14/07/2026
💧 தட்டுப்பாடு இல்லாத குடிநீர் வசதி எப்போது?
மேலப்பாளைய மக்களுக்கு அடிப்படை தேவையான குடிநீர் வசதியைக்கூட போராடித்தான் பெறவேண்டுமா?
"ஒவ்வொரு தெருவிற்கும் தங்குதடையில்லாத சுத்தமான குடிநீர் எப்போதுதான் சாத்தியம்?"
மேலப்பாளையத்தில் ஒவ்வொரு தெருக்களிலும் தினம்தினம் குடிநீர் தட்டுப்பாட்டாலும், சுகாதாரமற்ற அசுத்தமான குடிநீராலும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
திருநெல்வேலி மாநகராட்சி – மேலப்பாளையம் மண்டல நிர்வாகம் உடனடியாக:
✅ அனைத்து தெருக்களிலும் தினசரி, தங்குதடையின்றி சுத்தமான குடிநீர் வழங்கிட வேண்டும்.
✅ பழுதடைந்த குடிநீர் குழாய்களை உடனடியாக சரிசெய்து கசிவு ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும்.
✅ கழிவுநீர் மற்றும் குடிநீர் கலக்கும் அபாயத்தை முழுமையாக தடுக்க வேண்டும்.
✅ நீர்த்தேக்கத் தொட்டிகளை முறையாக சுத்தம் செய்து, கிருமிநாசினி தெளித்து பராமரிக்க வேண்டும்.
✅ குடிநீரின் தரத்தை தினந்தோறும் ஆய்வு செய்து, அதன் அறிக்கையை பொதுமக்களுக்கு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
✅ குடிநீர் தொடர்பான புகார்களுக்கு 24 மணி நேர அவசர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தூய்மையான குடிநீர் என்பது ஆடம்பரம் அல்ல...
ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை!
"அசுத்தமான குடிநீர் நோய்களை உருவாக்கும்...
சுத்தமான குடிநீர் ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கும்!"
மேலப்பாளையம் மக்களின் நலனுக்காக
Voice of Melapalayam