்டில் பெருந்திரளாக வந்து பங்கேற்ற என் அன்பு சொந்தங்கள் அனைவருக்கும் நெஞ்சாரந்த நன்றிகள்.

இந்த எழுச்சி, ஒரு புதிய வரலாற்றின் தொடக்கம்!

மாறுவோம், மாற்றுவோம்!

Address

Tirunelveli

Website

Alerts

Be the first to know and let us send you an email when We The Leaders - Tamilnadu Zone posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share